Published:Updated:

ஒன்ப்ளஸ் 5... டிசைன் தாண்டி வசதிகளிலும் ஐபோனை மிஞ்சுகிறதா? #MobilePreview

ஒன்ப்ளஸ் 5... டிசைன் தாண்டி வசதிகளிலும் ஐபோனை மிஞ்சுகிறதா? #MobilePreview
ஒன்ப்ளஸ் 5... டிசைன் தாண்டி வசதிகளிலும் ஐபோனை மிஞ்சுகிறதா? #MobilePreview

ஒன்ப்ளஸ் 5... டிசைன் தாண்டி வசதிகளிலும் ஐபோனை மிஞ்சுகிறதா? #MobilePreview

ன்ன விலை, என்ன சிறப்பம்சம், எப்போது விற்பனை என நிறைய எதிர்பார்ப்புகளிடையே ஒருவழியாக வெளியாகிவிட்டது ஒன்ப்ளஸ் 5. அமெரிக்காவில் இதன் விற்பனை வரும் 27-ம் தேதி துவங்கவிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதற்கு முன்பாகவே விற்பனைக்கு வருகிறது ஒன்ப்ளஸ் 5. இந்தியாவில் போனை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடக்கிறது. இதைத்தொடர்ந்து அமேசான் தளத்திலும் எக்ஸ்க்ளூசிவ்வாக விற்பனைக்கு வருகிறது. இதுமட்டுமின்றி சென்னையிலும் வரும் 24-ம் தேதி ஒன்ப்ளஸ் 5 வெளியாகிறது. டூயல்கேமரா, ஐபோன் 7 டிசைன் ஆகிய விவரங்கள் மட்டுமே முன்னர் வெளியாகியிருந்தது. அவற்றைத் தவிர ஒன்ப்ளஸ் 5-ல் வேறு என்ன ஸ்பெஷல்?

சொல்லி அடித்த ரேம்:

ஹை-எண்ட் மொபைலின் வசதிகள் + ஆனால் ப்ரீமியம் மொபைலின் விலை என்பதுதான் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சக்சஸ் ஃபார்முலா. இந்தமுறையும் அதனை அப்படியே தக்கவைத்திருக்கிறது ஒன்ப்ளஸ். 5.5 இன்ச் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, புதிய மற்றும் பவர்ஃபுல்லான Qualcomm® Snapdragon ™ 835 பிராஸசர், 6 GB ரேம், 64 GB இன்டர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு நௌகட்டோடு இணைந்த ஆக்சிஜன் OS, 3300 mAh பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜிங் வசதி ஆகியவற்றோடு வெளிவந்திருக்கிறது ஒன்ப்ளஸ் 5. முந்தைய வெர்ஷனோடு ஒப்பிட்டால், பிராஸசர் மட்டும்தான் குறிப்பிடத்தகுந்த மாற்றம். 

இவைதவிர மற்றொரு 'வாவ்' சொல்ல வைக்கும் இன்னோர் அம்சம் 8 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் மெமரி கொண்ட வேரியன்ட்தான். இதுகுறித்த தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். ஆனால் ஆப்பிள் உடம்புக்குள், ஆண்ட்ராய்டு புகுந்தது போல,  டிசைன் மற்றும் வடிவமைப்பில் அப்படியே ஐபோன் 7 மாதிரியே இருக்கிறது ஒன்ப்ளஸ் 5. இது ஒரு சிறப்பம்சமாகக் கருதப்பட்டாலும் கூட, இதுவும் ஒரு மைனஸ்தான். வெறும் நான்கு வருடங்களிலேயே வியக்கத்தக்க வகையில் வளர்ந்த நிறுவனம் ஒன்ப்ளஸ். தரம், விற்பனை ஆகியவற்றால் 'சீன மொபைல்' என்ற முத்திரை தன் மீது பதியவிடாமல் மற்றவற்றிடம் இருந்து தனித்துத் தெரிந்தது. ஆனால் தற்போது சீனாவின் டூப்ளிகேட் போலவே இன்னொரு போனின் டிசைனை நகலெடுத்திருப்பது நல்லதல்ல. ஆனால் தரம், விற்பனை , பிசினஸ் ஆகியவற்றில் இன்னும் பெரிய உயரத்தை எட்டாவிட்டாலும் கூட, தற்போது ஒன்ப்ளஸ் போன்கள்  ஆப்பிளோடு ஒப்பிட்டு பேசப்படுவதற்கும் இதுதான் காரணம்!

டூயல் கேமரா:

ரியர் கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் கேமரா (f/1.7), 20 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் (f/2.6) மற்றும் டூயல் LED ஃபிளாஷ் என ஸ்ட்ராங்காக இருக்கிறது ஒன்ப்ளஸ் 5. முன்பக்கத்தில் ஸ்க்ரீன் ஃபிளாஷ் உடன் கூடிய 16 எம்.பி ஃப்ரன்ட் கேமரா இருக்கிறது. இதற்குமுன்பு வெளிவந்த ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3T இரண்டுமே கேமரா ஃபெர்பார்மன்ஸில் செமத்தியாக ஸ்கோர் செய்தவை. அதனை இந்தமுறையும் ஒன்ப்ளஸ் தக்கவைக்கும் என நம்பலாம். 

பெர்பார்மன்ஸில் பட்டையைக் கிளப்ப 835 பிராஸசரோடு, 6 GB மற்றும் 8 GB ரேமை இணைத்துள்ளது ஒன்ப்ளஸ். எனவே கேமிங், மல்ட்டிடாஸ்க்கிங் ஆகியவற்றில் பிரச்னை இல்லை. டூயல் கேமரா, அதிகரித்த ரேம், பிராஸசர் ஆகியவைதான் இதன் ஹைலைட்ஸ். சாம்சங் S8+, LG G6 போல ஹை-எண்ட் மாடல் வசதிகளோடு ஒரு மிட்ரேஞ்ச் மொபைல் வேண்டும் என்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். 

ப்ளஸ்:

1. போன் பெர்ஃபார்மன்ஸ்

2. சரியான விலை மற்றும் போனின் சிறப்பம்சங்கள்

3. டூயல் கேமரா, பவர்ஃபுல் பிராஸசர்

மைனஸ்:

1. டிசைனில் மட்டும் கொஞ்சம் கைவண்ணம் காட்டியிருக்கலாம்.

விலை:

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் போன்களில் அதிக விலை கொண்டது இந்த ஒன்ப்ளஸ் 5-தான். இந்தியாவில் 6 GB வேரியன்ட் 32,999 ரூபாய்க்கும், 8 GB வெர்ஷன் 36,000 ரூபாய்க்கும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு