Published:Updated:

`சார்ஜ் போடக்கூட போர்ட் கிடையாது!' - 2021-ல் வயர்லெஸ் ஐபோன்?

போர்ட்லெஸ் ஐபோன்
போர்ட்லெஸ் ஐபோன்

அப்படி வெளிவந்தால் முழுக்க முழுக்க வயர்லெஸ்ஸாக இயங்கும் முதல் போனாக இது அமையலாம்!

ஆப்பிள் மொபைல்களை ஆராய்வதில் புகழ்பெற்ற மிங்-சி கோ (Ming-Chi Kuo) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன், வரப்போகும் ஐபோன் பற்றிய தகவல்களை இவர் துல்லியமாகத் தெரிவித்திருக்கிறார். இப்போது 2021-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன்கள் போர்ட்கள் (Port) எதுவுமே இல்லாமல் வெளிவரும் எனக் கணித்துள்ளார். அதாவது இயர்போன்ஸ், சார்ஜிங் என அனைத்துமே அதில் வயர்லெஸ் மட்டும்தான். ஏற்கெனவே, தற்போது வரும் மொபைல்கள் சார்ஜிங்கிற்கான போர்ட்டுடன் மட்டுமே வருகிறது.

மிங்-சி கோ(Ming-Chi Kuo)
மிங்-சி கோ(Ming-Chi Kuo)

இந்த மாற்றம் உயர் ரக ஐபோனில் மட்டும்தான் இருக்கும், மற்ற மாடல்களில் USB-C கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் அவர்.

இதுமட்டுமல்லாமல், 2020-ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் ஆப்பிள் போன்களைப் பற்றியும் கணித்துள்ளார். இவரின் கணிப்பின்படி, அடுத்த ஆண்டு 5 புதிய மாடல்கள் வெளியாகவுள்ளது. முதலாவதாக SE 2 எனப்படும் மாடல் வெளியாகும். 4.7 இன்ச் எல்சிடி(LCD) திரையும், ஐபோன் 8-ல் இருந்த குணாதிசயங்கள் இதில் வெளிப்படும் என்றும் தெரிவிக்கிறார் அவர்.

`இறங்கி அடித்திருக்கும் ஆப்பிள்!' புதிய யுக்தி கைகொடுக்குமா? #AppleEvent
முந்தைய ஐபோன் SE
முந்தைய ஐபோன் SE

மற்ற நான்குமே OLED டிஸ்ப்ளேக்களுடன் 2020-ல் வெளிவரும். அவற்றில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இருக்கும். இந்த வருடம் வெளியான மூன்று கேமராக்கள் கொண்ட மாடல் போலவே அடுத்த ஆண்டும் இரண்டு மாடல்கள் வெளியாகும். அந்த ஐபோன்கள் 6.1 இன்ச் மாடல் மற்றும் 6.7 இன்ச் மாடல். இந்த அளவுகளில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு மாடல்களும் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ ,மேக்ஸ் மாடல்களின் இடத்தைப் பூர்த்திசெய்யும்.

ஐபோன் 11
ஐபோன் 11

மற்ற இரண்டு OLED ஐபோன்கள் இரண்டு கேமரா மாடல்கள். ஐபோன் 11 போன்களைப் போலவே இவை இருக்கும். ஆனால், அந்த இரண்டு கேமரா அமைப்பைக் கொண்ட மாடல்கள் வெவ்வேறு அளவுகளில் வெளியாகும் அவற்றை ஐபோன் 12 என்று அழைக்கலாம். 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் அளவுகளில் இவை வெளிவரும் என்று கணிக்கிறார் இவர். இதில், SE 2 வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பது ஏற்கெனவே லீக் ஆன டிசைன் மற்றும் தகவல்கள் மூலம் தெரிகிறது. மற்ற ஐபோன் கணிப்புகள் பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு