Published:Updated:

அஸ்வின் தாத்தாவுக்கு போட்டி அட்கின்சன் தாத்தா தான் தெரியுமா? #TrendsToday

அஸ்வின் தாத்தாவுக்கு போட்டி அட்கின்சன் தாத்தா தான் தெரியுமா? #TrendsToday
அஸ்வின் தாத்தாவுக்கு போட்டி அட்கின்சன் தாத்தா தான் தெரியுமா? #TrendsToday

#TrendsToday

#AshwinSundar

சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர். அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Cheteshwar Pujara 

என்ன தான் ஆஸ்திரேலியா 450 ரன்னுக்கு மேல அடிச்சாலும். கெத்தா பதிலடி கொடுப்போம்னு ஆடிவர்ற இந்தியா மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்கள் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராகுல் மற்றும் முரளி விஜய் அரை சதம் அடிக்க மாஸ் காட்டுகிறது இந்தியா. புஜாராவும்-விஜய்யும் இந்த சீஸன்ல மட்டும் 6 செஞ்சுரி பார்ட்னர்ஷிப் போட்ருக்காங்க...கமான் இந்தியா

AAA Trailer

'AAA' - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில், சிம்பு ஏற்று நடிக்கும் 'அஷ்வின் தாத்தா' கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் இதன் டீசருக்கு டீசர் விட்டு அசத்தினர் படக்குழுவினர். தற்போது, முழு டீசரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டி.ஆருக்கும், எஸ்.டி.ஆருக்கும் வித்தியாசம் என்னனு சிம்பு பேச வியூஸ் அள்ளுது. மொத்தத்தில், சிம்பு இஸ் பேக் தான் இன்றைய வீக் எண்ட் வைரல்.

Mr.Bean

மிஸ்டர் பீன் நக்கல், கலாய், நையாண்டிக்கு பேர் போனவர். அவர் படம்ன்னாலே வயிறு வலிக்க சிரிக்கறது தான் நியாபகம் வரும். ஆனா அவரே ஒரு மரண மாஸான ஆக்‌ஷன் அதுவும் மர்டர் ஸ்டோரில நடிச்சா எப்படி இருக்கும். ரொம்ப யோசிக்க வேணாம். அவர் அப்படில்லாம் நடிக்கல. அவரோட மிஸ்டர் பீன் சீன்ல சிலவற்றை எடுத்து மிரட்டலான மர்டர் ஸ்டோரி ட்ரெய்லர் விட்டுக்காரு ஒரு ஃபேன். அப்பறம் என்ன வைரல் தான். ட்ரெய்லர பாத்து மெர்சலாகுங்க,

கங்கை அமரன்:

இன்னிக்கு தமிழ்நாட்டோட மோஸ்ட் வெரிஃபைட் நியூஸ் பாஜக வேட்பாளரா கங்கை அமரன் அறிவிக்கப்பட்டது தான். ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்ல பா.ஜ.க எடுத்திருக்கும் ஆயுதம் கங்கை அமரன். சசிகலா வீட்டு பிரச்னைல ஏமாத்துனத வைச்சு ஓட்டு கேக்கலாம்னு மாஸ்டர் ப்ளான் பண்ணிருக்காங்கலாம். ப்ரேம்ஜி, வெங்கட் பிரபுலாம் ஒட்டு கேட்பாங்க. ஏரியா கலைகட்டும் என சென்னை ட்ரெண்டானார் கங்கை அமரன். 

இது தவிர வெங்கையா நாயுடு பேசினது, விராட் கோலி அவுட் ஆனதுனு வீக் எண்ட் வைரல்களும், மூவி ரிவியூக்களும் ட்ரெண்டிங் வரிசையை ஆக்கிரமித்தது.  உங்களுக்கு தெரிஞ்ச இன்னிக்கு செம ஹிட் அடிச்ச உங்க ஏரியா ஆரம்பிச்சு சர்வதேச வைரல் வரைக்கும் கமெண்ட்ல சொல்லலாமே ப்ரெண்ட்ஸ். 

-ட்ரெண்ட்பெர்க்