Published:Updated:

கூகுள் க்ரோம்... ப்ரிஸ்மா... ஃபோட்டோஷாப்... இவற்றிலும் உண்டு இலுமினாட்டி குறியீடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கூகுள் க்ரோம்... ப்ரிஸ்மா... ஃபோட்டோஷாப்... இவற்றிலும் உண்டு இலுமினாட்டி குறியீடுகள்!
கூகுள் க்ரோம்... ப்ரிஸ்மா... ஃபோட்டோஷாப்... இவற்றிலும் உண்டு இலுமினாட்டி குறியீடுகள்!

கூகுள் க்ரோம்... ப்ரிஸ்மா... ஃபோட்டோஷாப்... இவற்றிலும் உண்டு இலுமினாட்டி குறியீடுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அடர்ந்த அந்த இரவு நேரத்தில் மெக்சிகோ நாட்டின் ஒரு பழைய கட்டடத்திலிருந்த வெளவால்கள் திடீரெனப் பறந்தன. அந்தச் சத்தம் சற்றே பயமுறுத்துவதாக இருந்தது. அப்போது " சூப்பர் பிரைட் எல்.ஈ.டி. ஃப்ளாஷ்லைட்" ( Super Bright LED Flash Light ) என்ற "ஆப்"யை பயன்படுத்தி அங்கு மெல்லிய வெளிச்சத்தைப் படரவிட்டான் ஸ்டேட்டஸ் ( Status ). மெலிதாக, ஒரு விதமான ஒலியை எழுப்பினான். அப்போது, அங்கிருந்த ஒரு தூணிற்குப் பின்னிருந்து, தன்னுடைய ஹீல்ஸ் ஷூவின் சத்தத்தைக் கட்டுப்படுத்தியபடியே அந்த விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்து வந்தாள் கமென்ட் ( Comment ). ஸ்டேட்டஸைப் பார்த்ததும், முக்கோண வடிவில் கால்களை நகர்த்தி ஒரு சல்யூட் அடித்தாள். அவளின் சட்டையின் நடுவே முக்கோண வடிவம் வரையப்பட்டு, அதற்கு நடுவே " I "என்ற ஆங்கில எழுத்து இருந்தது. 

"நீ வந்ததை யாரும் பார்க்கலையே ?" என்று விளக்கை ஒரு முறை சுற்றிக் காட்டிவிட்டு கேட்டான் அவன்.

"பயப்படத் தேவையில்லை. என்னை யாரும் பின் தொடரவில்லை" என்றாள் அவள். 

ஸ்டேட்டஸும், கமென்ட்டும் எதிரிகள் போர்வையில் இருக்கும் நண்பர்கள். இப்போது இவர்கள் இங்கு கூடியிருப்பது இலுமினாட்டிகளைப் பற்றிப் பேச... அவங்க பேசுறத ஒட்டுக் கேட்குறதுக்கு முன்னாடி, முதல்ல நம்ம இலுமினாட்டிகள் பற்றி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு.

இன்னிய தேதிக்கு இணையத்துல செம சுவாரஸ்யமா இருக்கக் கூடியது இலுமினாட்டிகள் குறித்த கதைகள்தான். இலுமினாட்டிகள் எப்படித் தோன்றியது என்கிற கேள்விக்கே ஏகப்பட்ட கதைகள் இருக்கு. இது முதன் முதலா ஜெர்மனியோட, பவாரிய மாநிலத்துல 1776ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுது. சிலர், எகிப்திய மன்னர் ஒருவரால் இது தொடங்கப்பட்டது என்கிறார்கள். இலுமினாட்டி என்பதற்கு “அறிவொளி” என்று சொல்லலாம். அதாவது, மக்களுக்கு அறிவை ஊட்டுவதற்காக தொடங்கப்பட்டு, படு ரகசியமாக இயங்கி வந்த ஒரு குழு. சாதி, மதம், மூட நம்பிக்கைகளைக் கடுமையா எதிர்த்தது என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

ஆனால், இலுமினாட்டிகளுக்கு இன்றைய இணைய விளக்கம் என்னவென்றால், மிகப்பெரிய பணக்காரர்களும், அதிகார நிலையிலிருப்பவர்களும் இணைந்து ஒரு ரகசிய குழுவை வைத்திருக்கிறார்கள். உங்கள் வீட்டினருகே இருந்த பைப் உடைந்ததற்குக் கூட காரணம் இலுமினாட்டிகள் என்று கைகாட்டுகின்றனர் இணையியலாளர்கள். ( இணையம் + அறிவியியலாளர்கள் = இணையியலாளர்கள் ) . இவர்களின் ஒரே நோக்கம், “ஒரே நாடு, ஒரே வரி” ( அல்ல... அல்ல... சாரி... ஜிஎஸ்டியோட பாதிப்பு )  “ஒரே உலகம், ஒரே ஆட்சி” என்பது தான்.

