Published:Updated:

ஃபேஸ்புக் கோடிங் எழுத மார்க்குக்கு எவ்வளவு நேரம் ஆனது தெரியுமா?

ஃபேஸ்புக் கோடிங் எழுத மார்க்குக்கு எவ்வளவு நேரம் ஆனது தெரியுமா?
ஃபேஸ்புக் கோடிங் எழுத மார்க்குக்கு எவ்வளவு நேரம் ஆனது தெரியுமா?

மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் வாலில் எழுதும் எல்லாமே வைரல்தான். நேற்று அவர் பதிவு செய்த இரண்டு பதிவுகளும் 14 ஆண்டுகால ஃபேஸ்புக் பயணத்தை நினைவு கூறும் விதமாக அமைந்தது. இயர் ஆஃப் ட்ராவலுக்கு நடுவே கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்துக்குள் சென்ற அவர், ஹார்வர்ட் நினைவுகளை மனைவி பிரிசில்லாவுடன் ஃபேஸ்புக் லைவ் மூலம் பகிர்ந்து கொண்டார்.

“H33... இந்த அறைக்குள் நாம் இப்போது செல்ல இருக்கிறோம். 13 வருடங்களுக்கு முன்னர், இங்கு தான் நான் கல்லூரியில் படிக்கும் போது தங்கியிருந்தேன். அதன் பிறகு இப்போது தான் முதல் முறையாக இங்கு திரும்ப வருகிறேன்” எனக் கூற, பிரிசில்லா அதனை சரி செய்து 14 ஆண்டுகள் என்கிறார். ஆனால் மார்க் ”வருடத்தை அதிகரித்து சொல்லாதே 13 வருடங்கள்தான்” என காமெடியுடன் ஆரம்பிக்கிறார். 

”இங்கு கல்லூரி படிக்கும் காலத்தில் மேலும் இரண்டு மாணவர்களுடன் இணைந்து இந்த அறையில் தங்கியிருந்தேன். நான் இருந்தபோது இருந்த இந்த அறைக்கும், தற்போது உள்ள அறைக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி எதுவுமே மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது.

கதவைத் திறந்து உள்ளே சென்றால், உங்கள் கண்ணில் முதலில் படுவது இந்த டெஸ்க் தான். இந்த டெஸ்க்கின் மேலே உள்ள புகைப்படம் நான் வைத்தது அல்ல. இப்போது யாரோ வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த டெஸ்க் மட்டும் மாறவே இல்லை. இதே இடத்தில் தான் எனது சிறிய கணினியை வைத்துக்கொண்டு இரண்டே வாரங்களில் ஃபேஸ்புக்கின் கோடிங்கை எழுதி முடித்தேன்.

இதில் மூன்று பேர் தங்கியிருந்தோம். அதில் ஒருவர் ஃபேஸ்புக்கின் துணை நிறுவனராக ஜஸ்டின். அவர் நிறைய கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர். தற்போது அசானா எனும் தனது சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்னொருவர் கிறிஸ். இவர் ஒரு ஸ்மார்ட்டான  நபர். கனெக்ட் எனும் ஃபேஸ்புக் மந்திரத்துக்கு சரியான நபர் இவர் தான். க்றிஸ் தற்போது ஃபேஸ்புக்கின் ப்ராடக்ட் மேனேஜராக உள்ளார்.

அடுத்து நாம் இருப்பது ஒரு குறுகலான அறை. இந்த அளவு ஒரு கர்ப்பமான பெண் செல்லும் அளவுக்கு தான் இருக்கும். இந்த சுவரில் தான் எங்களுக்கு தோன்றிய விஷயங்களை எழுதி வைப்போம்” என்கிறார் மார்க்.

அதன்பின் தற்போது அங்கு தங்கியிருக்கும் மாணவர்களுடன் உரையாடினார் மார்க். அதன்பின் பேசிய பிரிசில்லா தனது ஹார்வர்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 

தான் தொடர்ச்சியாக கோடிங் (Coding) எழுதிக் கொண்டிருந்ததையும், பக்கத்தில் இருந்த ஷவரில் இருந்து வெளியேறிய நீராவியின் சூடு எல்லாம் சேர்ந்து கணினி ரிப்பேர் ஆனதையும் நினைவு கூர்ந்த மார்க், இதனால் தான் டேட்டா சென்டர்களை குளுமையான இடத்தில் மைனஸ் 30 டிகிரியில் அமைத்தேன் என்றார். ”இங்கு வந்தது அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது” என்று வைவ்வை முடிக்கிறார் மார்க். இந்த வீடியோவை 12 மணிநேரத்தில் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதற்கு முன்பு பதிவிட்ட புகைப்படத்தை 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தட்டிய தனி ஒருவன் ஸ்டில்லும் செம.

படிச்ச காலேஜுக்கு திரும்பப் போறது ஆஸம். அதுலயும் உலகமே வியக்குற ஃபேஸ்புக் உருவாக்குன அந்த காலேஜுக்கு மார்க் திரும்ப போய் பாக்குறது ”வாவ் வாட் எ ஃப்ளாஷ்பேக்” ரகம் தான்.

அடுத்த கட்டுரைக்கு