மாதத்தில் பத்துப் புது போன்கள் சந்தைக்கு வருகின்றன. என்னென்னவோ அப்டேட்டுகள் விடுகிறார்கள். ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது நாளுக்கு நாள் வெல்ல முடியாத விளையாட்டுபோல மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎக்ஸ்சேஞ்ச் நல்லது!
புதுப் போன் வாங்க முடிவு செய்தவுடனேயே சிலர் பழைய போனை வீட்டில் யாருக்கேனும் கொடுத்துவிடலாம் என நினைப்பார்கள். ஒரு சிலரோ போனை எக்ஸ்சேஞ்ச் செய்துவிடலாம் எனத் திட்டமிடுவார்கள். இந்த இரண்டும் ஒரு நல்ல யோசனைதான். ஆனால், கையில் இருப்பது ஒரு வருடம் பழைய போனாக இருந்தால் மற்றவர்களுக்குக் கொடுப்பது ஓகே. அதுவே இரண்டு வருடம் அல்லது அதற்குமேல் பழையது என்றால் குறைந்த மதிப்பு என்றாலும் எக்ஸ்சேஞ்ச் செய்வதுதான் நல்லது. டிஜிட்டல் குப்பையாக வீட்டில் வைத்திருப்பது வேஸ்ட்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிக விலை அவசியமில்லை!
ஒரு மொபைலின் தரம் அதன் விலையை வைத்து மட்டுமே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குறைவான விலையிலேயே ஒரு நல்ல போனை வாங்கிவிட முடியும். போட்டி அதிகமாக இருப்பதால் பிரீமியம் செக்மென்டில் இருக்கும் ஒரு சில வசதிகள் சில மாதங்களிலேயே பட்ஜெட் மொபைல்களில் தலைகாட்டத் தொடங்கிவிடுகின்றன என்பதால் மிகச்சில வசதிகளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டாம்.
தேவையற்ற வசதிகளைத் தவிர்த்துவிடுங்கள்.
ஒரு போனை வாங்கும்போது செலவு வைப்பவை அதில் இருக்கும் தேவையில்லாத வசதிகள்தான். போனை வாங்குவதற்கு முன் ஒரு போனில் நம்முடைய பிரதானமான தேவைகள் என்ன... அதை எதற்கெல்லாம் பயன்படுத்தப்போகிறோம் என்பதில் தெளிவு முக்கியம். ஒரு போன் குறைந்த ஒளியில் சிறப்பான போட்டோக்களை எடுக்கும் என்பார்கள், இன்னொரு போனில் பிராஸசர் வேகம் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும் என விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் அந்த வசதிகள் எல்லாம் நமக்குத் தேவையானதாக இருக்குமா என யோசித்து வாங்குவது நல்லது.
ஆஃபர் இருந்தால் இன்னும் நல்லது
மொபைல் வாங்க ஆன்லைன்தான் பிரதானம் என்று ஆகிவிட்ட பிறகு ஆஃபர்களுக்காகக் காத்திருப்பதில் தவறில்லை. இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது சிறப்பு விற்பனையை நடத்தி விடுகிறார்கள். இதில் பெரும்பாலான போன்களின் விலையைக் கணிசமாகக் குறைத்து விற்பனை செய்கிறார்கள். மேலும் சில ஆஃபர்களும் இருப்பதால் மொபைலின் வழக்கமான விலையில் சில ஆயிரம் ரூபாயைக் குறைத்து வாங்க முடியும்.
பழைய Flagship ஸ்மார்ட்போன்களையும் வாங்கலாம்
சிலர் ஃபிளாக்ஷிப் போன் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கலாம். ஆனால் புதிதாக அறிமுகமாகும் ஃபிளாக்ஷிப் போன்களின் விலை எப்படியும் ஐம்பதாயிரம் ரூபாயைத் தாண்டும். ஒரு போனுக்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டாம் என நினைத்தால் அவர்கள் பழைய ஃபிளாக்ஷிப் போன்களை வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம். ஒரு நிறுவனம் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் போது அதற்கு முந்தைய வருடம் வெளியான ஃபிளாக்ஷிப் போனின் விலையைக் குறைக்கும். பழைய போனில் இருக்கும் வசதிகளே போதுமானதாக இருக்கும் என நினைத்தால் அதையே வாங்கலாம்.