Published:Updated:

உயிரிழந்தவர்களின் குரலில் பேசும் `Alexa'; அமேசானின் புதிய அப்டேட் எப்படிச் சாத்தியம்?

காலம் கொண்டு சென்ற நம் நண்பர்கள், உறவினர்களின் குரல்கள் நம் அறைமுழுவதும் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டுவருகிறது அமேசான் நிறுவனம்.

உயிரிழந்தவர்களின் குரலில் பேசும் `Alexa'; அமேசானின் புதிய அப்டேட் எப்படிச் சாத்தியம்?

காலம் கொண்டு சென்ற நம் நண்பர்கள், உறவினர்களின் குரல்கள் நம் அறைமுழுவதும் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டுவருகிறது அமேசான் நிறுவனம்.

Published:Updated:

கற்பனை செய்து பாருங்கள் நாம் மிகவும் மிஸ் பண்ணும் நமக்குப் பிடித்தவர்களின் குரல்கள் அல்லது காலஞ்சென்ற நம் நண்பர்கள், உறவினர்களின் குரல்கள் நம் அறைமுழுவதும் கேட்டால் எப்படி இருக்கும்? இது நிஜவுலகில் சாத்தியமாகாமல் இருக்கலாம். ஆனால் டெக்னாலஜியால் இது சாத்தியமே! சமீபத்தில்கூட இறந்தவர்களை மெட்டாவெர்ஸ் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கின்றனர். அந்த வகையில் அமேசான் நிறுவனம் அலெக்ஸா மூலம் இறந்தவர்களின் குரல்களைக் கொண்டுவருகிறது.

அமேசானின் கேட்ஜெட்டான அலெக்ஸா இன்டர்நெட் வசதியுடன் இயங்கும் ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர். இது நம் கட்டளைகளை உள்வாங்கி அதற்கு இன்டர்நெட் உதவியுடன் பதிலளிக்கும். மேலும் இது அல்காரிதம் செய்யப்பட்ட ஆண் - பெண் இரு குரல்களில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பேசும் திறனைக் கொண்டது. இதைப் பயன்படுத்தி நம் சந்தேகங்களைக் கேட்டறிவது, பாடல்களை பிளே செய்வது எனப் பல்வேறு செயல்களைச் செய்ய முடியும்.

அலெக்ஸா
அலெக்ஸா

இப்படிப் பல வசதிகள் கொண்ட இந்த அலெக்ஸா சாதனத்தை இன்னும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது அமேசான் நிறுவனம். அதில் குறிப்பாக உயிரிழந்தவர்களின் குரல் போல் மிமிக் செய்து பேசும் புதிய வசதியைக் கொண்டுவருகிறது. இதன் மூலம் நாம் விரும்புவோரின் குரல்களை அலெக்ஸாவில் செட் செய்துவிட்டால் போதும், அது அவர்களின் குரலில் அனைத்து வார்த்தைகளையும் பேசும் திறனைத் தன்னிச்சையாக வளர்த்துக் கொள்ளும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!