Published:Updated:

ஸ்லெட்ஜிங் கோலி, ஸ்லோமோஷன் புஜாரா, ஸ்வார்ட் டான்ஸ் ஜடேஜா  #TodayTrends

ஸ்லெட்ஜிங் கோலி, ஸ்லோமோஷன் புஜாரா, ஸ்வார்ட் டான்ஸ் ஜடேஜா  #TodayTrends
ஸ்லெட்ஜிங் கோலி, ஸ்லோமோஷன் புஜாரா, ஸ்வார்ட் டான்ஸ் ஜடேஜா  #TodayTrends

#TodayTrends

சந்திரஹாசன்:

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால், உயிரிழந்தார். லண்டனில், தன் மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82. கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ''நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்  அவரைப் பெற்றதால் உற்றது நல் வாழ்வு.  எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக்கூட நான்  நிறைவேற்றவில்லை'' என ட்விட் செய்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கோலி, புஜாரா, ஜடேஜா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் ஸ்டைலிஷான பேட்டிங் மூலம் இந்தியா 603 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா இரட்டை சதமும், விக்கெட் கீப்பர் சஹா சதமும் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற வைத்தனர். இறுதிக்கட்டத்தில் ஜடேஜாவின் அரைசதம் 152 ரன் முன்னிலை பெற காரணமானது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 23 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. 

இன்றைய நாளில் வைரல் ட்ரெண்டிங் என்னவென்றால் ஜடேஜா அரைசதம் அடித்ததும் ஸ்வார்ட் டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதும், வார்னர் அவுட் ஆனதும் ஸ்லிப்பில் நின்ற கோலி கையைப் பிடித்து காயமடைந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்லெட்ஜிங் செய்ததும்தான். அதோடு புஜாரா ஒரு புதிய சாதனையையும் செய்தார். இந்திய வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். 525 பந்துகளைச் சந்தித்த புஜாரா 495 பந்துகளைச் சந்தித்து சாதனையைத் தன் பக்கம் வைத்திருந்த டிராவிட்டை  பின்னுக்குத் தள்ளினார். 

19,999 ரூபாயில் iPhone SE

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE 16GB ஸ்மார்ட் போன்கள் 19,999 ரூபாய்க்கு ஆஃபர் விலையில் குறுகிய காலத்துக்குக் கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த ஆஃபர் விலையில் iPhone SE போன்களைப் பெறலாம். வரும் மார்ச் 31-ம் தேதி வரை இந்தச் சலுகை இருக்குமாம். ஐபோன் இந்தியாவில் உற்பத்தி தொடங்குவதற்கு இதெல்லாம் முன்னோட்டம். இந்தியாவில் ஆன்ட்ராய்டு மார்க்கெட்டுக்குள் ஆப்பிளால் பெரிதாக நுழைய முடியவில்லை என்றாலும். தனது விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம் தீட்டி வருகிறது. 

நோ சொன்ன வைகோ, திருமா!

ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தலுக்கு தினமும் ஒரு கட்சி வேட்பாளரை அறிவித்து வரும் வேளையில் இன்றைய நாள் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்புகளை வெளியிடும் நாளாக அமைந்தது. முதலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பைத் தனித்தனியே வெளியிட்டனர். 

இவற்றைத் தாண்டி பங்களாதேஷ் தனது 100வது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது, எஸ்.பி.பி - இளையராஜா மோதல் என்று வைரல் விஷயங்களால் நிறைந்தது வீக் எண்ட். நாளின் இறுதியில் ''அய்யோ நாளைக்கு திங்கட்கிழமை '' என்ற மண்டே பயமும் ட்ரெண்டாகி முடிந்தது. எல்லாம் ஓ.கே பாஸ் அடுத்த வாரத்தை செம ட்ரெண்டா தொடங்குங்க...

- ட்ரெண்ட்பெர்க்