Published:Updated:

இதெல்லாம் இருந்தாதான் அது ஸ்மார்ட்ஹோம்... ஒரு செக் லிஸ்ட்!

Smart Bulb
Smart Bulb

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் அசிஸ்டன்ட்ஸ் தொடங்கி இன்று நம் வீடே ஸ்மார்ட் ஹோமாக மாறும் அளவுக்கு டெக்னாலஜி அப்டேட் ஆகிவிட்டது. அந்த ஸ்மார்ட்ஹோமில் என்னவெல்லாம் இருக்கவேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்மார்ட் ஹோம்கள் என்றதுமே வாய்ஸ் அசிஸ்டன்ட், மொபைல் கட்டுப்பாட்டிலிருக்கும் கேட்ஜெட்கள் போன்றவை மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவற்றைத் தாண்டி மின்சார செலவை மட்டும் குறைப்பது, பொழுதுபோக்கு அம்சங்களுக்கான முழு செட்டப், மொத்த வீட்டிற்குமான பாதுகாப்பு அம்சங்கள் மட்டும் என ஸ்மார்ட் ஹோம்களிலேயே பல்வேறு தனித்தனி வகைகள் உண்டு. அவரவர் தேவைக்கேற்ப இந்த ஸ்மார்ட் ஹோம்கள் வடிவமைக்கப்படும். பொதுவாக ஒரு ஸ்மார்ட்ஹோம் என்றால் என்னவெல்லாம் இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.

நம் வீட்டில் உள்ள மின் உபகரணங்கள் அனைத்தையும் இணையம் வழியாக இணைத்து, நம் கட்டளைகளுக்கு ஏற்ப வேலை செய்ய வைக்கும் வீடுகளே பொதுவான ஸ்மார்ட் ஹோம்கள். மின்விளக்கை அணைப்பது, ஆன் செய்வது, ஏசியின் வெப்பத்தை அதிகப்படுத்துவது, குறைப்பது என அனைத்து இதில் செயல்களையும் செய்ய இயலும். நாம் இயல்பாகச் சொல்லும் வாக்கியங்கள் அல்லது நமது கைதட்டல்கள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து, அவை தங்களுக்குரிய வேலைகளை இணைய உதவியுடன் சரியாகச் செய்யும் வண்ணம் மின்பொருள்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Smart Home
Smart Home

ஹோம் ஆட்டோமேஷன் சிஸ்டம் அல்லது டோமோடிக்ஸ் என்று இந்தத் தொழில்நுட்பம் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்ஹோம்கள் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT) எனும் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இயங்கக் கூடியவை. நமக்கு பல்வேறு வசதிகளையும் ஆற்றல் சேமிப்பையும் அளிக்கக்கூடியது. ஸ்மார்ட் ஹோமுக்கான ஒரு செயலியை வைத்து நம் வீட்டிலுள்ள எல்லா உபகரணங்களையும் கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் இயலும்.

ஸ்மார்ட் ஹோம் எப்படி இருக்கும்?

நம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவிக்கள், நமது குரல் அல்லது நமது கைகால் அசைவுகளை வைத்து நமக்கு தேவையான சேனல்களை அல்லது வீடியோக்களை தேடி நாம் கண்முன் திரையில் தோன்ற செய்யும்.

ஸ்மார்ட் விளக்குகள் அறையிலுள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப தனது வெளிச்சத்தை குறைத்துக் கொள்ளும். பகல் நேரத்தில் குறைவான வெளிச்சத்தை அளிப்பதன் மூலம் இது குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும். நமது கட்டளைகளுக்கு ஏற்ப இவற்றை ஆன், ஆப் செய்யவும் நம்மால் இயலும்.

ஸ்மார்ட் லாக்குகள் நாம் வீட்டில் இல்லாத சமயத்தில் நமக்குத் தெரிந்தவர்கள் நம் வீட்டிற்கு வரும்பொழுது, நாம் இருக்கும் இடத்திலிருந்தே வீட்டின் கதவை திறக்கச்செய்யும் வசதி உடையவை. நாம் இருக்கும் இடத்திலிருந்தே வீட்டின் கதவுகள் சரியாக பூட்டப்பட்டு உள்ளனவா என்பதை சோதிக்கும் வசதியும் இதில் உண்டு.

Smart Home
Smart Home

ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராக்கள் உதவியுடன் நீங்கள் வெளியூரில் இருக்கும் பொழுதும் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் இருக்கும் இடத்திலிருந்து காண இயலும். உங்கள் வீட்டின் பாதுகாப்பையும் இதன் மூலம் உங்களால் உறுதி செய்துகொள்ள இயலும்

வீட்டில் அனைத்து பொருட்களையும் ஸ்மார்ட்டாக மாற்றி அனைத்து பொருட்களையும் ஒரே செயலியின் மூலம் கட்டுப்படுத்தும் வசதி உடைய வீடே ஸ்மார்ட் ஹோம். இந்த ஸ்மார்ட் ஹோம் வசதியை வீடுகளுக்கு மட்டுமல்லாது அலுவலகங்களுக்கும் பயன்படுத்தலாம். அதிக நபர்கள் அலுவலகத்தில் இருக்கும் பொழுது அறையின் வெப்பநிலையை குறைப்பது, ஆள் இல்லாத பொழுது அனைத்து மின்விசிறிகளையும் அணைத்து வைப்பது, விளக்குகளை அணைப்பது எனப் பல வசதிகளை அலுவலகங்களுக்கும் நம்மால் பயன்படுத்த இயலும். அதன்மூலம் மின்சாரத்தையும் வெகுவாக சேமிக்க இயலும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் வீட்டை நெருங்கும்பொழுது நம் வீட்டின் கதவுகளை நம்மால் திறக்கச்செய்ய இயலும். வீட்டுக்குள் நுழையும்போதே அனைத்து விளக்குகளையும் எரியச் செய்து, மின்விசிறிகளை நம்மால் ஆன் செய்ய முடியும். வீட்டில் உள்ள பிரிட்ஜ்-ஐயும் நம்மால் ஸ்மார்ட்டாக பயன்படுத்த இயலும். அதன் உள்ளே வைக்கும் பொருட்கள் எவ்வளவு நாட்களில் காலாவதியாகும் என்கிற தகவலை அதன் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள இயலும்.

Smart home
Smart home

ஸ்மார்ட் ஹோம்களில் பலரும் கவலைப்படும் ஒரு முக்கிய பின்னடைவு நம் ஸ்மார்ட் ஹோமுக்கு வைத்திருக்கும் பாஸ்வேர்டை யாரேனும் ஹேக் செய்து, நாம் இல்லாமலேயே நம் வீட்டின் கதவுகளை திறந்து எதையாவது திருடிச் சென்று விடுவார்களோ என்ற பயமும் நாம் இல்லாத நேரத்தில் வீட்டில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடும் என்ற அச்சமும் ஆகும். இன்டர்நெட் ஆப் திங்ஸில் இதுபோன்ற சிக்கல்களும் இருக்கின்றன. ஸ்மார்ட் ஹோம்களை வடிவமைத்து தரும் நிறுவனங்கள் இந்தப் பிரச்னைகளை கருத்தில்கொண்டு பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றன.

தற்பொழுது பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் ஹோம்கள் வெகுவிரைவில் பலரது வீடுகளில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

வெல்கம் ஸ்மார்ட் ஹோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு