Published:Updated:

மார்க் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால்..! #HBDMarkZuckerberg

மார்க் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால்..! #HBDMarkZuckerberg
மார்க் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால்..! #HBDMarkZuckerberg

மார்க் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால்..! #HBDMarkZuckerberg

இன்று உங்கள் காதலியுடன் வாட்ஸ்அப்பில் பேச, நண்பர்களுடன் ஃபேஸ்புக்கில் செல்ஃபிக்கள் பகிர, இன்ஸ்டாகிராமில் உங்கள் காலை, மதிய உணவுகளை ஷேர் செய்ய எல்லாவற்றுக்குமே இந்த மனிதர் முக்கிய காரணம். ஒவ்வொரு நாளும் சமூக வலைதளத்தில் நம்மை புதுமையை உணர வைக்க நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த சிலிக்கான் வேலி சிஇஓ.  33 வயது இளைஞனால் உலகில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கைத் தரும் மார்க்கிடம் கற்க வேண்டியவை அதிகம். 

ஹார்வர்டு பல்கலைகழகத்துக்குள் மாணவர்களுக்கிடையேயான தொடர்புக்கு ஏற்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் இன்று உலக மக்கள் தொகையில் 4-ல் ஒருவரை தனது பயன்பாட்டாளர் ஆக்கியுள்ளது. மக்களை உலகின் ஒற்றை குடையின் கீழ் இணைப்பது தான் மார்க்கின் நோக்கம். அதற்கான படிகளை தான் மார்க் தற்போது செய்து வருகிறார்.

அமெரிக்காவில் மோடியுடனான மார்க் சக்கர்பெர்க்கின் கலந்துரையாடல் ஃபேஸ்புக் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை உலகிற்கு சொன்னது. அதில் மார்க் சக்கர்பெர்க் சொன்னது இதுதான்.

 ''ஃபேஸ்புக் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு போதிய வரவேற்பு இல்லை. அப்போது தான் எனது மெண்டார் ஸ்டீவ் ஜாப்ஸிடம் சென்று எனது பிரச்னைகளை எடுத்துக் கூறினேன். அவர் இந்தியாவுக்கு செல். உனது குழப்பத்துக்கான பதில் கிடைக்கும் என்றார். அதன் படி இந்தியா சென்றேன். உத்ராகாண்ட்  மாநிலத்தில் உள்ள நைனிடால் அருகேயுள்ள பத்நகர் என்ற இடத்தில்  கியன்ஞ்சி  தாம் என்ற கோவிலுக்கு சென்றேன். அங்குள்ள நீப் கரோலி பாபா என்பவரின் ஆசிரமத்தில் இரு நாட்கள் தங்கினேன். அதனருகில் இருந்த கோவிலுக்கு சென்றேன். மனதிற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஃபேஸ்புக்கும் மாற்றத்தை சந்தித்தது. 

இங்கு தான் ஃபேஸ்புக்கின் மந்திர வார்த்தையான கனெக்ட் என்ற வார்த்தையை பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. மக்களை கோவில் என்ற விஷயம் எப்படி இணைப்பில் வைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது, ஃபேஸ்புக்கை விற்றுவிடலாம் என்ற நிலையில் இருந்து மாற்றியது இந்தியா தான்...'' என்று சிலாகித்தார்.

இந்தியா மீது மார்க்கின் பாசம் அதோடு நின்று விடவில்லை. 2016ம் ஆண்டு இயர் ஆஃப் ரன்னிங்கை துவங்கப்போகும் அறிவிப்பை இந்தியாவில் பாராளுமன்றம் முன் ஓடிய புகைப்படத்தை பதிவு செய்து தான் அறிவிக்கிறார். ஃபேஸ்புக் லைவ் பற்றிய பதிவுக்கும் இந்தியாவில் உள்ளவர்களை தான் அடையாளம் காட்டுகிறார். தற்போது எக்ஸ்ப்ரஸ் ஃபேஸ்புக் வை-பைக்கும் இந்தியாவின் ரோட்டுக்கடைக்காரரை தான் அடையாளம் காட்டுகிறார். 

இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை அதனை அடிக்கடி இன்ஃப்ளுயன்ஸ் செய்ய வேண்டும் என்பது மார்க்கின் திட்டம் என்றாலும் மார்க்கின் இந்திய காதல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஃப்ரீ பேசிக்ஸுக்கு இந்தியா நோ சொன்ன போது சோகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினார் மார்க். பேச்சுகளில் கனெக்ட் என்ற வார்த்தையை எப்படி விடாமல்  வைத்திருக்கிறாரோ அதே போல் மேற்கோள் காட்டுவதில் இந்தியாவை விடாமல் வைத்திருக்கிறார்.

மக்களின் தேவையை அறிந்து கொள்ளவும், மக்கள் மனதில் ஃபேஸ்புக்கை ஒற்றை ஆளுமையாக்கவும் ஓடிக்கொண்டிருக்கும் மார்க். இந்தியாவையும், இந்தியர்களையும் கவனித்து தான் ஃபேஸ்புக்கை மாற்றி வருகிறார் என்பது மறக்க முடியாத உண்மை. மார்க்கை வெறும் சிஇஓவாக பார்க்காமல், நல்ல சமூக ஆர்வலராக இந்தியாவும், உலக நாடுகளும் பார்க்க துவங்கிவிட்டன. இதுக்கெல்லாம் விதை இந்தியா போட்டது என மார்க் சொல்லும் வார்த்தைகளில் வணிகமும், இந்தியாவின் பெருமையும் அடங்கி இருக்கிறது. 34வயதில் மார்க்கின் பயணம் அவரை அடுத்த லெவலுக்கு அழைத்து செல்லும்... வாழ்த்துக்கள் மார்க்...

ஊருக்கே ஃபேஸ்புக்ல வாழ்த்து சொல்றோம். அத நமக்கு கொடுத்த மார்க்குக்கும் வாழ்த்து சொல்வோம். ஹாப்பி பர்த்டே மார்க்....

அடுத்த கட்டுரைக்கு