Published:Updated:

இந்த அறைக்குள் சென்றால் இதயத்துடிப்பை கேட்கலாம் #OculusVR

இந்த அறைக்குள் சென்றால் இதயத்துடிப்பை கேட்கலாம் #OculusVR
இந்த அறைக்குள் சென்றால் இதயத்துடிப்பை கேட்கலாம் #OculusVR

இந்த அறைக்குள் சென்றால் இதயத்துடிப்பை கேட்கலாம் #OculusVR

ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டால் போதும். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து கீழே உங்களால் சறுக்கி விளையாட முடியும், தோனியுடன் ஹெலிகாப்டர் ஷாட் ஆட முடியும். ஸ்பைடர் மேனுடன் வலைபின்ன முடியும். இப்படியெல்லாம் இன்னும் சில காலத்தில் யாராவது உங்களிடம் சொல்லி ஒரு கண்ணாடியை விற்றால் நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு தயாரிப்பைத்தான் ஃபேஸ்புக் நிறுவனம் தயார் செய்து வருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி தான் எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம் என்பதற்காக அக்குலஸ்(oculus) என்ற நிறுவனத்தை வாங்கி விர்ச்சுவல் ரியாலிட்டியில் கவனம் செலுத்துகிறது ஃபேஸ்புக்.

வாஷிங்டனில் உள்ள அக்குலஸ் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்ட ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துந்துள்ளார். இந்த ஆராய்ச்சி மையத்தில் உலகிலேயே சிறந்த அறிவியலாளர்களும், பொறியாளர்களும் விர்ச்சுவல் மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டியை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மைக்கேல் அப்ரஷ் என்பவரது தலைமையில் இயங்கும் இந்த குழு உலகின் அட்வான்ஸ்டு கண்ணாடி லென்சுகள், பார்வையை ட்ராக் செய்வது, மனித உடல் அசைவுகளை வித்தியாசமான முறையில் மேப் செய்வது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அக்குலஸின் கனவு உலகில் எல்லா விஷயங்களையும் கையில் எடுத்து செல்லக்கூடிய அளவு கொண்ட கருவியில் விர்ச்சுவலாக அனுபவிக்க செய்வது தான் என கூறியுள்ளார். மேலும் இந்த அக்குலஸ் ரிஃப்ட்(oculus rift) தயாரிப்பு தயாராகிவிட்டதாகவும் இதனை வாங்கி வித்தியாசமான அனுபவத்தைப் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதோடு அவர் சில புகைப்படங்களையும் வெளியிட்டு அது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களையும் தந்துள்ளார்.

விர்ச்சுவல் மற்றும் ஆக்குமெண்டட் ரியாலிட்டியில் கைகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அக்குலஸ், கையில் க்ளவுஸ்களை அணிந்து கொண்டு விர்ச்சுவலாக  வரையலாம், கீபோர்டில் டைப் செய்யலாம், ஏன் ஸ்பைடர் மேன் போல வலைபின்னலாம் என்று ஸ்பைடர் மேன் போல விரல்களை நீட்டுகிறார் மார்க்.

இது தான் அக்குலஸின் எக்கோ-ஃப்ரீ சேம்பர். இதனை சத்தங்கள் தொடர்பான சோதனை செய்ய நிறுவியுள்ளது அக்குலஸ், இது கட்டி முடிக்கப்பட்டால் உலகின் அமைதியான இடங்களில் இதுவும் ஒன்றாகிவிடுமாம். இதில் நமது இதயத்துடிப்பின் சத்தத்தை நம்மால் கேட்க முடியும் என்கிற அளவுக்கு அமைதியாக இருக்குமாம்.

சிறிய பொருட்களை தயாரிக்கும் போது அந்த இடத்தில் மாசு இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த அறை 1000 மடங்கு சிறிய தூசியைக்கூட (1000X) ஃபில்டர் செய்துவிடும் என்கிறார் மார்க்.

விர்ச்சுவல் மற்றும் அக்குமெண்டட் ரியாலிட்டிக்கான லென்சுகளை தயாரிக்கிறது அக்குலஸ், இதில் மெட்டல்களை தரமான டைமண்ட் கட்டிங் மூலம் வடிவமைக்கிறது. இதனைச் செய்ய 5 ஆக்ஸிஸ் சி.என்.சி இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது.

விர்ச்சுவல் ரியாலிட்டி தான் உலகை ஆச்சரியப்படுத்தும் அடுத்த டெக்னாலஜி என்பதை நன்கு அறிந்த ஃபேஸ்புக் அக்குலஸ் மூலம் தன்னை இந்தத் துறையில் முன்னிலைப்படுத்தி வருகிறது. இது இருந்தால் போதும் உலகின் எந்த மூலையையும் சர்வசாதாரணமாக கண்ணாடியை அணிந்து உணர முடியும். அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டாலும் நீங்கள் வெள்ளை மாளிகை பூங்காவில் விர்ச்சுவலாக  ஓடி விளையாடலாம் என்று கூறினாலும் கூறுவார் மார்க்.

ச.ஸ்ரீராம்

அடுத்த கட்டுரைக்கு