Published:Updated:

சன் நெக்ஸ்ட் ஆப்பின் ப்ளஸ்/மைனஸ்! #SunNxt

கார்த்தி
சன் நெக்ஸ்ட் ஆப்பின் ப்ளஸ்/மைனஸ்!  #SunNxt
சன் நெக்ஸ்ட் ஆப்பின் ப்ளஸ்/மைனஸ்! #SunNxt

சன் நெக்ஸ்ட் ஆப்பின் ப்ளஸ்/மைனஸ்! #SunNxt

கேபிள் டிவியின் எளிமையும், மலிவான விலையையும் கடந்து, டிடிஎச் பலருக்குப் பிடிக்கக் காரணம் அதன் தரமான வீடியோக்கள் தான். குவாலிட்டியான வீடியோக்களை நோக்கி நகர்பவர்களை குறிவைத்து, அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைமும், நெட்ஃப்ளிக்ஸும் இந்தியாவில் கால் பதித்து இருக்கிறார்கள். அவர்களின் ஆன்லைன் தளங்களுக்கென பிரத்யே வீடியோக்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் வெளியிடுகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ் ஒருபடி மேலே சென்று, சில புதிய படங்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு என ஒளிபரப்பவும் செய்கிறார்கள். ஸ்டார் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் , இன்ன பிற சானல்களின் ஆன்லைன் பதிவுகளை மொத்தமாக வெளியிடுகிறது ஹாட் ஸ்டார்.

இப்போது இந்த டிஜிட்டல் போட்டியில், சன் நெட்வொர்க்கும் இணைந்து இருக்கிறது. சன் டிவியின் தொடங்கிய நாளான ஏப்ரல் 14 அன்று வெளியாக வேண்டிய சன் நெக்ஸ்ட் என்னும் டிஜிட்டல் வெர்ஷன்,  ஜூன் 9 அன்று கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகி இருக்கிறது. சன் குழுமத்தில் இருக்கும் அனைத்து சானல்களும், இந்த தளத்தில் இருக்கிறது. சன் நெக்ஸ்ட்டின் ப்ளஸ், மைனைஸை பார்ப்போம். 


ப்ளஸ்:
தென்னிந்தியாவின் டாப் சானல்களை தன் வசம் சன் குழுமம் பெற்று இருப்பதால் கண்டெண்டுக்கு பஞ்சமில்லை. தமிழைப் பொறுத்தவரை, சன் நெட்வொர்க்குடன், தந்தி தொலைக்காட்சியும், நியூஸ் 7 தொலைக்காட்சியும் தற்போதைக்கு இதில் இருக்கிறது. அந்த சானல்களின் HD வெர்ஷனும் இருக்கிறது. ஆப் மிகவும் எளிமையாகவும், தடையின்றியும் இயங்குகிறது. சன் குழுமம், தன் வசம் வைத்திருக்கும் அனைத்துப் படங்களையும், HD தரத்தில் ப அப்லோடு செய்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளியான பைரவா , போகன் உட்பட பல படங்களை விளம்பர இடைவேளையின்றி HD தரத்தில் கண்டு ரசிக்கலாம். அதே போல், சீரியல், இன்ன பிற தொடர்களை வரிசைப்படுத்தி, தனி கேட்டகரியில் அப்லோடு செய்திருக்கிறார்கள். அவற்றைத் தேடுவது மிகவும் எளிதாக இருக்கிறது. அதே போல், வீடியோவின் குவாலிட்டி தரத்தையும் நாமே தேர்வு செய்ய முடியும். தொடர்ச்சியாக பயன்படுத்திய போது, ஆப் எங்கும் ஹேங் ஆகவில்லை. குறிப்பாக, இனி தென்னிந்திய மொழிகளின் பல்வேறு படங்களை, வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம், அதுவும் லீகலாக. . ஒரு அக்கௌன்ட் வைத்து நம்மால், மூன்று லாக் இன் செய்ய முடியும்.

டெஸ்க்டாப் வெர்சனுக்கு Sun Nxt


மைனஸ்:
அமேசானின் ப்ரைம் வீடியோக்களில் இருக்கும் முக்கியமான விஷயம். அமேசானின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, (வருடத்திற்கு 500ரூ), ப்ரைம் வீடியோ அக்செஸ் கூடுதலாக வழங்கப்படுகிறது.இரண்டாம் ஆண்டில் இருந்து இதன் விலை 900ரூ என சொல்லப்படுகிறது. அதே போல், ஹாட் ஸ்டாரிலும் நாம் பணம் எதுவும் செலவு செய்யாமல், இலவசமாக சில வீடியோக்களை பார்க்க முடியும். ஆனால், சன் நெக்ஸ்ட்டில், நெட் ஃப்ளிக்ஸ் போல உள்ளே நுழைவதற்கே பணம் கட்ட வேண்டும். முதல் மாதம் இலவசம் என சொல்லப்பட்டாலும், முதல் மாதத் தொகையான 50 ரூபாயைக் கட்ட வேண்டும். இதை இரண்டாவது மாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதே போல்,  சன் நெக்ஸ்ட் ஆட்டோ ரென்யூவல் மோடில் இயங்குகிறது. டீஃபால்ட்டாகவே, அதன் செட்டிங்க்ஸ் படி, அடுத்த மாதத்தின் போது, உங்கள் கார்டின் இருந்து, பணம் எடுக்கப்பட்டு விடும். நாம் ஆட்டோ ரென்யூவலை  கேன்சல் செய்ய தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என  குறிப்பிட்டு இருக்கிறார்கள். (இதைப்பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை)

ஆப் இன்னும் பல விஷயங்களில் அதன் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. வீடியோக்களுக்கென ஃபாஸ்ட் fwd/backward ஆப்சன்கள் இல்லை.அமேசான், நெட்ப்ளிக்ஸ் போல், சன்னும் சில வீடியோக்களை எக்ஸ்குளூசிவ் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், அவை என்ன என்பது பற்றிய எந்த விவரமும் இல்லை. அதே போல், நாம் கட்டும் பணத்திற்கு ப்ரீமியம் செர்விஸ் தருவதாக சொல்கிறார்கள்.இவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பது தான். ஆனால்,  சூப்பர் ப்ரீமியம் கன்டென்ட் என சொல்லப்படும் சில வீடியோக்களுக்கு நாம் தனியாக பணம் கட்ட வேண்டுமாம். 


விலை: ​​​​​​​
தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஆன்லைன் ப்ரொவைடர்களில் சன் நெக்ஸ்ட் தான் விலை குறைவு. நெட்ப்ளிக்ஸ் (மாதம் 500 குறைந்தது), ஹாட் ஸ்டார் (199 மாதம்), அமேசான் ப்ரைம் (ஆண்டு சந்தா மட்டுமே 500 ரூபாய், மாதத் தொகையாக கட்ட முடியாது). சன் நெக்ஸ்ட்டின் விலை இவற்றோடு ஒப்பிட்டால் குறைவு தான். 
மாதம் 50ரூ
90 நாட்கள் 130ரூ
365 நாட்கள் 480ரூ

கூகிள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய Sun Nxt

அடுத்த கட்டுரைக்கு