Published:Updated:

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை “ஆவ்ஸம்” மொபைல் ஆக்கலாமா?! #MyAndroid

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை “ஆவ்ஸம்” மொபைல் ஆக்கலாமா?! #MyAndroid

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை “ஆவ்ஸம்” மொபைல் ஆக்கலாமா?! #MyAndroid

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை “ஆவ்ஸம்” மொபைல் ஆக்கலாமா?! #MyAndroid

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை “ஆவ்ஸம்” மொபைல் ஆக்கலாமா?! #MyAndroid

Published:Updated:
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை “ஆவ்ஸம்” மொபைல் ஆக்கலாமா?! #MyAndroid

ண்ட்ராய்டு மொபைலின் மிகப்பெரிய சிறப்பே பயனாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும் என்பது தான். ஆனால் புதிதாக மொபைல் வாங்கிய சிலர், அதன் மேல் ஒட்டப்பட்ட பாலித்தீன் கவரைக்கூட கிழிக்காமல் வைத்திருப்பார்கள். மொபைல் வாங்கியபோது எப்படி இருந்ததோ அதைப்போலவே சின்ன மாற்றம் கூட செய்யாமல் மொபைலை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் ஐகான், தீம், வால்பேப்பர் என அத்தனையிலும் மாற்றங்களைச் செய்து புதுப்பொலிவுடன் பயன்படுத்துவார்கள். இந்த இரு துருவங்களையும் இணைக்கும் புள்ளியாக 'மை ஆண்ட்ராய்டு டேஸ்ட் டெஸ்ட்' என்ற புதிய டூலை ஆண்ட்ராய்டு அறிமுகம் செய்திருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் மத்தியில் இப்போது இந்த டேஸ்ட் டெஸ்ட் பிரபலமாகி வருகிறது.

நண்பர்கள் கூட்டமாக லன்ச் சாப்பிட, அனைத்து உணவுகளும் கிடைக்கும் உணவகத்துக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். மெனு கார்டு பார்த்து ஒரு சிலர் காரசாரமான பிரியாணி ஆர்டர் செய்வார்கள். காரம் கொஞ்சம்கூட பிடிக்காது என்பவர்கள் பட்டர் நாண் வாங்கி விருப்பம்போல் லன்சை முடிப்பார்கள். சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் இறுதியாக ஐஸ்க்ரீம் அல்லது ஸ்வீட் இருந்தால் தான் சாப்பிட்ட திருப்தியே வரும். இதைப் போலதான்  'மை ஆண்ட்ராய்டு டேஸ்ட் டெஸ்ட்' மூலம் பயனாளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.

மொபைல் உற்பத்தியாளர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்ட மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் பின், ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான நகரங்களில் 'டேஸ்ட் டெஸ்ட்' மூலமாகத் தனது பயனாளர்களைக் கவர்ந்து வருகிறது ஆண்ட்ராய்டு. இந்த டெஸ்ட்டில் பயனாளர்களிடம் மொத்தம் 22 கேள்விகள் அடுத்தடுத்து கேட்கப்படுகிறது. உதாரணமாக உங்களுக்கு மோனோகிராம் எனப்படும் ஒரேயொரு வண்ணம் மட்டும் பிடிக்குமா அல்லது பல வண்ணங்கள் கலந்த கலவைதான் பிடிக்குமா என முதல் கேள்வி கேட்கப்படுகிறது. நமக்கு எது விருப்பமோ அதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்படி மொத்தம் 22 கேள்விகளுக்கும் நமது விருப்பத்தைத் தேர்வு செய்தால் இறுதியில், நமது தேர்வின் அடிப்படையில் ரசனைக்கேற்ப மூன்று விதமான வால்பேப்பர், ஐகான்கள் மற்றும் தீம் அடங்கிய பேக்கை ஆண்ட்ராய்டு பரிந்துரைக்கிறது. அதில் ஒன்றை செலக்ட் செய்து கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனைத் தட்டி ஐகான் பேக், லாஞ்சர் போன்றவற்றை டவுன்லோடு செய்து நிறுவினால், உங்கள் ரசனைக்கேற்றபடி மொபைல் புதுப்பொலிவாகிவிடுகிறது. பயனாளர்களுக்கு எண்ணற்ற வசதிகளை அள்ளித்தரும் ஆண்ட்ராய்டு இந்த டெஸ்ட் மூலமாக அவர்களது வேலையை எளிதாக்கியிருக்கிறது. இதுவரை இந்த டெஸ்ட்டில் கலந்துகொண்டு மொபைலின் தோற்றத்தை மாற்றிய பயனாளர்கள், அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததில் #MyAndroid ஹேஷ்டேக் பல நாடுகளில் ட்ரெண்ட் அடித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இந்த டெஸ்ட்டின் இறுதியில் கூகுளின் 'ஜிபோர்டு (G-Board)' எனப்படும் புதிய கீபோர்டு அப்ளிகேஷன் பரிந்துரைக்கப்படுகிறது. வழக்கமான கீபோர்டை விட இதில் ஏராளமான வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள். இந்த கீபோர்டில் கூகுள் சர்ச் ஐகான் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாட் செய்துகொண்டிருக்கும் போதே இந்த ஐகானை க்ளிக் செய்து நாம் தேவையான தகவலைத் தேடி அதை அப்படியே அனுப்ப முடியும். சாட் செய்யும்போது பொருத்தமான ஸ்மைலி அனுப்ப, அது எங்கிருக்கிறது என ஒவ்வொரு ஐகானாகத் தேடி இறுதியில் செலக்ட் செய்து அனுப்புவோம். ஆனால் இந்த ஜிபோர்டில், ஸ்மைலியைக் கூட எளிதில் சர்ச் செய்து கொள்ளலாம். உதாரணமாக Clap என டைப் செய்தால், கை தட்டும் ஸ்மைலியையும், சினிமாவில் பயன்படுத்தப்படும் க்ளாப் ஸ்மைலியையும் நமக்காகத் தேடிப் பரிந்துரைக்கிறது ஜிபோர்டு. வாய்ஸ் டைப்பிங், கூகுள் ட்ரான்ஸ்லேட், GIF எனப்படும் அசைபடங்கள் போன்றவையும் இந்த ஜிபோர்டு அப்ளிகேஷனில் அடக்கம். மேலும், இந்த ஜிபோர்டில் பல விதமான தீம்களையும் மாற்றிக்கொள்ள முடிகிறது. ஜிபோர்டு அப்ளிகேஷன் தற்போது கூகுள் - ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. ஏற்கெனவே கூகுள் கீபோர்டு பயன்படுத்துபவர்களும் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.

நீங்களும் ஆண்ட்ராய்டின் டேஸ்ட் டெஸ்ட்டில் கலந்துகொண்டு உங்கள் மொபைலின் தோற்றத்தை புதுப்பொலிவாக்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism