Published:Updated:

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

Published:Updated:
ஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே!

சிறு வயதில் தொலைந்து போன அல்லது பிரிந்து போன பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகளைக் கண்டறிய இந்திய சினிமா ஏகப்பட்ட வழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஹை பிட்ச்சில் தொண்டைக் கிழிய பாடும் குடும்பப் பாட்டில் தொடங்கி டாலரை பாதியாய் வெட்டி ஆளுக்கு ஒரு பீஸை கழுத்தில் மாட்டிக்கொள்வது வரை நிறைய நிறைய ஆப்ஷன்ஸ். அந்தப் படங்களை எல்லாம் இன்று ரீமேக் செய்தால், காலத்துக்கு ஏற்ப மாற்றுவது சற்று சிரமம்தான். ஆனால், அதற்கு ஒரு ஐடியா தந்திருக்கிறது அமெரிக்காவில் நடந்திருக்கும் நிஜ சம்பவம் ஒன்று.

லாஸ் வேகாஸில் இப்போது வசிக்கும் பெல்கினின் சொந்த ஊர் தெற்கு கரோலினா. 10 வயது ஆகும் வரை பெல்கினுக்கு ’சாக்லெட் கிடைக்குமா’ என்பதைத் தவிர வேறு எந்தக் கேள்வியும் எழவில்லை. ஆனால், அதன் பின் ஒரு சந்தேகம் அடிக்கடி எழுந்திருக்கிறது. தனது அம்மாவிடம் “நான் மட்டும் ஏன் நம்ம குடும்பத்துல வித்தியாசமா இருக்கேன்?” எனக் கேட்டிருக்கிறாள். பெல்கினின் அம்மாவும் கண்ணாடியைக் கழட்டியபடி “உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு தங்கம்... நீ எங்க சொந்த மக கிடையாது. நாங்க உன்னை தத்தெடுத்தோம்” என அவர் கன்னத்தில் முத்தம்மிட்டிருக்கிறார்.

இந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தாலும், சொந்தப் பெற்றோரைக் காண பெல்கினுக்கு ஆசை வராதா? ஒரு வழியாக தனது அப்பா, அம்மாவைத் தேடி சந்தித்துவிட்டார். ஆனால், தனக்கு ஜேசன் என ஒரு சகோதரன் இருக்கிறான் என்ற தகவல் தாமதமாகத்தான் பெல்கினுக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லோக்கல் ரெக்கார்டுகள் அனைத்தையும் அலசினார் பெல்கின். ஜேசனின் ஜாதகம் மட்டும் மிஸ்ஸிங். அவர் கழுத்தில் டாலரும் இல்லை. நினைவில் பாடலும் இல்லை. கையில் வளர்ப்புத் தந்தை வாங்கித் தந்த ஸ்மார்ட்போன் மட்டும்தான். ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் தான் அமெரிக்காவில் தெருவுக்குத் தெரு சென்று ’கனெக்ட்... கனெக்ட்’ எனப் பிரசாரம் செய்கிறாரே? அவர் மீது பாரத்தைப் போட்டு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். சென்டிமென்ட் பதிவு என்றால் கண்களைக் கசக்குவது உலக வழக்கம் தானே? 30,000 பேர் அதை ஷேர் செய்திருக்கிறார்கள்.

ஒரு வழியாக ஜேசனின் நண்பனின் கண்ணில் இந்த போஸ்ட் பட்டிருக்கிறது. அவர் ஜேசனை டேக் செய்ய, அங்குத் தொடங்கியது ஒரு ’லாலாலா’ பிஜிஎம். பெல்கினும், ஜேசனும் வீடியோ சாட் வழியே பாசத்தை ஊற்றியிருக்கிறார்கள். ஜேசன் இருக்குமிடம், பெல்கின் இருக்கும் இடத்தில் இருந்து தூரம். இப்போது பெல்கின் கையில் காசுமில்லை. தம்பியைக் கண்டறிய உதவிய இணையம் இதற்கு உதவாதா? கிரவுட்ஃபண்டிங்கை நம்பினார் கைவிடப்படார் என இந்தப் பக்கத்தை தொடங்கியிருக்கிறார்.

இந்த இணையதளத்தில் யார் வேண்டுமென்றாலும் பணம் கேட்கலாம். அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அது தொழிலாக இருக்கலாம். பொழுதுபோக்காக இருக்கலாம். கண்டுபிடிப்பாக இருக்கலாம். மக்களுக்குப் பிடித்திருந்தால் பணம் தருவார்கள். இந்த ஆன்லைன் மொய் விருந்துக்கு (சின்ன கவுண்டர் சுகன்யா நினைவிருக்கிறதா) நல்ல வரவேற்பு. 5000 டாலர் லட்சியம். 4000 டாலர் நிச்சயம் என்ற நம்பிக்கையில் தொடர்கிறது பெல்கினின் சகோதரனைத் தேடும் பயணம். எப்படியும் பணம் சேர்ந்துவிடும். பாச மலர்களும் சேர்ந்து விடுவார்கள்.

வாழ்க ஃபேஸ்புக்... வளர்க க்ரவுட்ஃபண்டிங்.!