Published:Updated:

`அந்த 505 எரர்தான் இதற்கான விதை!' - ரெட்மி K20 சீரிஸை வெளியிட்ட ஷியோமி

இனிமேல் பிரீமியம் செக்மென்ட் பக்கமும் கொஞ்சம் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறது ஷியோமி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் வெற்றிகரமாக ஐந்து வருடங்களைக் கடந்திருக்கிறது ஷியோமி நிறுவனம். 2014-ம் ஆண்டில் ஜூலை மாதம் 14-ம் தேதி Mi 3 ஸ்மார்ட்போனை முதல் முறையாக அறிமுகப்படுத்தியதன் மூலமாக இந்திய மொபைல் சந்தைக்குள் கால்பதித்தது. அந்தக் காலகட்டத்தில்தான் மக்களிடையே ஸ்மார்ட்போன்கள் பரவலாகிக்கொண்டிருந்தன. சந்தையில் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்துகொண்டது ஷியோமி.

ஷியோமி
ஷியோமி
YouTube/Xiaomi India

பட்ஜெட் செக்மென்ட்டை முதல் இலக்காக வைத்தது. அதிக தரமும் குறைந்த விலையும் விரைவாகமக்களை ஈர்க்கவே இந்தக் குறைந்த காலகட்டத்துக்குள் முதலிடத்தில் இருக்கிறது. இன்று ஸ்மார்ட்போன் சந்தை தவிர்த்து ஸ்மார்ட் டிவி, ஃபிட்னஸ் பேன்ட் மற்றும் பவர் பேங்க் எனப் பல இடங்களில் முதலிடம் ஷியோமிக்குத்தான்.

ஐந்து வருடங்கள் கழித்து சந்தையும் மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்திருக்கிறது. மக்கள் மொபைலுக்காகக் கொஞ்சம் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதை ஷியோமியும் உணர்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே பட்ஜெட் செக்மென்ட்டைத் தவிர்த்துப் பிற செக்மென்ட்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் ரெட்மி K-சீரீஸை நேற்று அறிமுகம் செய்திருக்கிறது. அந்த நிகழ்வில் ஷியொமியின் ஐந்து வருடப் பயணத்தை நினைவுபடுத்தினார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின்.

ஷியோமி
ஷியோமி
YouTube/ Xiaomi India

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஷியோமி இந்தியாவில் நுழைந்த போது அது வெற்றி பெற முடியாது என்றே பலரும் கூறினார்கள். பெயரை உச்சரிக்கவே பலருக்குத் தெரியாதபோது எப்படி மொபைல் விற்பனையாகும் என்றார்கள். ஆனால் Mi3 போன் முதல்முறையாக விற்பனைக்கு வந்தபோது அன்றைய தினம் ஃப்ளிப்கார்ட்டின் இணையப்பக்கம் திணறியது. சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். '505 எரர்' என்ற செய்தியைக் காட்டியது ஃப்ளிப்கார்ட், அதன் வரலாற்றில் அப்படி ஒன்று நிகழ்வது அதுவே முதல் முறை. எனவே, எங்களுக்கு ஜுலை 22 மிகவும் முக்கியமான ஒரு நாள். அன்றைக்குதான் K-சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கும்' என அறிவித்திருக்கிறார் மனு குமார் ஜெயின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெட்மி K-சீரிஸில் இரண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குக் கொண்டு வருகிறது ஷியோமி. ஒன்று ரெட்மி K20 ப்ரோ மற்றொன்று K20.

Specifications (Redmi K20 Pro)

