Published:Updated:

சூதாட்டம்... லைவ் ஸ்ட்ரீமிங்... ஃபேண்டஸி லீக்... இது ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல்!

சூதாட்டம்... லைவ் ஸ்ட்ரீமிங்... ஃபேண்டஸி லீக்... இது ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல்!
சூதாட்டம்... லைவ் ஸ்ட்ரீமிங்... ஃபேண்டஸி லீக்... இது ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல்!

சூதாட்டம்... லைவ் ஸ்ட்ரீமிங்... ஃபேண்டஸி லீக்... இது ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல்!

10 வருடங்களுக்கு முன்பு நாம் கிரிக்கெட் பார்க்கும் ஸ்டைலே வேற. ஒட்டு மொத்த வீடும் டி.வி. முன்னால் கூடிவிடும். அவர்களுக்கு விளம்பர இடைவேளையோ, நமக்கு உணவு இடைவேளையோ... எதுவுமே நம்மை டி.வியை விட்ட அகல விடாது. டெஸ்ட் மேட்ச் ரீடெலிகாஸ்ட் என்றாலும் ஒரு பந்து விடாமல் பார்த்தவர்கள் தான் நாம். ஆனால், இது ஐ.பி.எல் காலம். கிரிக்கெட் என்பது டி.வியில் பார்க்கும் எண்டெர்டெயின்மெண்ட் மட்டுமே அல்ல. இன்னும் அதைச் சுற்றி ஏராளமான விஷயங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அப்படி நமக்கு அளவில்லா எண்டெர்டெயின்மெண்ட்டை வழங்கும் சில கிரிக்கெட் மொபைல் ஆப்ஸ் பற்றி பார்க்கலாம்.

IPL:


இது ஐ.பி.எல்-ன் அதிகாரப்பூர்வ ஆப். போட்டிகள், முடிவுகள், பாயிண்ட்ஸ் டேபிள் என ஐ.பி.எல் போட்டியின் சகல விஷயங்களையும் அட்டகாசமாக பிரித்து சொல்கிறது இந்த ஆப். நேற்றைய பெங்களூரு- புனே போட்டியில் தோனி அடித்த சிக்ஸ், மைதானத்தை விட்டு வெளியே பறந்தது. அந்த வீடியோ பார்க்க வேண்டுமென்றால், அதை மட்டுமே தனி வீடியோவாக தருகிறார்கள். லைவ் ஸ்கோர்ஸ், பேட்ஸ்மென், பவுலர்களின் சாதனைகளை, கருத்து கணிப்புகள்,  ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் யாருக்கு என ஐ.பி.எல் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

Fantasy league:


இதுவும் ஐ.பி.எல் ஆப்-ன் ஒரு பகுதிதான். ஆனால், இந்த ஏரியா மட்டுல் ஆப்-ல் திறக்காமல், பிரவுசரில் வரும். இந்த ஆட்டத்தின் விதிகள் இதுதான். நாம் முதலில் 11 பேர் கொண்ட டீமை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மதிப்பு இருக்கும். நமக்கு தரப்பட்டிருக்கும் காசை வைத்து, அதற்குள்ளாக ஓர் அணியை உருவாக்க வேண்டும். நமது அணியில் இருப்பவர்கள் எவ்வளவு ரன் அல்லது விக்கெட் எடுக்கிறார்களோ அவ்வளவு பாயிண்ட்ஸ். நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஒரூ லீக் ஆரம்பித்து, அதில் அனைவரது அணியையும் சேர்த்துக்கொள்ளலாம். யாருடைய டீம் அதிக பாயிண்ட்ஸ் எடுக்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். தினமும் போட்டிக்கு அரை மணி நேரம் முன்னால், விளையாடும்11 பேர் அறிவிக்கப்படுவார்கள். அடுத்த அரை மணி நேரத்துக்குள் நமக்கு யார் அன்றைக்கு நன்றாக விளையாடுவார்கள் எனத் தோன்றுகிறதோ அவரை அணியில் சேர்க்க வேண்டும். பெரும்பாலும் அதிர்ஷ்டம் என்றாலும், ஒருவரது கிரிக்கெட் பற்றிய அறிவை சோதிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும். விளையாடிப் பாருங்கள்.


ஹாட் ஸ்டார்:

ஒரு ஆப் மூலம் எத்தனை பேர் லைவாக மேட்ச் பார்ப்பார்கள் என நினைக்கறீர்கள்? ஹாட்ஸ்டார் ஆப் மூலம் புனே-பெங்களூரு போட்டியை ஒரே லைவாக 12 லட்சம் பேர் பார்த்தார்கள். டி.வி. இல்லாத இடமென்றாலும் பிரச்னை இல்லை. மொபைல் சிக்னல் இருந்தால் போதும் என்பதால் அனைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய ஆப்-ஆக மாறி வருகிறது ஹாட்ஸ்டார்.

IPL App 2017:

இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு யூஸர்களிடம் பிரபலமாகி வருகிறது இந்த ஆப். லைவ் ஸ்கொர்ஸ், லைவ் சட என்பதைத் தாண்டி பல கோடி ரூபாய் பரிசுகள் தரும் போட்டிகளும் உண்டு. அது மட்டுமில்லாமல், போட்டிகளுக்கான கிரவுண்ட் டிக்கெட்கள் எக்ஸ்ட்ரா இருந்தால், அதை கைமாற்றிவிடவும் உதவுகிறது இந்த ஆப். 

சூதாட்ட ஆப்ஸ்:

இவைத் தவிர சூதாடுவதற்கும் மொபைல் ஆப்ஸ்-ஐ நிறைய பயன்படுத்துகிறார்கள். கேம்ப்ளிங் சில நாடுகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு விளையாட்டு. அங்கிருந்து உருவாக்கப்படும் ஆப்ஸ் மூலம் ஐ.பி.எல் சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியின் ரேட் இப்போது 3.75. அதாவது, 100ரூபாய் பெட் கட்டி பெங்களூரு வென்றுவிட்டால், திரும்ப 375 ரூபாய் கிடைக்கும். பெங்களூரு அணி வெல்லும் என நிறைய பேர் நம்புவதால் இதன் ரேட்தான் குறைவு. அதிகபட்சமாக பஞ்சாப் அணிக்கு 11. இவைத் தவிர ஒவ்வொரு போட்டியிலும் யார் 50 அடிப்பார்கள், யார் மேன் ஆஃப த மேட்ச் போன்ர சூதாட்டமும் ஆப்ஸ் மூலம் நடைபெற்று வருகிறது. betfair மற்றும் இது போன்ற ஆப்ஸ், இந்த ஏரியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கின்றன.

-கார்க்கிபவா

அடுத்த கட்டுரைக்கு