Published:Updated:

“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்

“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்

“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்

“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்

“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்

Published:Updated:
“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்

 ஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன. சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம்  தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.

சமூகத்தின் ஒரு சக்தி வாய்ந்த அங்கமாகிப்போன பேஸ்புக்கில் பல குறைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று 'Fake News'. ஏதோ ஒரு பேஜ் அட்மினால் தெரிந்தோ, தெரியாமலோ மீம்மாகவோ அல்லது போஸ்டாகவோ பதியப்படும் பொய்யான ஒரு தகவலை உண்மைதானா என்று யோசிக்காமல் பல ஆயிரம் பேர் சில மணி நேரத்தில் பகிர்கிறார்கள். ஒரு சில தினங்களில் அந்த தகவல் பல லட்சம் பேரை சென்றடைகிறது. இதில் சாகாவரம் பெற்ற fake newsகளும் உண்டு. உதாரணத்திற்கு நீங்கள் ஏ.டி.ம் நிலையத்தில்  பணம் எடுக்கும் பொழுது யாராவது உங்களை மிரட்டி பணம் எடுக்கச் செய்தால், உங்கள் ஏ.டி.ம் ரகசிய எண்ணை தலைகீழாக திருப்பி அழுத்தினால் ஏ.டி.ம் அட்டை மாட்டிக்கொள்ளும், போலீசுக்கும் தகவல் போய்விடும் என்ற தகவலை நம்மில் பெரும்பாலானோர் பேஸ்புக்கில் பார்த்திருப்போம். 1001, 9999 போன்ற எண்களை தலைகீழாக போட்டாலும் அதே எண்கள்தானே வரும் என்று கூட யோசிக்காமல் நாமும் இந்தத் தகவலை பகிர்ந்திருப்போம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி பேஸ்புக்கில் வாழையடி வாழையாக வளர்ந்துக் கொண்டிருக்கும் பொய்யான செய்திகள் மீது உண்மை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள் You Turn ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்கள். அதில் ஒருவரான ஐயன் கார்திகேயனிடம்  பேசினோம். "நானும் என் கல்லூரி சீனியர் விக்னேஷ் காளிதாசன் அவர்களும் ஒத்த கருத்துடையவர்கள். சமூக நோக்குடன் சேர்ந்து செயல்பட்டு வந்தோம். சென்னை வெள்ளத்தின்போது நிறைய சேவைகள் செய்தோம், அதன்பின் கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வந்துவிட்டது. நம் சமூகத்திற்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தோம், அப்பொழுதுதான் இந்த Fake News மீம்களை அம்பலப்படுத்த நாமும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிடலாம் என்ற யோசனை வந்தது. உடனே You Turn  என்ற  ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தோம்.

பொய்யான செய்திகளுக்குப் பின் போகும் மக்களை உண்மையின் பக்கம் திரும்புவோம் என்பதை அறிவுறுத்தவே You Turn என்ற பெயரை வைத்தோம். ஒரு செய்தியின் உண்மைத்தனத்தை கண்டறிய அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள், இணையதளங்கள் என்று தீவிர ஆராய்ச்சி செய்த பின்பே  பொய்யான போஸ்டிற்கு எதிராக மீம்ஸ் பதிவிடுவோம். சில நேரங்களில் உண்மையை கண்டறிய பல மணி நேரங்கள் கூட ஆகும். முதலில் எங்கள் பக்கத்தில் ஹாக்கி நம் தேசிய விளையாட்டு என்பதற்கு அதிகாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை என்ற விஷயத்தை பதிவிட்டோம். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்ட விவரம், அதே போல் ஏ.டி.ம் பின் விவரம் பற்றிய போலி செய்தி தவறு என்று விளக்கி ஒரு மீம் பதிவிட்டோம். மீம்முடன் அந்த மீம் குறிப்பிடும் செய்தியின் உண்மைத்தனத்தை கூறக்கூடிய இணைய பதிவுகளின் Links இணைத்து பதிவிடுகிறோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகப்போகின்றன. இதுவரை எங்கள் பக்கத்தை 55,000 நபர்கள் லைக் செய்துள்ளனர். தற்பொழுது YouTubeலும் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளோம்.” என்றார்.

எல்லாம் ஓகே பாஸ்... Trolling பண்ணுவதையே ஃபுல் டைம் வேலையாக வைத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள் போடும் மீம்களை பொய் என்று வெட்டவெளிச்சமாக இப்பிடி சொல்வதை மற்ற மீம் கிரியேட்டர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதுககு, “நாங்கள் எங்களுக்கு என்று ஒரு பிரத்யேக வழிமுறை வைத்துள்ளோம். ஒரு மீமை எதிரித்து பதிவிடுகிறோம் என்றால் அதைப் பதிவிட்ட மீம் கிரியேட்டரின் வாட்டர் மார்க் உள்ள அந்த அசல் மீமை பயன்படுத்தாமல் நாங்களே அந்த மீமை மறு உருவாக்கம் செய்து அந்த கிரியேட்டருக்கு சங்கடம் ஏற்படாமல்தான் பதிவிடுவோம். எங்கள் நோக்கம் கிரியேட்டர்களை குறை கூறுவதல்ல, மக்களிடையே பெய்யான செய்தி பரவாமல் தடுப்பது தான். சில அனுபவம் மிக்க மீம் கிரியேட்டர்கள் தவறை உணர்ந்து எங்களிடம் பேசுவார்கள். சிலர் எங்களை கிண்டல் செய்து மீம்ஸ் போடுவார்கள். நங்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கவனிக்க வேண்டிய பல பொய்யான செய்திகள் நிறைய இருக்கின்றன" என்று முடித்தார்.

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்..!