Published:Updated:

ப்ரேக் அப் ஆகிடுச்சா!? அப்போ இந்த Apps-லாம் உங்களுக்குத்தான்..!

ப்ரேக் அப் ஆகிடுச்சா!? அப்போ இந்த Apps-லாம் உங்களுக்குத்தான்..!
ப்ரேக் அப் ஆகிடுச்சா!? அப்போ இந்த Apps-லாம் உங்களுக்குத்தான்..!

ஐ யம் சிங்கிள்னு ஸ்டேட்டஸ் தட்டுற அனிருத்தா இருந்தாலும் சரி... 64 வயசுலயும் சிங்கிள் தான்னு சொல்லுற பவர் பாண்டியா இருந்தாலும் சரி...ஏதோ ஒரு கட்டத்துல பிரேக்-அப்ப கடந்து வந்துருப்பாங்க. ப்ரேக் அப் ஆனா தாடி வளர்த்து தப்பான செயல்கள்ல மனச கொண்டு போணும்னு இல்ல. பாஸிட்டவாவும் மாறலாம். அதற்கு உதவும் இந்த 5 விஷயங்கள் உங்க போன்ல இருந்தாலே போதும்...

1. KillSwitch

கில் ஸ்விட்ச் - ப்ரேக் அப் செய்யும் நபர்களுக்காகவே உருவாக்கப்ப்பட்ட ஆப். இந்த ஆப் என்ன செய்யும் என்றால் உங்களது காதலன்/காதலி உங்களை குறிப்பிட்டு பதிவு செய்துள்ள ஸ்டேட்டஸ், புகைப்படம், வீடியோ போன்ற அனைத்து விஷயங்களையும் ஒற்றை க்ளிக்கில் அழித்து விடும். இது அவர்களை பற்றிய பழைய நினைவுகளை மறக்க உதவியாக இருக்கும். பிறந்தநாள் அன்று அவர் வாங்கி தந்த கிஃப்ட்டை போட்டோவாக பதிவு செய்திருந்தது துவங்கி ஒவ்வொரு நாள் காலையும் ’உன் குட் மார்னிங்ல தான் ஆரம்பிக்குது’னு போட்ட எல்லா ஸ்டேட்டஸும் மொத்தமா அழிஞ்சுடும். இது மட்டும் எல்லா நினைவுகளையும் அழிச்சுடாதுன்னாலும்...நீண்ட நாள் கழிச்சு நீங்க மறந்ததுக்கு அப்பறம்  நினைவுக்கு வராம இருக்க இந்த ஆப் கண்டிப்பா உதவும்.

டவுன்லோட் செய்ய: http://www.killswitchapp.com/

2.Ex Lover Blocker

 இந்த ஆப் ஒரு பிரேசிலியன் கம்பெனியால் 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆப்பில் உங்களது காதலன்/காதலிமொபைல் நம்பரையும், உங்கள் நெருங்கிய நண்பர்களின் மொபைல் நம்பரையும் சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் காதலிக்கு போன் செய்தால் உங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் ஏன் திரும்ப அவர்களை தொடர்புகொள்ள நினைக்கிறீர்கள் என்ற பதிவையும், நண்பர்களுக்கு நீங்கள் உங்களை பழைய காதலன்/காதலியை தொடர்பு கொள்கிறீர்கள் என்று கூறிவிடும். நண்பர்கள் திட்டுவார்கள், உலகத்துகே தெரிஞ்சுடும்னு பேசாம போன் பண்ணாம இருப்போம்ங்கறது தான் இந்த ஆப்போட நோக்கம்.

டவுன்லோட் செய்ய: https://itunes.apple.com/us/app/ex-lover-blocker/id520205260?mt=8

3. Eternal Sunshine

இந்த க்ரோம் எக்ஸ்டென்ஷன் சில குறிப்பிட்ட ஃபேஸ்புக் ப்ரோஃபைல்களை ப்ளாக் செய்ய உதவும் எக்ஸ்டென்ஷன். இந்த எக்ஸ்டென்ஷன்ல உங்கள் காதலன்/ காதலியோட ஃபேஸ்புக் ப்ரோஃபைல லின்க் பண்ணி வைச்சிருந்தீங்கண்ணா, அவங்களோட ஸ்டேட்டஸ் அப்டேட், போட்டோ, வீடியோனு அவங்க நியூஸ் ஃபீடே உங்க டைம்லைன்ல இருந்து மறைஞ்சுடும். அப்பறம் அவங்க ஆன்லைன்ல இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? உங்கள் பக்கம் உங்கள் நண்பர்கள்னு போய்டுங்க,

4. Rx Breakup

இது ப்ரேக் அப் ஆனவருக்கான ஒரு சுய முன்னேற்றத்துக்கான ஆப். ப்ரேக் அப் ஆனவர் இதில் உள்ள வழிமுறைகளின் படி தினமும் மிகவும் நேர்மறையான எண்ணங்களுடன் ஒவ்வொரு செயலையும் அணுக சிறு பயிற்சிகளை முன் வைக்கிறது. அதனை தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் உங்கள் மனதில் ப்ரேக் அப் பற்றிய நினைவுகள் இருக்காது. இந்த நேர்மறை எண்ணங்கள் ஆழமாக பதிந்திருக்கும் என்கிறது இந்த ஆப். 

டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.rxbreakup&hl=en

5. Internet Free World:

இன்று பெரும்பாலான ப்ரேக் அப்களுக்கு பின் அனைவரும் சோகத்தில் மூழ்க முக்கிய காரணமாக இருப்பது இணையம் தான். பழைய குறுஞ்செய்திகள், ஹைக், வாட்ஸ் அப்பில் லாஸ்ட் சீன், ஃபேஸ்புக்கில் ஆன்லைன் காட்டுகிறதா? ஒரு வேளை காதலனோ/ காதலியோ ப்ளாக் செய்து வைத்திருந்தால் அவர்கள் கணக்கை எப்படியெல்லாம் மீண்டு பார்க்கலாம் என நினைப்பது போன்ற எண்ணங்கள் ஆகியவை தான் அதிக வலிகளை தரும். போனில் இணையத்தை நிறுத்திவிட்டு பழைய குறுஞ்செய்திகளை அழித்துவிட்டு லாங் ட்ரிப் அல்லது உங்கள் வேலையை முழு கவனத்துடன் செய்ய துவங்குங்கள். அப்பறம் கெத்து காட்டுங்க...

-ச.ஸ்ரீராம்