Published:Updated:

பிரேக்கிங் செய்தி எதையும் மிஸ் செய்யாமல் இருப்பது எப்படி? #NewsApps

பிரேக்கிங் செய்தி எதையும் மிஸ் செய்யாமல் இருப்பது எப்படி? #NewsApps
பிரேக்கிங் செய்தி எதையும் மிஸ் செய்யாமல் இருப்பது எப்படி? #NewsApps

பிரேக்கிங் செய்தி எதையும் மிஸ் செய்யாமல் இருப்பது எப்படி? #NewsApps

எந்தச் செய்தி என்றாலும் ரியல் டைமில் தெரிந்துகொள்வதுதான் இன்றைய ஃபேஷன். ஒரு சினிமா வெளியானால் கூட முதல் வாரமே பார்த்துவிடத்தான் பரபரக்கிறோம். அந்த வகையில் உடனடியாக செய்திகள் தெரிந்துகொள்ள உதவும் மொபைல் ஆப்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.


ஃபீட்லி(Feedly) :

​நியூஸ் ஆப்ஸ்களில் மிகப் பிரபலமான ஒரு ஆப் தான் இந்த ஃபீட்லி. இது ஒரு ஆர்.எஸ்.எஸ்.ரீடர்(அந்த ஆர் எஸ் எஸ் இல்லைங்க).  உங்களது நம்பிக்கையான தளங்களை வைத்து சொந்த முறையிலான நியூஸ் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும். இது முகநூல், IFTT, ஒன் நோட், டுவிட்டர், பின்டிரஸ்ட், எவர்நோட் போன்றவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தி முழுமை நிலையை உருவாக்கும். இன்னொரு அம்சம் என்னவென்றால், உங்களது மொபைல் அல்லது கணினியைப் பயன்படுத்தி அவர்களது வலைதளத்துடன் உங்களுக்கான தளத்தை நீங்கள் உருவாக்க இயலும்.  இந்த ஆப் வழங்கும் சேவைகள் யாவும் இலவசமே.

ஃபிலிப்போர்டு(Flipboard):
 உங்களுக்கு பிடித்தமான நியூஸ்  தளங்களைத் தொகுத்து உங்களுக்கான பிரத்யேக custom feed ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதில் ஃபன் அனிமேசன், பெரிய அளவிலான இமேஜ் & யூ.ஐ. ஆகியவை அமைந்துள்ளன. எனவே இந்த ஆப் ஒரு டிஜிட்டல் இதழைப் போன்று காட்சியளிக்கும். ஃபீட்லியுடன் ஒப்பிடுயில் அதைவிட சிறியதாக இருக்கும். டிஸ்கவரி போன்ற கூடுதல் அம்சங்கள் அமைந்திருத்தல் இதன் சிறப்பு. இதுவும் முழுக்க முழுக்க இலவசம்.

கூகுள் ஆப்(Google app):

​நியூஸ் ஆப்-களில் தலைசிறந்த ஆப் என்றால் அது கூகுள் ஆப் தானாம். இதன் மூலம் உலகின் தட்ப வெட்ப நிலை, ரசனை மிகுந்த செய்திகள், பயனுள்ள தகவல்கள் போன்றவற்றைக் கண்டு களிக்க இயலும்.  இதன் எதிர்மறை விஷயம் என்னவென்றால் உங்களது தேடல்களை வைத்து உங்களது ஆர்வத்தைத் தானாகவே தீர்மானம் செய்து கொள்ளும். ஒருவேலை உங்களுக்கு பிடிக்காத அல்லது தேவையில்லாத ஒன்றை நீங்கள் தேடியிருந்தால் கூட அது உங்களுக்கு பிடிக்கும் என நினைத்துக் கொண்டு அடிக்கடி அதனை உங்கள் டிஸ்ப்லேயின் முன் கொண்டு வந்து எரிச்சல்களை ஏற்படுத்தும். 

ஐ-னோ-ரீடர்(Ino reader):

​இதுவும் எண்ணற்ற சேவைகளை வழங்கக்கூடிய  ஒரு நியூஸ் ஆப். இதன் மூலம் ஒரு நியூஸ் ரீடரைப் பெற்று உங்களது ரசனைகளுக்குத் தகுந்தாற்போல் செய்திகளைத் தேர்ந்தெடுக்க இயலும்.  தலைப்புகளைத் தேட இயலாதோர்க்கு 28 ப்ரீ-மேட் தலைப்புகளை இத்தளம் வழங்குகிறது. ஆஃப்லைன் சப்போர்ட், ஒழுங்கு முறைத் தலைப்பு போன்ற சேவைகளையும் இத்தளம் உடன் வழங்குகிறது. இதன் செட்டிங்ஸை தகுந்த நேரத்தில் தானாகவே மாற்றியமைக்கும்.

பாக்கெட்(Pocket):

​மிகவும் வித்தியாசமான செயல்திறன் கொண்ட ஆப் இது, இதனிடம் ஆஃபர் கன்டன்ட் இல்லை. ஒரு நாளில் நீங்கள் என்ன விதமான நியூஸ் கண்டண்ட்டை பயன்படுத்தினாலும் இந்த ஆப் அதனை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் முகநூல், டுவிட்டர் போன்ற தளங்களில் எதேனும் முக்கியமான ஒன்றைக் கண்டு அப்போதைய நேரத்தில் படிக்க இயலாமல் போனால் அதைப் பாக்கெட் ஆப்-ல் திணித்து இயன்ற நேரத்தில் படித்துக் கொள்ளலாம். ஆஃப்லைன் சப்போர்ட், ஒழுங்கு முறையிலான படிக்கும் அனுபவம், டிஸ்கவரி போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளன. அளவற்ற சேமிப்புக் கிடங்காகவும் விளங்குவதோடு டெக்ஸ்ட்-ஸ்பீச் முறையிலான வாசிப்பு வசதியையும் வழங்குகிறது.

போட்கேஸ்ட்& ரேடியோ அடிக்ட்(Podcast & Radio addict):

​நியூஸ் ஆப்ஸ்-களில் ஆல்-இன்-ஒன் அழகு ராஜாவாக விளங்குவது இந்த ஆப் தான். ஆர்.எஸ்.எஸ்.& போட்கேஸ்ட் இரண்டும் கலந்த கலவை தான் இவர். 4,50,000 போட்கேஸ்ட்-களை ஒன்றாகப் பெற்ற பெருமையுடையதும் இதுவே. எந்த நியூஸ் தோற்றுவாயை உங்களுக்குப் பிடிக்குமோ இதனை நீங்கள் subscribe செந்து கொள்ளலாம். உதவியாளர், ப்ளேலிஸ்ட், யூ-டியூப் போன்ற பல வசதிகளோடு இத்தளம் இயங்குகிறது. 


தமிழ்ச் செய்திகள் தான் உங்களது ஒரே தேவையென்றால் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அதற்கு சரியான சாய்ஸ். குழப்பமற்ற வடிவம், அழகான எழுத்துருக்கள், சுருக்கமான செய்திகள், போதுமான அளவிலான கேட்டகிரிகள் என தெளிவான அனுபவத்தை வழங்குகிறது தமிழ் ஃப்ளாஷ் நியூஸ்.

அடுத்த கட்டுரைக்கு