Published:Updated:

இந்தியாவுக்கு ஹார்ட்... அமெரிக்காவுக்கு ஆங்க்ரி... மார்க் சக்கர்பெர்க் காட்டும் எமோஜி முகங்கள்!

இந்தியாவுக்கு ஹார்ட்... அமெரிக்காவுக்கு ஆங்க்ரி... மார்க் சக்கர்பெர்க் காட்டும் எமோஜி முகங்கள்!
இந்தியாவுக்கு ஹார்ட்... அமெரிக்காவுக்கு ஆங்க்ரி... மார்க் சக்கர்பெர்க் காட்டும் எமோஜி முகங்கள்!

ஃபேஸ்புக்ல இதுநாள் வரைக்கும் லைக் மட்டுமே செய்து வந்த நம்ம எல்லாரையும், ஹார்ட், ஹா...ஹா..., வாவ், சோகம், ஆங்க்ரினு உலகத்துக்கும் நம்மோட உணர்வுகள கடத்த வைச்சது ஃபேஸ்புக் தான். அதோட சி.இ.ஓ மார்க் தன்னோட சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்னு வைச்சிருக்குற விஷயம் மனிதர்களோட உணர்வுகள் தான். அப்படிப்பட்ட நபரோட குணங்கள், ஃபேஸ்புக் எமோஜிகளோட பர்ஃபெக்ட்டா ஒத்துப்போகுது.

லைக்:

மார்க் உலக மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் டெக் சி.இ.ஓ. ஆனால் அவர் விரும்பும் விஷயங்கள் என்றால் அது கல்வியும், ஆரோக்கியமும் தான். கல்வி என்பது ஒருவருக்கு முதன்மையான தேவைகளில் ஒன்று. இதற்காகத் தான் 2015-ம் ஆண்டு முழுவதும் இயர் ஆஃப் புக்ஸ் என்ற சபதத்தோடு வருடம் முழுக்க புத்தகமாக படித்துத் தள்ளினார். அடுத்த வருடம் முழுக்க இயர் ஆஃப் ரன்னிங் என்று உலகம் முழுவதும் 365 மைல்கள் ஓடினார். இதெல்லாம் மக்களை இணைக்கும் விஷயங்கள் என்று மார்க் நம்புகிறார். நாடுகள் புவியியல் அமைப்பால் மட்டுமே பிரிந்திருக்க வேண்டும் என்பது தான் மார்க்கின் விருப்பம். 

ஹார்ட்:

மார்க் ஃபேஸ்புக்கை உலகின் முன்னணி சமூக வலைதளமாக வைத்துள்ளார். அவர் ஆண்டுக்கு பல கோடிகள் சம்பாதிக்கிறார். ஃபேஸ்புக் உலகின் ஒற்றை ஆளுமையாக வளர்ந்து வருகிறது என்பதைத் தாண்டி தன் மகள் மற்றும் மனைவிக்காக சரியான நேரத்தை ஒதுக்குகிறார் மார்க். வொர்க்-லைஃப் பேலன்ஸின் பர்ஃபெக்ட் உதாரணம் மார்க் என்கின்றனர்.  தன் மகள் மேக்ஸின் ஒவ்வொரு அசைவையும் தன் ஃபேஸ்புக் பதிவில் பதிவிட்டு வருகிறார். மேக்ஸுக்காக சான் - சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் என்ற பெயரில் உலகில் நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவேன் என்று உறுதி கொள்கிறார். தன் மனைவி பிரிசில்லாவுடனான காதல் அனுபவங்களையும் அவர் பகிர மறந்ததில்லை. டெக் சி.இ.ஓ-க்கும் குடும்பம், வாழ்க்கை இருக்கும் அதையும் அவர் ஜாலியாக தான் மற்றவர்கள் போல பகிர்வார் என்று மாஸ் காட்டி ஹார்ட் எமோஜி காட்டுகிறார் மார்க். அதோடு தனது பல பதிவுகளை இந்தியாவை மையப்படுத்தி பதிவிட்டு பெரிய சந்தையான இந்தியாவில் ஹார்ட் அள்ளுக்கிறார் மார்க்.

ஹா...ஹா...

மார்க் சமீபத்தில் நடந்த ஃபேஸ்புக்கின் F8 மாநாட்டை காமெடியாகத் துவக்கி அரங்கை அதிர வைத்தார். இந்த வாரம் இரண்டு F8 உங்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும். ஒன்று ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் படம், இன்னொன்று F8 மாநாடு என்று காமெடியாக ஆரம்பித்து, இந்த மாநாட்டுக்கான ரிப்போர்ட் 6000 பக்கங்களில் உள்ளது அதனை விளக்கினால் உங்களுக்கு போரடிக்கும் நான் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் என்று பேசியது, கால்பந்து வீரர் நெய்மரை ஆடுகளத்தில் நீங்கள் கில்லி, மெசெஞ்சர் ஃபுட்பால் கேமில் நீங்கள் கில்லியா என ஃபேஸ்புக் வீடியோவில் கலாய்ப்பது என சிரிக்க வைக்கிறார் மார்க்.

வாவ்!

தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக்கை பல்வேறு வழிகளில் மேம்படுத்தும் மார்க், ஆக்குமென்டட் ரியாலிட்டி என்ற விஷயத்தை ஏறக்குறைய உலகிற்கு அடுத்த தலைமுறை டெக்னாலஜியாக அறிமுகம் செய்ததில் மார்க்கின் பங்கு அளப்பரியது. வீட்டுக்குள் இருந்து கொண்டே அமேசான் காடுகளில் நடக்க முடியும், ஏன் வீட்டையே ஹாரிபாட்டர் உலகமாக மாற்ற முடியும் என்று மேஜிக் காட்டும் மார்க்குக்கு 'வாவ்' தான் சரியான ரியாக்சன்.

சோகம்!

மார்க்கின் சோக முகம் உடனேயே வெளிப்பட்டு விடும். ஆம் உலகின் எந்த மூலையில் சோகமான சம்பவம் நடந்தாலும் விரைவான குரலை எழுப்பும் நபர்களில் மார்க் தவிர்க்க முடியாதவராகிவிட்டார். நேபாளத்தில் பூகம்பம், சென்னையில் மழை வெள்ளம், பாரிஸில் குண்டுவெடிப்பு, சிரியாவில் தாக்குதல் என எல்லாவற்றுக்கும் மார்க் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இது சமூக விஷயங்களில் மட்டுமல்ல... தொழில் விஷயத்திலும் மார்க் அடிக்கடி சோக முகம் காட்டுகிறார். இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் சரி, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறிய போதும் சரி சோகம் தான் காட்டியது மார்க் முகம்.

ஆங்க்ரி!

மிஸ்டர் கூல் நபரான மார்க்கின் கோபம் செம வைரல். அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி ட்ரம்ப் அதிபர் என்றவுடன்... இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம் என ஸ்டேட்டஸ் தட்டி எதிர்ப்பைக் காட்டினார். அடுத்து 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்றதும், என்னங்க சார் உங்க சட்டம்னு ட்ரம்பை நேரடியாகத் தாக்கினார். சிரியாவில் அமெரிக்கா ஆயுதத் தாக்குதல் நடத்திய போது, 'இன்று தான் முதல் உலகப்போர் துவங்கியது' என நினைவு கூர்ந்து இனி போரில்லா உலகம் படைப்போம் என்றும் ட்ரம்பை விளாசினார். இப்படிப்பட்ட இளைஞனின் கோபத்தை அமெரிக்கா விரும்புகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மார்க் தனக்கு ஏற்றவாறு செதுக்கி வாழ்கிறார். எல்லா எமோஜிக்களும் மார்க் வாழ்க்கைக்குப் பொருந்துகிறது. நாளை அவருக்குப் பிறந்தநாள். அவருக்கு எந்த எமோஜி வழங்க விரும்பம் என்று கமெண்ட்டில் கூறுங்களேன்!

அடுத்த கட்டுரைக்கு