Published:Updated:

விலை குறைவு... வசதிகள் அதிகம்... ரெட்மியை சமாளிக்குமா லெனொவோ?! #KillerNote

விலை குறைவு... வசதிகள் அதிகம்... ரெட்மியை சமாளிக்குமா லெனொவோ?! #KillerNote
விலை குறைவு... வசதிகள் அதிகம்... ரெட்மியை சமாளிக்குமா லெனொவோ?! #KillerNote

விலை குறைவு... வசதிகள் அதிகம்... ரெட்மியை சமாளிக்குமா லெனொவோ?! #KillerNote

இன்று 15000 ரூபாய்க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் தேரந்தெடுப்பது ரெட்மி நோட் 4 தான். அதே விலையில் வேறு ஸ்மார்ட்போன்கள் போட்டிக்கு இருந்தாலும் பில்ட் குவாலிட்டி, பேட்டரி திறன், ஃபிங்கர் சென்ஸார் போன்ற வசதிகள் என ஏதாவது ஒரு வகையில் ரெட்மி நோட் 4 முன்னிலையில் இருக்கும். அறிமுகம் ஆன நாளிலிருந்தே அந்த செக்மென்டில் ரெட்மி நோட்4 தான் முதலிடத்தில் இருக்கிறது. இதை முறியடிக்க லெனொவோ நிறுவனம் களம் இறக்கியிருக்கும் துருப்புச் சீட்டுதான் lenovo k8 note.

லெனொவோ கே8 சிறப்பம்சங்கள்:

  • 5.5 இன்ச் IPS LCD 1080 x 1920 (401ppi) திரை.
  • கொரில்லாகிளாஸ் பாதுகாப்பு வசதி.
  • 2.3 GHz மீடியாடெக் ஹீலியோ X23 டெக்கா கோர் ப்ராசஸர்.
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 13 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல் ட்யூவல் PDAF  பின்புற கேமரா.
  • 13 முன்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி.
  • கைரேகை சென்சார் வசதி Dolby ATMOS  மற்றும் TheaterMax
  • 4000 mAh பேட்டரி மற்றும் டர்போ சார்ஜிங் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளம்

#KillerNote என்ற அடைமொழியுடன் வெளியாகியிருக்கும் லெனொவோ கே8 நோட் ஐ, இதே விலையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களோடு ஒப்பிட்டால் குடுக்கிறதுக்கு மேல கூவுற ரகம்தான். அந்த அளவிற்கு வசதிகளை அள்ளி கொடுத்திருக்கிறது லெனொவோ.

கிட்டத்தட்ட ரெட்மி நோட் 4 போலவே வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் ரெட்மியில் என்ன குறைகள் இருக்கின்றனவோ, அதைக் கவனித்து வடிவமைத்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது ஹைபிரிட் சிம் ஸ்லாட் வசதி. இதில் இரண்டு ஸ்லாட்கள் இருக்கின்றன. ஒன்று சிம்கார்டு போடுவதற்கு; மற்றொன்று மெமரிகார்டு போடுவதற்கு. எனவே இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டை பயன்படுத்தலாம். 

அதே போல ஸ்மார்ட்போனின் வலது புறம் மியூசிக் கீ என ஒன்று புதிதாக இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலமாக பாடல்கள், கேமரா, என எது உங்களுக்குத் தேவையோ, அதை ஒரு க்ளிக்கில் எளிதில் அணுக முடியும்.

கூகுள் அசிஸ்டெண்ட் வசதி இருப்பதால் ஸ்மார்ட்போனில் செய்யும் வேலைகளை செய்ய அதைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
Dolby ATMOS  தொழில்நுட்பம் துல்லியமான இசையை ரசிக்க உதவுகிறது. TheaterMax வசதி VR பிரியர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

ரெட்மி நோட் 4 போலவே 2.5 D திரை; அதோடு கொரில்லா கிளாஸ் வசதி இருப்பதால் கீழே விழுந்தாலும் எளிதில் உடையாது. கீறல்கள் விழும் வாய்ப்பும் குறைவு.

மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கிய பின்பு அதன் தொழில்நுட்ப விஷயங்களை எடுத்து தனது ஸ்மார்ட்போன்களில் புகுத்தி வருகிறது லெனொவோ. அப்படி, மோட்டோரோலா பயன்படுத்தி வந்த டர்போ சார்ஜிங் தொழில்நுட்பம் லெனோவோவிலும் டவுன்லோடு ஆகிவிட்டது. இதன் மூலமாக மிக விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

மற்றொன்று ஸ்டாக் ஆண்ட்ராய்டு. ஆம்; இனிமேல் தனது Vibe Pure UI யை பயன்படுத்தப்போவதில்லை என லெனொவோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. எனவே இதில் ஒரிஜினல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயபயன்படுத்தலாம்.

இவ்வளவு வசதிகள் கொடுத்தும் முன்புற நேவிகேஷன் பட்டன்களுக்கு அடியில் லைட்டிங் வசதி இல்லாதது, Type-C போர்ட் இல்லை என சில குறைகளும் இருக்கின்றன. ரெட்மீ போல சூடாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

”எனக்கு எப்பவுமே மொபைல் போட்டோகிராபி தான் பாஸ்” என்பவர்களுக்கு 13+5 மெகாபிக்சல் ட்யூவல் கேமரா, செல்பி காதலிகளுக்கு 13 மெகாபிக்சல் முன்புற கேமரா, ‘நான் படமும் பாட்டும் மட்டும் தான் பாஸ் கேட்பேன்’ என்பவர்களுக்கு Dolby ATMOS,TheaterMax, கேமிங் பிரியர்களுக்கு டெக்கா கோர் பிராஸசர், 4000 mAh பேட்டரி என எந்தத் தரப்பினரும் விரும்பும் வகையில் இருக்கிறது. வசதிகளை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.

3+32 ஜிபி மாடல் 12,999 ரூபாய் மற்றும் 4+64 ஜிபி மாடல் 13,999 விலையில் 18 ம் தேதி விற்பனைக்கு வருகிறது லெனொவோ கே8 நோட்.

அடுத்த கட்டுரைக்கு