Published:Updated:

”ரோபோக்களுக்கும் வருமான வரி வேண்டும்!” என்கிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
”ரோபோக்களுக்கும் வருமான வரி வேண்டும்!” என்கிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர்
”ரோபோக்களுக்கும் வருமான வரி வேண்டும்!” என்கிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர்

”ரோபோக்களுக்கும் வருமான வரி வேண்டும்!” என்கிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர்

”மனிதனுக்கு மாற்றாகத்தானே ரோபோ வருது. அப்ப அதுக்கிட்டயும் வரி கட்ட சொல்லுங்க” - இப்படி சொல்லி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில் கேட்ஸிடம் இருந்து இப்படி ஒரு விஷயம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ரோபோக்களின் அடிப்படையான ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தில் மைக்ரோசாஃப்ட் ஒரு முக்கியமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் தான் இதை சொல்லியிருக்கிறார் பில்.

”50000 டாலருக்கு உழைக்கும் ஒரு மனிதன், தனது சம்பாத்தியத்தில் கணிசமான அளவு வருமான வரி கட்டுகிறான். அது தவிர சேவை வரி போல ஏகப்பட்ட வரிகளை கட்ட வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் ஆட்டோமேஷன் தொடர்பான அனைத்துக்கும் இந்த வரிகள் வேண்டும் தானே?. ரோபோக்களை பயன்படுத்தும் நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும்” என்கிறார் பில் கேட்ஸ்.

புதுமையான கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தர வேண்டும். மாறாக பயத்தை கொடுத்தால் அது தவறு. அப்படி நடக்குமென்றால் அந்த கண்டுபிடிப்பின் முழுமையான பலன்களை நாம் காண முடியாது. அதனால், ஆட்டோமேஷனை முற்றிலுமாக நிராகரிக்காமல் வரிகள் விதிப்பதன் மூலம் அதை சரி செய்யலாம் என்பது விண்டோஸ் வித்தகரின் ஐடியா.அனைத்து அரசுகளும் இது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார் பில் கேட்ஸ்.

ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றம் ரோபோக்கள் மீது வரிகள் என்ற ஐடியாவை நிராகரித்திருக்கிறது. மாறாக, மனிதர்கள் செய்யும் வேலைகளில் ரோபோக்களை ஈடுபடுத்த, நிறைய வரையறைகளை உருவாக்கலாம் என்கிறார்கள். 

அடுத்த 9 வருடங்களில் இந்தியாவில் 20 கோடி இளைஞர்கள் ரோபோக்களின் வருகையால் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று சில காலத்துக்கு முன் எச்சரிக்கை விடுத்தார், தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான டி.வி.மோகன்தாஸ்.

”2025-ம் ஆண்டில் 21 முதல் 41 வயது வரையிலான 20 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பார்கள். உலகில் அதிக அளவில் இளைஞர்களைக்கொண்டுள்ள இந்தியாவுக்கு, இது மிகவும் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். ஆனால், இவ்வளவு பெரிய வேலைவாய்ப்பு  இழப்பை சமாளிக்கும் அளவுக்கு மாற்று வழிகள் இந்திய அரசிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார் மோகன்தாஸ்.

நம் அன்றாட வாழ்விலும் மற்ற துறைகளிலும் இயந்திரங்களின் இருப்பைப் பரிசீலனை செய்வதற்கான காலம் இது. இதன் பாதிப்பு பற்றி புரியாதவர்களுக்கு, புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் கூற்று ஒன்று அதை விளக்கக்கூடும், "இயந்திரங்கள் இன்னும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறவில்லை. அப்படிப் பெற்றுவிட்டால், அதுதான் மனித அழிவிற்குத் தொடக்கப்புள்ளி." 

ரோபோக்கள் பற்றிய சட்டங்கள், ரோபோக்களினால் வேலை இழக்கும் மனிதர்கள், ரோபோக்களினால் உருவாகும் ஆபத்துகள் ஆகியவற்றை பற்றி இப்போதே பேசி தீர்க்க வேண்டியது அவசியமாகிறது. உலகம் முழுவதுமே ரோபோக்களை மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் காலம் விரைவில் வரப்போகிறது என்பதுதான் நிதர்சனம். தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரே பல நூறு கோடி ரூபாய் புராஜெக்ட்டை சமாளிக்க ரோபோவைதான் நம்பியிருக்கிறார்.

-கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு