Published:Updated:

''ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்'' - ஹார்வர்டில் என்ன பேசினார் மார்க்?

''ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்'' - ஹார்வர்டில் என்ன பேசினார் மார்க்?
''ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்'' - ஹார்வர்டில் என்ன பேசினார் மார்க்?

''ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்'' - ஹார்வர்டில் என்ன பேசினார் மார்க்?

ஹார்வர்டு பல்கலைகழக்கத்தின் முன்னாள் மாணவன் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத நபர் மார்க் சக்கர்பெர்க்கை பேச அழைக்கிறோம் என்ற சத்தம் ஒலித்தது தான்...அடுத்த நொடியே அனைவரும் மார்க்கை பார்க்கின்றனர்... 13 வருட ஹார்வர்டு அனுபவங்களை கொட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர்... ஹார்வர்டில் மழை பெய்கிறது. மேடைக்கு எதிரே இருந்த அனைவரும் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்துக் கொண்டும் உரையை கேட்க துவங்குகின்றனர்.

மேடை ஏறுகிறார் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்...

வணக்கம், பிரசிடெண்ட் ஃபாஸ்ட், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், பெருமைக்குரிய பெற்றோர்கள், ஆட் போர்டு உறுப்பினர்கள் மற்றும் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்களே....

நான் உங்களுடன் இன்று இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் செய்த சிலவற்றை என்னால் செய்ய முடியவில்லை. இன்று இந்த உரையை நான் வெற்றிகரமாக முடித்தால் ஹார்வர்டில் நான் ஒரு விஷயத்தை ஒழுங்காக முடித்திருக்கிறேன் என்று சொல்லலாம். வாழ்த்துக்கள் 2017ன் மாணவர்களுக்கு...

நான் ஒரு அதிர்ஷ்டமில்லாத பேச்சாளன். நான் ஹார்வர்டை விட்டு வெளியேறியதால் மட்டும் இதனை சொல்லவில்லை. வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இருவரும் இங்கு ஏதோ ஒரு காரணத்தால் ஒன்றாக இருக்கிறோம்.. பத்து வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் இங்கே நடந்திருக்கிறோம். இதே பாடங்களை படித்திருக்கிறோம். Ec10 வகுப்பில் உறங்கியிருக்கிறோம். நாங்கள் இங்கே வர பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறோம். இன்று நான் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இந்த தலைமுறையிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டேன் மற்றும் எப்படி இந்த உலகை நாங்கள் கட்டமைத்து வருகிறோம் என்பவை தான் அது.

அதற்கு முன்பு கடந்த இரண்டு நாட்களாக சில நல்ல நினைவுகளை ஹார்வர்டு எனக்கு தந்தது. ஹார்வர்டில் நீங்கள் படிக்க போகிறீர்கள் என்ற இமெயில் உங்களுக்கு கிடைத்த நாள் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? நான் சிவிலைசேஷன் கேம் விளையாடிக்கொண்டிருந்த நேரம் அது. நான் மாடியிலிருந்து கீழே ஓடுகிறேன். என் தந்தையை துரத்த மற்றும் சில காரணங்களுக்காக... அவரது நோக்கம் நான் இந்த கடிதத்தை திறப்பதை வீடியோ எடுப்பது தான். ஆனால் உண்மையில் அது ஒரு சோகமான வீடியோ... என் பெற்றோர்களுக்கு ஹார்வர்டில் நான் படிக்க வேண்டும் என்பது தான் ஆசை.

ஹார்வர்டில் உங்களது முதல் வகுப்பு நினைவிருக்கிறதா? என்னுடையது கம்ப்யூட்டர் சயின்ஸ் 121. நான் வகுப்புக்கு தாமதமாக வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் என் டி-ஷர்ட்டின் உள்பக்கம் வெளியே உள்ளது கூட தெரியாமல் வந்திருக்கிறேன். இதனால் என்னிடம் யாரும் பேசவில்லை. ஒருவரைத் தவிர, கே.எக்ஸ் ஜின் இன்று அவர் ஃபேஸ்புக்கில் பெரிய பொறுப்பில் இருக்கிறார், 

ஆனால் ஹார்வர்டில் எனது சிறந்த நினைவுகள் என்றால் பிரிசில்லாவுடனான சந்திப்பு தான், நான் கேலி இணையதளமான ஃபேஸ்மேஷை வடிவமைக்கிறேன். பல்கலைக்கழக நிர்வாகம் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறது. நான் வெளியேற்றப்படுவேன் என்று எல்லாரும் நினைக்கிறர்கள். என் நண்பர்கள் பார்ட்டிக்கு என்னை அழைக்கிறார்கள். அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த பார்ட்டியில் பிரிசில்லாவை சந்தித்தேன். முதலில் பாத்ரூமுக்கு செல்லும் வரிசையில் பிரிசில்லாவை சந்தித்தேன். அப்போது கூறியது இன்னமும் நினைவிருக்கிறது. மூன்று நாட்களில் என்னை கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவார்கள். நாம் உடனடியாக டேட்டிங் செல்வோம் என்று கூறினேன். இப்போது யார் வேண்டுமானாலும் இங்கு அந்த வரிகளை பயன்படுத்தலாம். 

எதுவும் முடிந்துவிடவில்லை. நான் எனக்காக எல்லாவற்றையும் செய்ய துவங்கினேன். நான் பிரிசில்லாவை காதலிக்க துவங்கினேன், ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கெலாம் ஃபேஸ்மேஷ் தான் ஃபேஸ்புக் சாம்ராஜ்யம் உருவாகக் காரணம். ஃபேஸ்மேஷ் இல்லாமல் பிரிசில்லாவை கண்டுபிடித்திருக்க மாட்டேன். பிரிசில்லா என் வாழ்வில் மிகவும் முக்கியமானவள். இங்கு என் நாட்களை கட்டமைத்ததில் அவளது பங்கு அதிகம். 

இங்கு தான் நாம் அனைவரும் வாழ்நாள் நட்பை துவங்குகிறோம். சிலர் தங்கள் குடும்பத்தை இங்கிருந்து தான் துவங்குகிறார்கள். இந்த இடத்துக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். நன்றி ஹார்வர்டு.

இன்று நான் ''நோக்கம்'' பற்றி பேசப்போகிறேன். இந்த பட்டமளிப்பில் விழாவில் உங்களுக்கான நோக்கம் பற்றி பேசுவது என் நோக்கமல்ல. நாம் மில்லினியல்கள். நான் கணிப்புகளுடன் கூடிய முயற்சிகளை செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு என் நோக்கம் என்ன என்று கண்டறிகிறேன் என்றால் அது மட்டும் போதாது. இங்கே நமக்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால் நோக்கமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

ஒருமுறை ஜான் ஜென்னடி நாசா விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவர் துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து கென்னடி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க... அதிபர் அவர்களே நான் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உதவிக்  கொண்டிருக்கிறேன் என்கிறார்.

நம்மைவிட நமது நோக்கம் மிகப்பெரியது. அது நமக்கு தேவையும் கூட..அது நம்மை முன்னேற்றி செல்லும். உண்மையான மகிழ்ச்சியை தரும். இன்று பட்டம் பெறும் போது இதனை சொல்வது முக்கியமானதாக தோன்றுகிறது. நோக்கம் என்பது உங்கள் வேலை, உங்கள் தேவாலயம், உங்கள் சமூகம் ஆனால் இன்று தொழில்நுட்பமும், தானியங்கி தன்மையும் வேலைகளை காலி செய்கின்றன. சமூகத்தின் ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்கள் குறைகிறார்கள். நிறையே பேர் தொடர்புகளற்றும், அழுத்தத்தோடும் இருக்கிறார்கள். 
நான் தற்போது அமெரிக்கா முழுக்க பயணித்து வருகிறேன். குழந்தைகளுடனும், சிறார்களுடனும் பேசி வருகிறேன். அவர்கள் கூறுவது பள்ளிப்படிப்புக்கு பின்பு நாங்கள் எதாவது ஒரு நல்ல இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதைத் தான், அதேபோல் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் தங்களது பழைய வேலை திரும்ப கிடைக்காது. மற்றும் அவர்களுக்கான இடங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது தான் இன்றைய தலைமுறையின் சவால். புதிய வேலைகளை மட்டும் உருவாக்க வேண்டாம். ஆனால் புதுப்பிக்க கூடிய நோக்கங்களை உருவாக்கி அதன் படி நடக்க வேண்டும்.

எனக்கு இன்னமும் அந்த இரவு நினைவிருக்கிறது. ஃபேஸ்புக்கை அறிமுகம் செய்த நாள். கிர்க்லேண்ட் ஹவுஸில் என நண்பர் கே.எக்ஸுடன் இருந்தேன். அன்று எங்களுக்கு ஹார்வர்டை எப்படி இணைப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒருநாள் உலகத்தை யாராவது ஒருவர் இணைப்பார்கள் என்றும் தோன்றியது. அந்த ஒருவர் நாங்கள் தான் என்பது அப்போது தெரியவில்லை. அப்போது இதனைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பெரிய டெக் நிறுவனங்கள் இதனை செய்யும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் ஐடியா ரொம்ப தெளிவாக இருந்தது. உலகை இணைக்க வேண்டும் என்பது தான் அது. அதனை நோக்கி தான் தினந்தோறும் நகர்கிறோம்...நகர்வோம்...

எனக்கு தெரியும் இந்த ஹார்வர்டில் இதே போன்று பல கதைகள் இருக்கும். நீங்கள் உறுதியாக இல்லை என்றால் வேறொருவர் செய்துவிடுவார். அப்படி யாரும் செய்யவில்லை என்றால் நீங்கள் கட்டாயம் செய்யுங்கள். 

ஆனால் நோக்கம் என்பது உங்களுக்கானதாக இல்லாமல், மற்றவர்களுக்கு உதவுவதாக அமைய வேண்டும். நீங்கள் கவனித்து பாருங்கள். எனக்கு நிறுவனத்தை அமைப்பது நோக்கமில்லை. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எங்களுடன் அனைத்து மக்களும் இணைய வேண்டும். அவர்கள் எங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும். அதுவே நான் என்ன உருவாக்கி கொண்டிருக்கிரேன் என்பதை சொல்லும்.

இந்த இரண்டு வருடங்களில் நிறைய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விலைக்கு கேட்டன. நான் விற்பதாய் இல்லை. எனது நோக்கம் நிறைய மக்களை இணைப்பது தான். அதற்கான நாங்கள் முதல் நியூஸ் ஃபீடை உருவாக்கினோம். அது இந்த உலகம் எப்படி மாறி வருகிறது என்பதை சொல்லித் தருகிறது. 

எல்லாரும் விற்பதை நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் எந்த நோக்கத்துக்காக உருவாக்கினோம் என்பதை பார்க்கவில்லை. இது ஒரு ஸ்டார்ட்-அப். கனவுகள் ஒருநாள் நிறைவேறும் அதுவரை காத்திருப்போம். ஒரு கோபமான விவாதத்தில் எனது ஆலோசகர் ஃபேஸ்புக்கை விற்கும் முடிவை நான் எடுக்கவில்லை என்றால் எனது எல்லா முடிவுகளை வாழ்நாளில் தவறாகும் வாய்ப்புள்ளது என எச்சரித்தார். அது தான் ஃபேஸ்புக்கின் கடினமான காலம். நான் நாங்கள் செய்வதில் நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் நாங்கள் தனிமையாய் இருப்பதாய் உணர்ந்தோம். 22 வது இளைஞனாக எதை செய்வது என்று தெரியாமல் இருந்தேன். இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி எந்த ஐடியாவும் இல்லை. 

இப்போது வருடங்கள் கடந்துள்ளன. எது நோக்கம் என்று தெரிந்துள்ளது. அதனை நோக்கி பயணிக்கிறோம். 
இன்று நான் பல இடங்களில் உலகை உருவாக்குவதற்கான நோக்காம் பற்றி பேசுகிறேன். சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும். சுதந்திரமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.
முதலில் பெரிய அர்த்தமுள்ள திட்டங்களை எடுத்துக்கொள்வோம். நமது தலைமுறை பல கோடி வேலைகளை தானியங்கி தன்மை என்ற பெயரில் காலி செய்கிறது. 

அனைத்து தலைமுறைகளும் அவர்களுக்கான வேலைகளை வரையறுத்துள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மனிதனை நிலாவில் நிலைநிறுத்த வேலை பார்க்கின்றனர். போலியோவை ஒழிக்க மில்லியன் பேர் தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிகின்றனர். ஹோவர் அணையைக் கட்டி முடிக்க பல லட்சம் பேர் உழைக்கின்றனர். மனிதனின் எல்லா உழைப்புக்கு பின்னாளும் ஒரு நோக்கம் இருக்கிறது. இவர்கள் வெறும் வேலையை மட்டும் பார்க்கவில்லை. தங்கள் நாட்டுக்கு பெருமையையும் சேர்த்து சேகரிக்கிறார்கள். 
இப்போது நமக்கான நேரம் நமக்கு பெரிய அணைகளை கட்ட தெரியாது, அல்லது மில்லியன் மக்களை ஒரு விஷயத்துக்காக ஒருங்கிணைக்க தெரியாது. ஆனால் ஒரு ரகசியத்தை கூறுகிறேன். ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. ஃபேஸ்புக் ஆரம்பிக்கும் போது எனக்கும் தெரியாது என்னால் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும் என்று.

சிறந்தவர்களாக இருப்போம். ஆனால் தவறான புரிதல் உள்ளவராக நம்மை தயார்படுத்தி கொள்வோம். பெரிய திட்டங்கள் உள்ளவரை நகைச்சுவையாக பார்ப்பது எப்போதும் உள்ள விஷயம். கஷ்டமான வேலைகளை செய்பவர்களும் கூட சவால்களை சரியாக புரிந்து கொள்ளாததற்காக குற்றம்சாட்டப்படுகின்றனர். நீங்கள் வேகமாக இருக்கிறீர்கள் என்ற குற்றம் சாட்டப்பட்டால் இன்னும் வேகமாக முன்னேறுங்கள் ஏனேனில் குற்றம் கூறுபவர்கள் உங்கள் வேகத்தை குறைக்க முயல்கிறார்கள்.

இந்த சமூகத்தில் பெரும்பாலும் நாம் பெரிய விஷயங்களை ஆரம்பிக்கத் தவறுகிறோம். காரணம் தவறு இழைத்துவிடுவோமே என்ற பயம் தான். ஆனால் உண்மை என்னவென்றால் இதில் எந்தத் தவறுமே நாம் ஒரு விஷயத்தை ஆரம்பித்ததற்குத் தடையாய் இருந்ததில்லை. 


எதற்காக நாம் காத்திருக்கிறோம், இந்த தலைமுறை வேலைகளை வரையறை செய்ய வேண்டிய நேரமிது. பருவநிலை மாற்றங்களை தடுப்பது எப்படி என்பதைப் பேசுவதற்கு முன்னால் பூமியை அழிக்காமல் பாதுகாப்பது எப்படி என்றும், பல லட்சம் பேரை இணைத்து சோலார் அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பேசுவோம். நோயை குணப்படுத்துவதைப் பற்றி பேசாமல் நோயே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம். அது தான் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஜனநாயகத்தை நாகரீகமாக்குவோம். ஆன்லைனில் வாக்களிக்க வைப்போம். கல்வியை தனிப்பட்ட முறைக்கு வடிவமைப்போம் அது அனைவரையும் கல்வி கற்க வைக்கும். 

இவையெல்லாம் சாத்தியப்படும் வளையத்துக்குள் இருப்பவை. சமூகத்தில் அனைவருக்கும் பெரிய செயல்களை செய்ய வாய்ப்பளிப்போம். அது செயலுக்காக அல்லாமல் நோக்கத்துக்காக இருக்கட்டும். நிறைய பெற்றோர்கள் ஒரு நிலையான வேலைக்கு தங்கள் குழந்தைகள் செல்ல வேண்டும் என்பதை தான் விரும்புகிறார். ஆனால் நாம் எல்லாம் தொழில்முனைவோர்கள். நாம் திட்டங்களை உருவாக்குகிறோம் அல்லது அதில் நமக்கான இடத்தை உருவாக்குகிறோம். அது தான் சிறந்தது. இந்த தலைமுறை தான் தொழில்முனைதலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 

நான் முதன் முதலில் ஃபேஸ்புக்கை உருவாக்கவில்லை. கேம்கள், சாட் சிஸ்டம், மியூஸிக் லேயர் என பலவற்றை உருவாக்கினேன். நான் மட்டுமல்ல. ஜே.கே.ரெளலிங் ஹாரி பாட்டரை எழுதுவதற்கு முன்னால் 12 முறை நிராகரிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய வெற்றிகளை தோல்விகள் இல்லாமல் பெற முடியாது. ஆனால் இன்று சொத்துகளில் உள்ள சமநிலையின்மை அனைவரையும் காயப்படுத்துகிறது. 
இறுதியாக 2017ன் மாணவர்களே! நீங்கள் ஒரு நோக்கமுள்ள உலகில் பட்டம் பெற போகிறீர்கள். இதனை உருவாக்குவது உங்கள் விருப்பம். நீங்கள் நினைக்கலாம் என்னால் இதனை செய்ய முடியுமா என்று?

நினைவில் கொள்ளுங்கள், நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் படித்த வகுப்பில் ஆண்கள், பெண்களுக்கு என்ற கிளப் இருந்தது. ஒரு நாள் நான் அவர்களிடம் கல்லூரியைப் பற்றி வகுப்பு முடிந்தவுடன் பேசி கொண்டிருந்தேன். டாப் மாணவர்களில் ஒருவன் கையை உயர்த்தி கேள்வியைக் கேட்டான், கடந்த வருடம் அவனது பிறந்தநாள் அன்று காலை உணவுக்கு அழைத்தேன், அவன் வரவேண்டும் என்று நினைத்தேன். அதனால் அழைத்தேன். அவன் மாணவர்கள் படும் அவதி குறித்து பேசினான். நான் உடைந்து போனேன். அவன் தனது நாட்டை தனக்கு பாரமாக பார்க்கிறான். அவனது கனவுகளை சிதைத்து அவனை கல்லூரிக்குள் கொண்டு செல்பவர்கள் பற்றி நினைவு கூறுகிறான். ஆனால் அதற்கு அவன் வருந்தவில்லை. அவன் அவனைப் பற்றி நினைக்கவில்லை. அவனுக்கு பெரிய நோக்கமுள்ளது. அவன் மக்களோடு இருக்க விரும்புகிறான். 

இது தற்போது உள்ள சூழலுக்கு எதையோ சொல்ல வருகிறது. அவன் பெயரை நான் கூறப்போவதில்லை அது அவனுக்கு ரிஸ்க்காக அமையும். அந்த கதவை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் ஒன்றை நினைத்துக் கொண்டேன். நான் என் மகளை ஒவ்வொரு நாளும் தூங்க வைக்கும் போது அவளது எதிர்காலம் குறித்து நினைக்கிறேன். 

எனக்கு நம்பிக்கை இருக்கிறது உங்களது தைரியம் உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். வாழ்த்துக்கள்... 

இவ்வாறு பேசி முடித்தார் மார்க்.

அடுத்த கட்டுரைக்கு