Redmi K20 Pro
Redmi K20 Pro
 • 6.39" AMOLED டிஸ்ப்ளே

 • 48MP + 13MP + 8MP ரியர் கேமரா

 • 20MP பாப் அப் ஃப்ரன்ட் கேமரா

 • Qualcomm® Snapdragon™ 855 புராஸசர்

 • Adreno™ 640 GPU

 • 27W ஃபாஸ்ட் சார்ஜிங்

 • 4000mAh பேட்டரி

 • 191g எடை

 • விலை

 • 6GB+128GB- ₹ 27,999

 • 8GB+256GB- ₹ 30,999

AMOLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ள முதல் ரெட்மி மொபைல் இது. இந்த மொபைலின் விலை அதிகம் என்பதால் IPS டிஸ்ப்ளேவுக்குப் பதிலாக இது கொடுக்கப்பட்டுள்ளது. இதில் HDR display என்ற வசதியையும் பெற முடியும். 7th Generation இன் ஸ்கிரீன் ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் வேகமாகச் செயல்படும். மூன்று கேமராக்கள் பின்பக்கமாக இருக்கின்றன. இதில் நடுவில் உள்ள 48MP பிரைமரி கேமராவில் Sony IMX586 சென்ஸார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே இருக்கும் 8MP டெலிபோட்டோ லென்ஸ் 2x ஆப்டிகல் ஜூம் திறன் கொண்டது. கீழே இருக்கும் 13MP கேமரா வைடு ஆங்கிள் லென்ஸைக் கொண்டது. ஒரு பொருளை வேகமாக அதே சமயம், துல்லியமாக ஃபோகஸ் செய்ய வேண்டும் என்பதற்காக லேசர் ஆட்டோ ஃபோகஸ் வசதியும் இதில் இருக்கிறது. இந்த மொபைலின் மூலமாக அதிகபட்சமாக UHD 4K வீடியோவும், 960fps ஸ்லோ மோஷன் வீடியோக்களை எடுக்க முடியும் பாப் அப் செட்டப்பில் 20MP கேமரா தரப்பட்டுள்ளது. இதில் இருப்பது Sapphire glass இருப்பதால் எளிதாக இது பாதிப்படையாது. மேலும் பாப் அப்பில் நோட்டிஃபிகேஷன் LED யும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

Redmi K20 Pro
Redmi K20 Pro

Snapdragon 855 புராஸசரை இதில் கொடுத்திருப்பதன் மூலமாக ஒன்ப்ளஸ் 7 புரோ மொபைலுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது K20 புரோ. டிஸ்ப்ளேவில் மட்டுமல்ல பின்பக்கமும் Gorilla Glass 5 தரப்பட்டுள்ளது. கார்பன் பிளாக், க்ளேஸியர் ப்ளூ, ஃப்ளேம் ரெட் என மூன்று நிறங்களில் இந்த போன் கிடைக்கும். 27W ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பதன் மூலமாக 30 நிமிடங்களில் 58% வரை சார்ஜ் ஏறும். ஆனால், இந்தத் தடவையும் அதற்கேற்ற சார்ஜரை உடன் கொடுக்கத் தவறிவிட்டது ஷியோமி. வேண்டுமானால் தனியாக வாங்கிக்கொள்ளலாம். அதற்காக 999 ரூபாய்க்கு 27W திறன் கொண்ட Mi SupersonicCharge என்ற சார்ஜரும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Specifications (Redmi K20)

ரெட்மி K20 ப்ரோ-வுக்கும் இதற்கும் இடையே பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. உள்ளே இருக்கும் சில விஷயங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.

இதில் Snapdragon™ 730 புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 48MP பிரைமரி கேமராவில் இருப்பது Sony IMX586 சென்ஸார். 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த போன் சப்போர்ட் செய்கிறது. அதற்கான சார்ஜரும் உடன் கொடுக்கப்படுகிறது.

Redmi K20
Redmi K20
 • 6.39" AMOLED டிஸ்ப்ளே

 • 48MP + 13MP + 8MP ரியர் கேமரா

 • 20MP பாப் அப் ஃப்ரன்ட் கேமரா

 • Qualcomm® Snapdragon™ 730 ப்ராஸசர்

 • Adreno™ 618 GPU

 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

 • 4000mAh பேட்டரி

 • 191g எடை

 • விலை

 • 6GB+64GB - ₹ 21,999

 • 6GB+128GB - ₹ 23,999

மொபைல் தவிர நேற்றைக்கு Mi Neckband என்ற Bluetooth இயர்போன் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை 1,599 ரூபாய். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரைக்கும் பயன்படுத்த முடியும்.

Mi Neckband
Mi Neckband

முதல்முறையாக ரெட்மி சீரிஸ் மொபைல்களின் விலை இருபதாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதன் வசதிகளுக்கு ஏற்ற சரியான விலையைத்தான் ஷியோமி நிர்ணயம் செய்திருக்கிறது என்றாலும், விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பட்ஜெட் செக்மென்ட்டில் ரெட்மி சீரிஸ் முதலிடத்தைப் பிடித்துவிட்ட நிலையில் பிரீமியம் செக்மென்ட்டிலும் அதன் ஆதிக்கம் இருக்குமா என்பது இன்னும் சில வருடங்களில் தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு