Published:Updated:

பூட்டிய வீட்டின் முன்னால் சத்தம் போடுகிறார்கள்..?! அதிர வைக்கும் ட்விட்டர் BOTS

பூட்டிய வீட்டின் முன்னால் சத்தம் போடுகிறார்கள்..?! அதிர வைக்கும் ட்விட்டர் BOTS
பூட்டிய வீட்டின் முன்னால் சத்தம் போடுகிறார்கள்..?! அதிர வைக்கும் ட்விட்டர் BOTS

பூட்டிய வீட்டின் முன்னால் சத்தம் போடுகிறார்கள்..?! அதிர வைக்கும் ட்விட்டர் BOTS

ட்விட்டர்.....!! பேஸ்புக்கை போல் இன்னொரு சமூக வலைதளம்தான் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ட்விட்டர் அக்கவுண்ட் இல்லை என்று அடித்து கூற முடியும். ட்விட்டர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும் ட்விட்டர் என்பது போர்க்களம் என்று...இங்கு வார்த்தைகளை பயன்படுத்தும் கலை தெரியாமலும்..எதிரிப்படையின் பலம் தெரியாமலும் யாரேனும் களமாட முடிவு செய்தால் அவ்வளவுதான். உங்கள் அக்கவுண்ட் தோரணம் கட்டி தொங்கவிடப்படும்...

தமிழ் சினிமா வரலாற்றில் டூரிங்டாக்கீஸ் காலம் முதல் மல்டிபிளக்ஸ்காலம் வரை..எம்ஜிஆர் சிவாஜி..ரஜினி,கமல் ...அஜித்,விஜய்...என்று இருதுருவ ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள் அந்த காலத்தில் அவரவர் படம் வெளியாகும் போது சண்டை போடுவார்கள். பிறகு வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள்...ஆனால் இந்தக்காலத்தில் ட்விட்டரில் சண்டை போடுவதையே ஒரு வேலையாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

தெற்கில் அஜித்,விஜய் என்றால் வடக்கில் சல்மான்கான்,ஷாருக்கான் என்று  பெயரும் ,இடமும் தான் மாறுமே தவிர களம் ஒன்றுதான்..உலகப்போரை கூட சமாதான பேச்சின் மூலமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் ஆனால் ரசிகர்களுக்குள் ட்விட்டரில் ஏற்படும் போரை யாராலும் சமாதானப்படுத்த முடியாது அவர்களாகவே அமைதியானால்தான் உண்டு....தலயோ தளபதியோ அவர்களே தலையிட்டு இந்த சண்டைகள் வேண்டாம் என்று கூறினாலும் கேட்க தயாராக இருக்கமாட்டார்கள் அவர்களின் ரசிகர்கள்....அதையும் மீறி யாராவது சமாதானம் பேசினால் சொல்லி வைத்தமாதிரி இரண்டு குரூப்களும் ஒன்று சேர்ந்து அந்த சமாதான புறாவை வறுத்தெடுப்பார்கள். இப்படி அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங்கில் வைத்திருப்பார்கள்.

ரசிகர்கள்தான் இப்படியென்றால் அண்மையில் இந்தியாவின் இரண்டு இணையதள வர்த்தக நிறுவனங்களின் சி.இ.ஓ க்கள் வெளிப்படையாக ட்விட்டரில் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர்.. இதைப்போல இரண்டு நாடுகளுக்கு இடையே,இரண்டு தலைவர்களுக்கு இரண்டு விளையாட்டு அணிகளுக்கு, இடையே என உலகம் முழுவதும் இதே நிலைமைதான்.

இப்போ எதுக்கு இதெல்லாம்னு கேட்டா, மேட்டர் இருக்கு பாஸ்..இப்படி ட்வீட்டை ரீட்வீட் செய்யவும்,லைக் போடவும், ரிப்ளை செய்யவும்,ட்ரெண்டிங்கில் வைத்திருக்கவும் பெரும்பாலும் ட்விட்டர் பாட் எனப்படும் ப்ரோகிராம்கள் அதிகளவில் பயன்படுகின்றன என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தேவையில்லைத ட்வீட்களையும் தனிநபர்களுக்கு வரும் சம்பந்தமில்லாத மெசேஜ்களையும் தொடர்ச்சியாக ஆராய்ந்ததில் இந்த ட்விட்டர் பாட்களின் நெட்வொர்கை கண்டு வியந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த அளவில் இதன் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த ட்விட்டர் பாட்கள், ஸ்பேம்கள் எனப்படும் தேவையில்லாத தகவல்களை பரப்பவும், மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பவுமே அதிகமாக பயன்படுகின்றன

இப்படி செய்வதற்காகவே 350,000 மேற்பட்ட புரோகிராம் செய்யப்பட்ட தனிநபர் அக்கவுண்ட்களும் குரூப்களும் செயல்படுகின்றன என்பதையும், இது குறைந்த அளவே என்றும், இன்னும் எத்தனை ட்விட்டர் அக்கவுண்ட்கள் இப்படி பாட்களாக செயல்படுகின்றன என்பதை முழுமையாக கண்டறிந்தால் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மொத்த ட்விட்டரில் 8.5% அக்கவுண்ட்கள் பாட்கள் எனவும் ஒரு ரிப்போர்ட் சொல்கிறது. 

ஃபேஸ்ப்புக்கிற்கு அடுத்தபடியாக உலகளாவிய அளவில் 317 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள ட்விட்டரில் உள்ள இந்த குறைபாட்டை நீக்குவது கடினமான ஒன்று என அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகவே ட்விட்டர்வாசிகளே,ரசிகப்பெருமக்களே உங்களுக்கு எதிராக யாராவது ட்வீட் செய்தால் அது ட்விட்டர் பாட்களின் வேலையாகவும் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் ..மேலும் உங்கள் தல தளபதியை திட்டிவிட்டான் என்பதற்காக  பதிலுக்கு நீங்கள் திட்டுவது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமாக கூட இருக்கலாம் என்பதையும் யோசித்து பாருங்கள். இதுக்கு மேலயும் சண்டைதான் போடுவோம்னா அப்புறம் உங்க இஷ்டம் பாஸ்...இது ட்விட்டர் அக்கவுண்ட் இருக்குறவங்களுக்கு, இனிமேல்தான் அக்கவுண்ட ஓப்பன் பண்ண போறீங்கனா பாத்து போங்க. ஏன்னா அது ரத்த பூமி......

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

அடுத்த கட்டுரைக்கு