Published:Updated:

ஃபேஸ்புக் லைவ்-ல் பாகுபலி..! மகிழ்மதி மீது இணைய படையெடுப்பு

ஃபேஸ்புக் லைவ்-ல் பாகுபலி..! மகிழ்மதி மீது இணைய படையெடுப்பு
ஃபேஸ்புக் லைவ்-ல் பாகுபலி..! மகிழ்மதி மீது இணைய படையெடுப்பு

ஃபேஸ்புக் லைவ்-ல் பாகுபலி..! மகிழ்மதி மீது இணைய படையெடுப்பு

டெக்னாலஜி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை வைத்து ஒருவர் பாகுபலி எடுக்கிறார். இன்னொருவர் எடுத்த படத்தை இலவசமாக ஃபேஸ்புக்கில் லைவ் ஆக ஓட விடுகிறார். இதுவும் தொழில்நுட்பம் தான். ஒரு தொழில்நுட்பம் எப்போதுமே நல்லது, கெட்டது இரண்டுக்குமே உதவும் என்பதை இன்றைய ஃபேஸ்புக் லைவ் சம்பவம் விளக்குகிறது. 

பாகுபலி இந்திய சினிமாவின் புதிய மைல்கல். 1000 கோடி வசூல் செய்து அபார சாதனை செய்துள்ளது. அந்தப் படம் முதல்நாளே பைரஸி இணையதளங்களில் பரவியது. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை படக்குழு மேற்கொண்டது. ஆனால் இது வசூலை பெருமளவு பாதிக்காததால் அப்படியே விட்டுவிட்டனர். இன்று ஃபேஸ்புக் லைவ்-ல் முழுப்படத்தையும் காண முடிந்தது. ஃபேஸ்புக் என்பது எல்லாரது கையடக்க போனிலும் நொடிப்பொழுதில் எளிதாக பகிரப்படக்கூடியது. இதில் ஃபேஸ்புக் லைவ் என்றால் அவ்வளவு தான் பல்லாயிரக்கணக்கான பேரை நொடிப்பொழுதில் சென்றடையும்.

எப்படி செய்கிறார்கள்?

ஃபேஸ்புக்கில் சமீபகாலமாக பார்த்திருக்கலாம். அஜித்-விஜய் இருவரில் யார் சிறந்தவர் என்பதற்கு எமோஜிக்கள் மூலம் போட்டி நடக்கும் அதற்கு லைக் , ஹார்ட் எமோஜிக்கள் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் நடக்கும். இதே தொழில்நுட்பம் தான். அங்கு இருக்கும் புகைப்படத்துக்கு பதிலாக வீடியோவை இணைத்தால் கணினியில் இருக்கும் வீடியோ லைவாக ஓடத்துவங்கிவிடும். ஒரு பைரஸி தளத்தில் இருந்து ஒருவர் படத்தை டவுன்லோட் செய்தால் பல லட்சம் பேருக்கு அதனை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் கொண்டு செல்ல முடியும்.

ஃபேஸ்புக் லைவ் சரியா?

ஆப்கானிஸ்தானில் ஃபேஸ்புக் லைவ் மூலம் பாலியல் பலாத்காரம், அமெரிக்காவில் கொலை, தற்போது பாகுபலி லைவ் என ஃபேஸ்புக் லைவ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அதற்காக ஃபேஸ்புக் லைவ் என்ற விஷயமே கூடாது என்று கூறிவிட முடியாது. மெரினா புரட்சிக்கும், நெடுவாசல் பிரச்னைக்கும் உண்மை நிலவரத்தை காட்டியது ஃபேஸ்புக் லைவ் தான் என்பதையும் மறந்துவிட முடியாது. சரியான நெறிமுறையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் ஃபேஸ்புக் நிர்வாகம் உள்ளது. மார்க் சக்கர்பெர்க்கும் இதற்கு விரைவில் தீர்வு கண்டறியப்படும் என்று கூறியுள்ளார்.

எல்லை மீறுகிறதா இன்றைய தலைமுறை:

இன்று தான் பார்க்கும் எல்லா விஷயங்களையும் எல்லாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையும், எனது பதிவுக்கு எத்தனை லைக், ஹார்ட் வந்துள்ளது என்று நினைக்கும் எண்ணமும் அதிகரித்துள்ளது. அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் வருமானம் வராது என்பது தெரிந்தும் சிலர் இதனை பப்ளிசிட்டிக்காக பதிவிடுகின்றனர்.இன்று என்னை ஃபேஸ்புக் பிரபலமாக காட்டிக்கொள்ள வேண்டும், நான் பதிவிட்டால் லட்சம் வியூஸ் போகும் என்ற மனப்பான்மைதான் இது போன்ற செயல்களில் ஈடுபடும் அட்மின்களின் மனநிலை.

தீர்வு தான் என்ன?

கொலை, பாலியல் பலாத்காரம், பைரஸி, ப்ரைவஸி என எல்லாவற்றையும் ஆக்ரமிக்கும் ஃபேஸ்புக் லைவ்வை ஃபேஸ்புக் கொஞ்சம் நெறிமுறைகளோடு வழங்கினாலோ அல்லது இதனை மேற்பார்வையிட தனி அணி அமைத்து செயல்பட்டாலோ தான் இதனை தடுக்க முடியும். ஆனால் இணையம் கட்டுக்கடங்காத எல்லைகளை தொட்டுவிட்டது. இது நடந்து கொண்டு தான் இருக்கும்.  மார்க் அமரேந்திர பாகுபலி போல் முடிவெடுத்தால் தான் பைரஸி காளகேயர்களை அழிக்க முடியும். 

இன்று ஃபேஸ்புக் லைவ் ஓடிய பக்கத்தை நாம் ரிப்போர்ட் செய்திருந்தோம். சிறிது நேரத்திலே, அந்த வீடியோவை ஃபேஸ்புக் நீக்கியது. அது குறித்த தகவலையும் நமக்கு அனுப்பியது.

பாகுபலி 1

இதே இணையத்தில் இன்றும் பாகுபலி முதல் பாகத்தின் வீடியோ யூட்யூபில் இருக்கிறது. 4K தரத்தில் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இதை பாகுபலி குழுவினரே வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவரையில் 81 லட்சம் இதை பார்த்து இருக்கிறார்கள். வாங்க பாகுபலி 1 பார்க்கலாம். 

அடுத்த கட்டுரைக்கு