Published:Updated:

டியர் டெக்கீஸ்...உங்களுக்காகத்தான் இந்த 'டெக் தமிழா'! #FreeEbook

டியர் டெக்கீஸ்...உங்களுக்காகத்தான் இந்த 'டெக் தமிழா'! #FreeEbook
டியர் டெக்கீஸ்...உங்களுக்காகத்தான் இந்த 'டெக் தமிழா'! #FreeEbook

ட்டுத்தோலின் மீது, மரங்களின் பட்டையின் மீது, துணிகளின் மீது, பாறைகளின் மீது எனக் கிடைத்த பரப்புகளின் மீதெல்லாம் எழுத்துகளையும், ஓவியங்களையும் தீட்டிய மனிதன் இறுதியாகக் கண்டதுதான் தற்போது நாம் பயன்படுத்தும் காகிதம். கதைகளாக, பாடல்களாக, கவிதைகளாக, அச்சடித்த புத்தகங்களாக நமக்கு இந்தக் காகிதங்கள் கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். ஆனால் தற்போது ஏ.டி.எம்.,மில் பில் கேட்டால் கூட 'பேப்பர் இல்லை; கோ க்ரீன்' எனக் கை விரிக்கிறது ஏ.டி.எம் மெஷின். எதற்கெல்லாம் இந்தக் காகிதங்கள் தேவைப்பட்டதோ, அவை அனைத்தும் தற்போது டிஜிட்டலாகக் கிடைக்கின்றன; அல்லது மாறிவிட்டன. கட்டாயமோ, யதார்த்தமோ...நாமும் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு விட்டோம்.  அப்படி நம் தலைமுறையினரிடம் அதிகம் மாறுதல் அடைந்த விஷயங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பது. 1000 பக்கங்களைத் தாண்டும் புதினங்களைக் கூட, மடியில் வைத்து நிதானமாகப் படிக்கும் பெரியோர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இன்று செய்தித்தாளை புரட்டுவது கூட கடினமாகப் படுகிறது. 

இந்த இடத்தில்தான் மாற்றுவழிகளுக்கான தேவை உருவாகிறது. அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது இ-ரீடிங் பழக்கம். இதன் மூலம் சமூக வலைதளங்களைத் தவிர்த்து, மின் நூல்களாக, ஆப்ஸ்களாக புத்தகங்களைப் படிப்பதன் வழியே தன்னை மேம்படுத்திக் கொள்கிறது இன்றைய இளைய தலைமுறை. அவர்களுக்கு ஊக்கமளிக்க, விகடனின் புதிய முயற்சிதான் 'டெக் தமிழா'.

டியர் டெக்கீஸ்...உங்களுக்காகத்தான் இந்த 'டெக் தமிழா'! #FreeEbook

மொபைல், கணினி, டேப்லட், கிண்டில் என எல்லா டிவைஸ்களிலும் படிப்பதற்கு ஏற்ற மின் இதழ்தான் இந்த டெக் தமிழா. ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். தமிழ் இதழியலில் ஓர் புதிய முயற்சியாகவும், தமிழில் தொழில்நுட்ப புத்தகங்களே இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் இதனை உருவாக்கியிருக்கிறோம். கீழே இருக்கும் லிங்க்கில் டவுன்லோட் செய்து எங்கேயும், எப்போதும் நீங்கள் படிக்கலாம்!

ஃபேஸ்புக், கூகுள் போன்ற டெக் நிறுவனங்களே தடுக்க முடியாமல் தடுமாறும் ரிவென்ஜ் போர்ன் பிரச்னை, 2G வேகத்தில் யூ-ட்யூப் பார்க்க, மொபைல் பேட்டரியைப் பாதுகாக்க, முக்கியமான வீடியோக்களை ஈஸியாக சேமித்து வைக்க என உங்கள் கேட்ஜெட்களுக்கான 'பேலியோ' டிப்ஸ், பாகுபலியின் டெக்னாலஜி சீக்ரெட்ஸ், ஆப்ஸ் அறிமுகங்கள், ஹேஷ்டேக் உருவான வரலாறு, ஹாம் ரேடியோ பற்றிய கட்டுரை எனத் தகவல்களும், சுவாரஸ்யமும் அடங்கிய PDF ஆக மலர்ந்திருக்கிறது இந்த மே மாத இதழ்! உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ட்யூட்! 

இதழை டவுன்லோட் செய்ய லிங்க்: https://drive.google.com/open?id=0Bw7WGNa4lCmYQmtBd2lDdklhaU0