Published:Updated:

டெட் டாக்ஸ் - இலவச வீடியோ பொக்கிஷம்!

டெட் டாக்ஸ் - இலவச வீடியோ பொக்கிஷம்!

டெட் டாக்ஸ் - இலவச வீடியோ பொக்கிஷம்!

டெட் டாக்ஸ் - இலவச வீடியோ பொக்கிஷம்!

Published:Updated:

 சித்தார்த்தன் சுந்தரம்
பிசினஸ் கன்சல்டன்ட்

' 'பள்ளிக்கூடங்கள் நமது படைப்பாற்றலை எப்படிக் கொல்கிறது?'

''உடல்மொழி நம்மை சிறந்த மனிதராக உருவாக்குமா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புள்ளிவிவரங்கள் பிசினஸின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?''  

இதுபோன்ற சுவாரஸ்யமான  கேள்விகளுக்கு தெள்ளத் தெளிவாக, அதேநேரத்தில் 18 நிமிடங்களில் ரத்தினச் சுருக்கமாக அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் தரும் பதில் தெளிவாக வீடியோ காட்சிகளாக பொதிந்து கிடக்கிறது டெட் டாக்ஸ் (TED TALKS) என்கிற இணையதளத்தில். நம் வீட்டில் உட்கார்ந்தபடியே இந்த இணையதளத்தின் மூலம் உலகத்தில்   அதி அற்புதமான அறிவைப் பெறலாம்.  

டெட் டாக்ஸ் என்றால்..?

1984-ம் ஆண்டு ரிச்சர்ட் சால் வுர்மன் (Richard Saul Wurman) என்பவர் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்புப் பற்றிய கருத்துகளையும், யோசனைகளையும் பரப்பும் நோக்கில் TED (Technology Entertainment Design - Ideas Worth Spreading) என்கிற அமைப்பை உருவாக்கினார். 2001-ம் ஆண்டு கிரிஸ் ஆண்டர்ஸன் (Chris Anderson) என்பவர் நடத்திவந்த சாப்லிங் பவுண்டேஷன் (Sapling  Foundation), வுர்மானிடமிருந்து 'டெட் டாக்ஸை’ வாங்கி  இன்றுவரை சிறப்பாக நடத்தி வருகிறது. சமீபத்தில் இதன் 30-வது பிறந்தநாள் கனடாவில் உள்ள வான்கூவரில் கொண்டாடப்பட்டது.

டெட் டாக்ஸ் -  இலவச வீடியோ பொக்கிஷம்!

ஆரம்பத்தில் அறிவியல், வணிகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் பற்றிய பேச்சுகள் இதில் இடம்பெற்றன. பல துறைகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் சன்மானம் எதுவும் வாங்காமல் தங்களது கருத்து களையும், யோசனைகளையும் 18 நிமிடத்துக்குள் (சில பேச்சுகள் இதற்கு விதிவிலக்கு) அனைவருக்கும் புரியும்படி எளிமையாக, தெளிவாக பேசியிருக் கிறார்கள். இன்றும் பேசிவருகிறார்கள்.

'பிக் பேங்க்’ (Big Bang) கோட்பாடு முதல் இன்றைய இன்டர்நெட் வரையிலான அறிவியல் மகத்துவங்கள் இந்த டெட் டாக்ஸில் இருக்கிறது. ஏறக்குறைய 1,700-க்கும் மேற்பட்ட பேச்சுகளின் வீடியோ இந்த இணையதளத்தில் உள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியவர்களில் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், மால்கம் கிளாட்வெல், டான் அரிலே, லாரி பேஜ், அல் கோர், இந்தியாவைச் சேர்ந்த சசி தரூர், கிரண்பேடி, முருகானந்தம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.  

டெட் டாக்ஸில் உள்ள பேச்சுகளை மொழிபெயர்க்க தமிழில் மட்டும் 40 பேர் தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டுள்ளனர். இதில், அதிகமான பேச்சுகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சமூக ஆர்வலரான திருமதி. வித்யா ராஜு.  அவருடன் பேசினேன்.

டெட் டாக்ஸ் -  இலவச வீடியோ பொக்கிஷம்!

''என் மகன் மூலம் எனக்கு டெட் டாக்ஸ் அறிமுகமானது. சில பேச்சுகளைக் கேட்டபிறகு அதனால் ஈர்க்கப்பட்டு என்னை ஒரு மொழி பெயர்ப்பாளராக டெட்.காமில் பதிவு செய்துகொண்டேன். எனக்குப் பிடித்த பேச்சுகளை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். அதன்பின் டெட்.காம் எனக்கு வேறு சில மொழி பெயர்ப்பாளர்கள் மொழி பெயர்த்த பேச்சுகளை 'மதிப்பீடு’ செய்யும்படி அனுப்பினார்கள். இதை எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்'' என்றார். இவர் சில பேச்சுகளை இந்தி யிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

2009-ல் டெட் அமைப்பினர் 'டெட் எக்ஸ் (TEDx)’-ஸை அறிமுகப்படுத்தினர். இதைக் குறிப்பிட்ட நகரத்தைச் சேர்ந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சமூகநல அமைப்புகள் ஏற்று நடத்தலாம். டெட் எக்ஸ் நிகழ்ச்சியானது சேலம் சோனா காலேஜ் ஆஃப் மேனேஜ்மென்டில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் இந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் பாலச்சந்தர் காளியப்பன்.    

'டெட் எக்ஸ் நிகழ்ச்சியை டெட் அமைப்பினரின் ஒப்புதலுடன், அவர்களின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு யார் வேண்டுமென்றாலும் நடத்தலாம். ஆரம்பத்தில் இதில் பார்வையாளர்களாக 100 பேர் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது, அதன் தரம் குறைந்துவிடக்கூடாது என்பதில் டெட் அமைப்பு கண்டிப்பாக இருக்கும்'' என்றார் பாலச்சந்தர் காளியப்பன். இவரும் டெட் பேச்சுகளில் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

டெட் டாக்ஸ் -  இலவச வீடியோ பொக்கிஷம்!

2009-ல் ஆரம்பிக்கப்பட்ட டெட் எக்ஸ்-ன் கீழ் இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஏறக்குறைய 30,000 வீடியோக்கள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் மிஸ்திரியின் 'சிக்ஸ்த் சென்ஸ் டெக்னாலஜி (ஆறாம் அறிவு தொழில்நுட்பம்)’ பற்றிய வீடியோவை ஏறக்குறைய 1.2 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.

இந்த இணையதளத்தில் உள்ள வீடியோக்கள் இலவசமாகக் கிடைக்கும் வீடியோ பொக்கிஷங்கள். இன்றைய இளைஞர்கள் தங்கள் ஆர்வத்துக்கேற்ப டெக் டாக்ஸில் கிடைக்கும் வீடியோக்களைப் பார்ப்பது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism