Published:Updated:

300 கோடியை தொட்ட முதல் யூடியூப் வீடியோ என்ன மொழி தெரியுமா? #Top10YoutubeVideos

300 கோடியை தொட்ட முதல் யூடியூப் வீடியோ என்ன மொழி தெரியுமா? #Top10YoutubeVideos
300 கோடியை தொட்ட முதல் யூடியூப் வீடியோ என்ன மொழி தெரியுமா? #Top10YoutubeVideos

300 கோடியை தொட்ட முதல் யூடியூப் வீடியோ என்ன மொழி தெரியுமா? #Top10YoutubeVideos

300 கோடி முறை உங்கள் வீடியோவைப் பார்த்திருக்கிறார்களா... உலகின் டாப் யூடியூப் விடியோக்களில் உங்கள் வீடியோவும் ஒன்று...!
ஜியோ வந்த பிறகு, பிரெட்டுக்கு ஜாம் தடவுவது எப்படி என்பதைக் கூட ஹெச்டி வீடியோவில்தான் பார்க்கிறோம். எல்லாம் வீடியோ மயம் ஆன பிறகு, டாப் வீடியோக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி.... வாருங்கள் யூடியூப்-ன் டாப் 10 வீடியோக்கள் பட்டியலைப் பார்ப்போம். 

10) அழகுக் குட்டிச் செல்லம் டெய்லர் ஸ்விஃப்டின் Nice to meet you, where you been? (1989) ஆல்பத்தின்  'Blank space' பாடல் 210 கோடி வியூஸ் உடன் 10-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

அழகான காதலாக ஆரம்பித்து, கண்ணீர் சிந்தி, கோவப்பட்டு கலக்கலான கார்களை (கார் பேர் சொன்ன வருத்தப்படுவீங்க) கோல்ஃப் பேட்டால் தெறிக்கவிடுவது, காதலனை தானே கைப்பட வரைந்த ஓவியங்களைக் கொலைவெறிகொண்டு குத்திக் கிழிப்பது என்று கலர்ஃபுல் விஷூவல்ஸ் உடன் இருக்கிறது. 

வீடியோ வெளியான தேதி : 10 Nov 2014, வீடியோ நேரம் : 4.32

9) மிட் நைட்டிலும் இளசுகளின் பல்ஸை எகிற வைக்கும் 33 வயது Cadbury Dairy milk கேட்டி பெர்ரியின் Prism ஆல்பத்தின்  'Roar' பாடல் 215 கோடி வியூஸ் உடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பயந்த புள்ளயா காட்டுல மாட்டிக்கிட்டு, ஒரு மாதிரி மனசு தேறி பயங்கரமான புள்ளயா உருமாறி புலியவே புறமுதுகிட்டு ஓடச் செய்யுறது தான் இந்த ரோர். கேட்டி பெர்ரி வாய்ஸில் Oh oh oh oh oh oh oh oh ஆசம் ரகம்.  

வீடியோ வெளியான தேதி :  5 Sep 2013, வீடியோ நேரம் : 4.29

8) இதுவரை சோலோவாக போலோ சாப்பிட்டால், இவர்கள் ஃபைவ் ஸ்டாராக ஜொலிக்கிறார்கள். இந்த ஐந்து நட்சத்திரக் குழு அசத்திய  'V' என்கிற ஆல்பத்தில் பாடப்பட்ட சுகர் (அதாங்க சர்க்கரை) பாடல் 217 கோடி வியூஸ் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. 

சர்க்கரைக் குட்டி... சந்தனக் கட்டி... எனக் காதலர்கள் கொஞ்சுவது தான் கான்செப்ட். ஆனால் ஒரு காதல் கணவன் அல்லது மனைவி "என் வாழ்கையில சர்க்கரையும் தேனும் கொட்டனும்" என்று தங்கள் லைஃப் பார்ட்னரைப் பார்த்து சைலன்ட் எமோஷனாக, அதட்டலாகக் கெஞ்சுவது போல் செம டோனில் பாடி ரசிக்க வைக்கிறார் அடாம் லிவைன். கலிஃபோர்னிய நேட்டிவிட்டியோடு விஷுவல்ஸ் அட்டகாசம். 

வீடியோ வெளியான தேதி :  14 Jan 2015, வீடியோ நேரம் : 5.01

7) என்ரிக் இக்லிசியாஸ் (Enrique Iglesias) செக்ஸ் அண்ட் லவ் என்கிற ஆல்பத்தில் பாடிய 'Bailando' 225 கோடி முறை பார்க்கப்பட்டு ஏழாவது இடத்தில் இருக்கிறது.  என்ரிக் லத்தின் பாப் உலகின் பெரிய தலக்கட்டு. சுருக்கமாக கிங் ஆஃப் லத்தின் பாப் என்று அழைக்கிறார்கள். 

வீடியோ வெளியான தேதி :  11 Apr 2014, வீடியோ நேரம் : 4.46

6. நெய்க் குழந்தை டெய்லர் ஸ்விஃப்டின் குரல் வண்ணத்தில் 1989 ஆல்பத்தில் பாடப்பட்டிருக்கும் 'Shake It Off' 226 கோடி வியூஸ் உடன் ஆறாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 

உன் வேலைய பாத்துக்கிட்டு போடா... என் இஷ்டத்துக்கு நான் வெளிய போவேன்.. யார வேணாலும் பாய் ஃப்ரெண்டா வெச்சிப்பேன்னு அதிரடியான ஒரு குல்ஃபி பாடல், நல்ல மெட்டுடன் வளைய வருகிறது. இறுதியில் எல்லாம் போகட்டும், இதெல்லாம் தலையில் வெச்சுக்காதீங்கப்பு... சும்ம குதூகலமா இருக்கணும் என்று ஷேக் செய்யச் சொல்லி முடிகிறது.

வீடியோ வெளியான தேதி :  18 Aug 2014, வீடியோ நேரம் : 4.01

5.  ப்ருனோ மார்ஸ் (Bruno Mars) மற்றும் மார்க் ரான்சன் (Mark Ronson) இணைந்து தயாரித்த இந்த பாடல் 256 கோடி முறை பார்க்கப்பட்டு நான்காவது இடத்தில் இருக்கிறது.

ஒரு ஃப்ரேமில் கூட பிரபலமான அல்லது அழகான பெண்களை முழுமையாகக் காட்டாத இந்த வீடியோ... அதிக முறை பார்க்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான்.  இந்தப் பாடலில் மார்ஸின் குரல் கேட்க கால்கள் தாளமிடுகின்றன. பாடல் வரிக்கு ஏற்றது போல மார்ஸ் போடும் ஆட்டமும், அதற்கு ஒத்து ஊதும் மார்க் ரான்சனின் நடிப்பும்... மெர்சல்.

வீடியோ வெளியான தேதி :  19 Nov 2014, வீடியோ நேரம் : 4.30

4) இளைஞிகளின் எழுச்சி நாயகன் ஜஸ்டின் பைபர் பாடிய 'Sorry (PURPOSE : The Movement)' பாடல் 266 கோடி வியூஸ் உடன் மூன்றாமிடத்தில் முனகிக் கொண்டிருக்கிறது. 

சிதறி விழுந்த பல்லி மிட்டாய் போன்ற அழகுப் பெண்கள் அணி, அவர்களுக்குச் செய்திருக்கும் அட்டகாசமான காஸ்ட்யூம் தாண்டி... ஜஸ்டினின் குரலில் பில்லி சூனியம் வைத்தது போல் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.  சாரி சொல்ல நேரமா ஆச்சு, நீ இல்லாம எனக்கு என்னமோ ஆச்சு... என்று அழகான வரிகள், பைபரின் வாய் வழியாக வரும்போது என்னமோ நடக்குது மர்மமா இருக்குது சார்.  நம் டாப் 10 வீடியோவில் குட்டி வீடியோ நம்ம சாரி தான்.

வீடியோ வெளியான தேதி :  22 Oct 2015, வீடியோ நேரம் : 3.25

3) ஓப்பன் கங்னம் ஸ்டைல் தாங்க 290 கோடி வியூஸ் உடன் இரண்டாவது இடத்தில் கெத்தாக அமர்ந்திருக்கிறது. இந்த ஒற்றைப் பாட்டால் புகழ் பெற்ற சை (Psy)-ன் கங்னம் ஸ்டைல் நடனம், பெண்களைப் பார்த்து அப்பட்டமாக வழிவது, பிரமாண்ட செட்டுகள் என எல்லாம் தான் 290 கோடி முறை பார்க்க வைத்திருக்கிறது.

இதைப் பற்றி அதிகம் பேசத் தேவை இல்லை. நம்மில் பலரும் பார்த்திருப்போம் என்பதால்... டாப் 10 லிஸ்டில் பழைய வீடியோ சையின் கங்னம் ஸ்டைல் தானுங்க. 

வீடியோ வெளியான தேதி :  15 Jul 2012, வீடியோ நேரம் : 4.12

2)  சார்லி புத் (Charlie Puth) மற்றும் விஸ் கலீஃபா (Wiz Khalifa)என்கிற இரண்டு இளசுகளும் சேர்ந்து காட்டிய ரகளையான மெலடி பாப் பாடல்  'See You Again'. 

பால் வக்கரின் கடைசிப் படம் என்கிற சென்டிமென்ட், ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசனையான ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் விண்டேஜ் கார்கள், பேரரசு படம் அளவுக்கு அதிகமான சென்டிமென்ட் இல்லாமல் சரியான அளவு சென்டிமென்ட் எல்லாம் வொர்க் அவுட் ஆகி 294 கோடி யூட்யூப் வியூஸ் சென்றிருக்கிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் தாக்கத்தை கச்சிதமாக பிரதிபலிப்பது வேறு கூடுதல் பலம். 

வீடியோ வெளியான தேதி :  6 Apr 2015, வீடியோ நேரம் : 3.57 

1) டாடி யான்கே (Daddy Yankee) என்கிற லத்தின் அமெரிக்க தெளலத்தும் திஸ்பசீதோ 'Despacito' ஆல்பத்தால் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன லூயிஸ் ஃபான்ஸி (Luis Fonsi) -ம் இணைந்து உருவாக்கிய பாடல்தான்  'Despacito'. இந்த இருவரோடு 2006-ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற Zuleyka Rivera-ம் சேர்ந்து கொள்ள வியூஸ் 300 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

செம ஸ்பானிய நேட்டிவிட்டி, இரண்டு பெரிய ஸ்பானிய  ஜாம்பவான்களின் வாய்ஸ், Zuleyka Rivera-க்கு ஜிகு ஜிகு காஸ்ட்யூம், லைக்ஸ் அள்ளும் சினிமாட்டோகிராஃபி என்று தட்டித் தூக்குகிறது இந்த  வீடியோ...! 

வீடியோ வெளியான தேதி :  12 Jan 2017, வீடியோ நேரம் : 4.41

அடுத்த கட்டுரைக்கு