சரி... இப்போ இந்த விஷயத்துக்கு வருவோம். ஒரு முக்கோணம். அதுக்கு நடுவுல ஒரு கண். இதுதான் இலுமினாட்டிகளோட லோகோ (அடையாளச் சின்னம் ). " 6 " என்கிற எண் அவங்களோட அடையாளம். உலகத்தையே ஆள்ற, உலகத்துல என்ன நடக்குணும்ன்னு முடிவு பண்ற சக்தி கொண்ட இலுமினாட்டிகள் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும், தங்களோட அடையாளச் சின்னத்த பூடகமா வெளிப்படுத்துறதா சொல்லும் நெட்டிசன்கள், அதற்கென ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்காங்க. உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலயும், தங்கள் நாட்டோட நடப்புகளையும், அரசியல் நிகழ்வுகளையும் ஏதாவது ஒரு புள்ளியில இணைச்சு... கிட்டத்தட்ட எப்படின்னா... வசூல்ராஜா படத்துல வர்ற அந்த லக்கி நம்பர் சீன் மாதிரி... “20லருந்து 15ய கழிச்சா ? ",  " 5 "... " ஆ... அத்தோட 2 கூட்டுனா ? ",  " 7 ", “ அதான்... உன் லக்கி நம்பர் வந்துடுச்சு “,  இப்படித்தான் பல இலுமினாட்டிகளோட கதைகள உருவாக்குறாங்க. 

இப்போ பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலர் உலகின் மிக முக்கியமான சாஃப்ட்வேர்ஸ், ஆப்ஸ், போன்றவை இலுமினாட்டிகளோடது என்று சில ஆதாரங்களை முன்வைத்து சில விஷயங்களைப் பேசி வருகிறார்கள். இப்போ... ஸ்டேட்டஸும், கமென்ட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரங்க என்ற நினைப்போடவே அவங்க பேசுறத சத்தமில்லாம ஒட்டுக் கேளுங்க... 

ஸ்டேட்டஸ் : " கமென்ட் நீ கூகுள் க்ரோம் அதிகமா யூஸ் பண்றியா ? "

கமென்ட் : " இதென்ன கேள்வி... உலகமே அதைத் தான் யூஸ் பண்ணுது..."

ஸ்டேட்டஸ் : " அதான்... அதே தான் என்னோட பாயிண்ட்டும். கூகுள் க்ரோம் இலுமினாட்டிகளோட சதி..."

கமென்ட் : " என்னனனனனன ???!!! "

ஸ்டேட்டஸ் : " ஆமா... கமென்ட். நிஜமாத் தான். குரோமோட லோகோவ நல்லா கவனிச்சுப் பாரு. சிகப்பு, பச்சை, மஞ்சள். அந்த மூணு நிறமுமே ' 6 ' வடிவத்துல இருக்கும்...

கமென்ட் :  ( தன் மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு... ) " அட ஆமா ஸ்டேட்டஸ் நீ சொல்றது நிஜம் தான்... இப்போ, நான் உனக்கு இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயத்த சொல்றேன் கேளு...” 

ஸ்டேட்டஸ் : “ம்ம்ம்... என்ன சீக்கிரம் சொல்லு ? “

கமென்ட் : “ இன்னிக்கு உலகமே அதிகம் யூஸ் பண்ற போட்டோ ஷாப் சாஃப்ட்வேரும் கூட இலுமினாட்டிகளோடதுதான். அதோட லோகோவ கவனிச்சிருக்கியா ? ஒரு முக்கோணம். அதுக்கு நடுவுல கண் !!! “

ஸ்டேட்டஸ் : “ ஐயோ... ஆமா... இந்த இலுமினாட்டிகள் உண்மையிலேயே பலே கில்லாடிகள்தான். “

கமென்ட் : “ அதுமட்டுமில்ல ஸ்டேட்டஸ்... நம்ம நாட்டுல அதிகம் விளையாடப் படுற மொபைல் கேமான DOTA மற்றும் ESET Nod ஆன்ட்டி வைரஸ் ஆகியவற்றில் கூட இலுமினாட்டிகளோட சின்னம் இருக்கு. ப்ரிஸ்மா ஆப்பே கூட  அவங்களதுதானாம்.” 

ஸ்டேட்டஸ் : “அட ஆமா... உனக்கு இன்னொரு முக்கியமான விஷயம் சொல்றேன்... உனக்கு வால்ட் டிஸ்னி பிடிக்குமா ? “

கமென்ட் :  “ ரொம்பப் பிடிக்கும்...”

