Published:Updated:

`அலெக்ஸாவில் இது புதுசு!'... முதல் முறையாகக் குரல் கொடுக்கும் சாமுவேல் எல் ஜாக்சன்

samuel l jackson
samuel l jackson

கூடிய விரைவில் மேலும் சில குரல்களும் அலெக்ஸாவில் சேர்க்கப்படவுள்ளன

மார்வெல் சீரிஸின் நிக் ஃபியூரி கதாபாத்திரம் மற்றும் டாரன்டினோவின் பெரும்பாலான படங்களில் முக்கிய நபராக இடம்பெறும் ஹாலிவுட் நடிகரான சாமுவேல் எல் ஜாக்சன் தற்போது அமேசான் நிறுவனத்தின் அலெக்ஸா கருவிக்குக் குரல் கொடுக்க உள்ளார். மிகவும் தனித்துவமான, எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இவரின் குரல் இருக்கிறது.

Amazon Alexa
Amazon Alexa

ஏற்கெனவே பல பிரபலங்கள் அலெக்ஸாவிற்குக் குரல் கொடுத்திருந்தாலும் அவை அனைத்தும் முன்பே பதிவுசெய்யப்பட்ட (pre-recorded) ஆடியோக்கள். ஆனால் சாமுவேல் ஜான்சன் உடனான நமது உரையாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும்.

அமேசான் நிறுவனம் தனது அலெக்ஸா கருவியின் செறிவான மொழி வளர்ச்சிக்கு ஜாக்சனின் குரலைப் பயன்படுத்தப் போவதாகவும், இதன் மூலமாக அவருக்கு நற்பெயர் ஏற்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

Amazon Alexa
Amazon Alexa

அலெக்ஸாவில் வெளியாகும் முதல் ஹாலிவுட் பிரபலத்தின் குரலாக ஜாக்சனின் குரல் இருக்கப்போகிறது. ஏற்கெனவே தனியுரிமை தொடர்பாகப் பல சிக்கல்கள் எழுவதால் அதைச் சரி செய்யும் வகையில் அலெக்ஸாவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் கடந்த புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் மேலும் பல்வேறு பிரபலங்களின் குரல்கள் அலெக்ஸாவில் சேர்க்கப்பட இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு