Published:Updated:

ஐபோன் ஹோம் பட்டனை பலி கொடுக்கப்போகிறதா ஆப்பிள்? #TechNews

ஐபோன் ஹோம் பட்டனை பலி கொடுக்கப்போகிறதா ஆப்பிள்? #TechNews
ஐபோன் ஹோம் பட்டனை பலி கொடுக்கப்போகிறதா ஆப்பிள்? #TechNews

ஆப்பிள் 7 பற்றிய ஆச்சர்யமே விலகாத நிலையில், ஐபோன் 8 பற்றிய தகவல்கள் வெளியாகிவிட்டன. புதிதாக சிவப்பு நிறத்தில் ஐபோன் வெளியாகும் என்கிறார் யூட்யூப் டெக்கீ Macitynet. சாம்சங்கைப் போல, ஐபோனும் ஹோம் பட்டனை டிஜிட்டலாக மட்டும் மாற்றப்போகிறதாம். வளையக்கூடிய OLED டிப்ளேவும் ஐபோன் 8ன் சிறப்பம்சமாக இருக்கும் என்கிறார்கள். புது மாடலில் வைரஸ் எல்லாம் வராம பார்த்துக்கொள்ள வேண்டும் ஆப்பிள். விலை எப்படியும் லட்சத்தைத் தாண்டும்ல?

____________

வாட்ஸ்அப் தனது புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே இருந்த வசதிகளோடு சிறிய மாற்றங்களை மட்டும் செய்துள்ளது. நீங்கள் டைப் செய்யும் டெக்ஸ்ட்டை போல்ட் (Bold) ஆகவோ, சாய்வாகவோ (Italic) மாற்ற, டெக்ஸ்ட்டிற்கு முன்னாள் ஸ்டார் சேர்க்க வேண்டும் அல்லது _ சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அதற்கு பதிலாக மொத்த டெக்ஸ்ட்டையும் டைப் செய்துவிட்டு, வேண்டிய பகுதிகளை செலக்ட் செய்தாலே போதும். எழுத்துருக்களை (font) மாற்றுவதற்கான ஆப்ஷன்கள் மேலே காட்டப்படும்.  Bold, Italics மற்றும் Strike Through என மூன்று ஆப்ஷன்கள் தற்போது இருக்கின்றன. பீட்டா யூசர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

இதுமட்டுமின்றி கணினியில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெர்ஷனான வாட்ஸ்அப் வெப்-பிலும் கூட ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறது வாட்ஸ்அப். இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை, ஐந்து நிமிடத்திற்கும் அன்சென்ட் செய்யவோ, டெலிட் செய்யவோ அல்லது எடிட் செய்யவோ கூட முடியும். இதனை சமீபத்தில் சோதித்துப் பார்த்துள்ளது வாட்ஸ்அப். தற்போது இந்த வசதி கிடையாது. எப்போதிருந்து இந்தப் புதிய வசதிகளை அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. 

__________

அயர்லாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கார்ட்டர் வில்கர்சன் பிரபல சிக்கன் பிராண்ட் ஆன வெண்டீஸை (Wendys) ட்விட்டரில் வம்புக்கு இழுத்திருக்கிறான். “வருஷம் முழுக்க இலவசமா சிக்கன் நக்கட்ஸ் வேணும். என்ன செய்யணும் நான்” எனக் கேட்க, அவர்களும் “இந்த ட்வீட் 18 மில்லியன் ரீட்வீட் ஆனால் தருகிறோம்” எனச் சொன்னார்கள். ஒரே வாரத்தில் 3 மில்லியனைத் தொட்டுவிட்டது கார்ட்டரின் ட்வீட். 

இதற்கு முன் ட்விட்டர் ஹால் ஆஃப்  ஃபேமில் 2014ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் எடுக்கப்பட்ட செல்ஃபி தான் அதிகம் ரீ-ட்விட் செய்யப்பட்ட செல்ஃபியாக உள்ளது. இதனை 32 லட்சம் பேர் ரீ-ட்விட் செய்துள்ளனர். இதனை வீழ்த்த கார்ட்டர் விலகர்சனுக்கு வெறும் 5 லட்சம் ரீ-ட்விட்கள் வேண்டும். இன்னும் 1.54 கோடி ரீ-ட்விட்கள் வந்தால் வில்கர்சனுக்கு ஒரு வருடம் முழுக்க சிக்கன் நக்கட்ஸ்களை வெண்டிஸ் நிறுவனம் வழங்கும். இப்போது #nuggetsforcarter என்ற ஹேஷ்டேகில் தனது தேடலைத் தொடர்கிறான் கார்ட்டர். நல்லா பண்றாங்கையா மார்க்கெட்டிங்

____________

இந்தியா மொபைல்களின் தேசம். நோக்கியா, சாம்சங், ஆப்பிள் போன்ற பன்னாட்டு பிராண்டுகள் தொடங்கி மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய பிராண்டுகள் தான் இதுவரை டாப் ஆக இருந்தன. 2017 ஆம் ஆண்டு அதில் மாற்றம் வரலாம் என்கிறது ஓர் ஆய்வு. சீனாவைச் சேர்ந்த ஜியோமி தான் இன்றைய தேதியில் இந்தியர்களின் கனவு மொபைல். இந்த ஆண்டு முடிவதற்குள் விற்பனையில் பாகுபலி ரேஞ்சு சாதனையை இது செய்திருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. ஜியோ..மீ...மீ...மீ

____________

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உங்கள் சர்க்கரை அளவை அறிய ரத்தமெல்லாம் சோதனைக்கு தரத் தேவையில்லை. அடுத்த ஆண்டு ஆப்பிள் வாட்ச்சோ, மேக் லேப்டாப்போ வாங்கிக்கொள்ளாலாம். இதற்காக ஆப்பிளின் சீக்ரெட் குழு ”டயாபடிக் டெஸ்டிங் சென்ஸார்” ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. தோலின் மீது ஒளியைப் பாய்ச்சி அதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் குளோகோஸ் அளவை அறிய முடியும். கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த இந்த சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால், ரத்தம் கொடுக்கத் தேவையில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்தான். ஆசம் ஆப்பிள்.

____________

ஜியோ தான் இன்னமும் டாக் ஆஃப் த டவுன். “இலவசமா எல்லாம் தரக்கூடாது” என மற்ற நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஆணையத்திடம் புகார் தர, ஜியோவின் இலவச ஆஃபர் முடிவுக்கு வந்தது. இப்போது பதிலுக்கு ஜியோ “ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் செய்வது தவறு. ஆஃபரை எல்லா வாடிக்கையாளருக்கும் தராமல், தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தருவது அநியாயம்” எனக் குற்றம் சாட்டியிருக்கிறது. “ஜியோ சொல்றதும் சரிதான” என நெட்டிசன்ஸ் ஆதரவும் ஜியோவுக்கே அதிகம் இருக்கிறது. 

-கே