ஸ்டேட்டஸ் : “ வால்ட் டிஸ்னியோட லோகோவுல கூட இலுமினாட்டியோட சின்னம் இருக்கு. நல்லா பாரு அதோட W ல ரெண்டு 6 இருக்கும் . D ல ஒரு 6 இருக்கும்...” 

கமென்ட் : “ ஆமா..., நான் இன்னொன்னையும் கண்டு பிடிச்சிருக்கேன். நம்ம நாட்டுல பிரபலமா இருக்குற டிவி நிகழ்ச்சியான “பினாய் பிக் பிரதர் “ நிகழ்ச்சியும் கூட இலுமினாட்டிகளோடதுதான். ஒரு முக்கோணம். நடுவுல கண்ணு. கவனிச்சியா ?”

ஸ்டேட்டஸ் : “நீ நம்ம நாட்டோடத மட்டும்தான் கவனிச்ச. நான் உனக்கு கூடுதலா ஒரு விஷயத்த சொல்றேன் கேளு. இந்தியாவுல ஒரு இலுமினாட்டி ஷோவ, ஒரு இலுமினாட்டியே நின்னு நடத்திட்டிருக்காரு ... “

கமென்ட் : “ என்ன சொல்ற ஸ்டேட்டஸ்... புரியுற மாதிரி சொல்லு...:

ஸ்டேட்டஸ் :“ நம்ம ‘பினாய் பிக் பிரதர் ‘ மாதிரியே இந்தியாவோட, தமிழ்நாடுங்குற ஏரியாவுல ‘ பிக் பாஸ் ‘ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்துறாங்க. அதே முக்கோணம். அதே கண். இலுமினாட்டிகளோட நிகழ்ச்சி. ஆனா, அத நடத்துறது கமல்ஹாசன் என்கிற இலுமினாட்டி...”

கமென்ட் : “ எப்படி சொல்ற ? “

ஸ்டேட்டஸ் : “ஆமா... அந்த கமல்ஹாசன் தமிழ்நாட்டுல பெரிய நடிகர். ஆனா, அவரு இங்கிலாந்து ராணி எலிசபெத்த வச்சு படத்துக்குப் பூஜை போடுறாரு, ஆடியோ லாஞ்ச்சுக்கு ஜாக்கிசானை வரவைக்குறாரு. சும்மாவா? ... அதுமட்டுமில்ல, உலகத்துல நடக்க இருக்குற பேரழிவுகள முன்கூட்டியே தன்னோட படங்கள்ல சொல்லிடுவாரு. சுனாமிய பத்தி ‘ அன்பே சிவம்’ ங்குற படத்துலயே சொல்லிட்டாரு, ‘மகாநதி’ படத்துல சிட்பண்ட்ஸ் பிரச்னை, ‘தசாவதாரம்’ படத்துல எபோலா வைரஸ், ‘ விக்ரம் ‘ படத்துல தாலிபான் தீவீரவாதம், ‘ சிகப்பு ரோஜாக்கள் ‘ படத்துல சைக்கோ கொலைகாரன், ‘ சத்யா ‘ படத்துல வேலையில்லா திண்டாட்டம்... இப்படி ஏகப்பட்ட விஷயங்கள சொல்லிட்டே போகலாம்...”

கமென்ட் : “ அடேங்கப்பா... நம்பவே முடியில !!! அப்போ பிக் பாஸோட இந்த சீசன்ல யாரு ஜெயிப்பாங்கன்னு கண்டுபிடிச்சு சொல்லேன். நாம அத ட்விட்டர்ல போட்டு, இந்தியாவுல ட்ரெண்டிங் ஆக்கிடுவோம்... “

ஸ்டேட்டஸ் : “ ஐயையோ... அது கமல்ஹாசன் எனும் இலுமினாட்டி மட்டும் தானே தெரியும். அதை எப்படிக் கண்டுபிடிக்குறது ?... சரி, சரி... நம்ம யாரும் கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி இடத்த காலிபண்ணிடுவோம். பார்த்து போ... வழக்கம் போல காலைலருந்து நீயும், நானும் எதிரிகள்...” என்று சொல்லிவிட்டு இருவரும் அமைதியாக நகர்ந்தார்கள்.

ஸ்டேட்டஸ் தன்னுடைய ஃப்ளாஷ் லைட்டை ஆஃப் செய்தபடியே கிளம்ப... அவனுடைய மொபைல் ரிங் ஆனது. அதில்... “ கமல்ஹாசன், இந்தியா “ என்ற வந்தது. அவன் அப்படியே உறைந்துப் போனான். இலுமினாட்டிடா... 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு