Published:Updated:

ஆப்பிளின் வலிமை அப்டேட்!

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்

ஆப்பிளின் வலிமை அப்டேட்!

கேட்ஜெட்ஸ்

Published:Updated:
கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

ஆப்பிள் நிகழ்வுகளில் ஐபோன் ஈவென்ட்தான் பலரது கவனத்தை ஈர்க்கும். அது அல்லாமல் பல அசத்தல் அப்டேட்ஸுடன் சைலன்ட்டாக சில மற்றும் சில நிகழ்வுகளையும் நடத்தும் ஆப்பிள். 'Peak Performance' என்று பெயரிடப்பட்ட நிகழ்வை அப்படித்தான் கடந்த மாதம் ஆப்பிள் நடத்தியது. புதிய ப்ராசஸர், புதிய பட்ஜெட் ஐபோன் என அசரடித்திருக்கிறது ஆப்பிள்.

தரமான கேமரா, வேற மாதிரி பெர்ஃபாமன்ஸ் என எல்லா விஷயத்திலும் டிஸ்டிங்க்ஷன் வாங்கும் ஐபோன்கள், விலை என்ற ஒற்றைக் காரணத்திற்காக பலராலும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தீர்வாக ஐபோன் SE என்ற பட்ஜெட் மாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது ஆப்பிள். இப்போது இந்த நிகழ்வில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஐபோன் SE மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.

ஐபோன் 13 சீரிஸில் பயன்படுத்தப்பட்ட அதே A15 பயானிக் சிப்பைத்தான் இந்த ஐபோன் SE-யிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதால் பெர்ஃபாமன்ஸ் தெறிக்கிறது! டிசைன் அதே டிசைன் என்பது ஏமாற்றம். 5G வசதியுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய ஐபோன் SE. அதே 4.7 இன்ச் ஸ்க்ரீன், டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. 43,900 ரூபாயிலிருந்து புதிய ஐபோன் SE-யை இந்தியாவில் வாங்கலாம்.

2020-ல் இன்டெல் புராசஸர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அதன் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளில் அதன் சொந்த சிப்களான M1, M1 Pro, M1 Max என மூன்று சிப்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதைத் தாண்டி, M1 Ultra எனும் சிப்பையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இரண்டு M1 Max சிப்களை இணைத்து M1 Ultra என ஒரு சிப்பாக உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். இதனால் M1 Max சிப்பில் இருக்கக்கூடிய ஸ்பெக்ஸ் அனைத்தும் இரட்டிப்பு ஆகியிருக்கிறது. 20 CPU கோர்கள், 64 GPU கோர்கள் மற்றும் 128 GB ரேம் ஆகிய அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது.

M1 Ultra - சாதாரண M1 சிப்பைவிட 8 மடங்கு அதிக திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். இந்தப் புதிய சிப்பை முதல் முறையாக அதன் புதிய 'மேக் ஸ்டூடியோ' (Mac Studio) கணினியில் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். மேக் மினியின் `பீஸ்ட்' வெர்ஷன் என மேக் ஸ்டூடியோவைச் சொல்லலாம். நான்கு 6k ரெசல்யூஷன் கொண்ட திரைகளையும், ஒரு 4K ரெசல்யூஷன் கொண்ட திரையையும் ஒரே நேரத்தில் இந்த மேக் ஸ்டூடியோவில் இணைத்துப் பயன்படுத்த முடியுமாம்.

எடிட்டர்கள், இசையமைப்பாளர்கள், VFX கலைஞர்கள் என அனைவரின் ஸ்டூடியோவிலும் இனி இந்த மேக் ஸ்டூடியோவைப் பார்க்கலாம். M1 Ultra சிப் கொண்ட மேக் ஸ்டூடியோ விலை: 3,89,900 ரூபாய் வெறும் கணினி (CPU) மட்டும் வைத்து என்ன செய்வது? அதற்கு இணையான டிஸ்ப்ளே வேண்டாமா? அதற்கும் இந்த நிகழ்வில் பதிலளித்திருக்கிறது ஆப்பிள். மேக் ஸ்டூடியோவுடன் பயன்படுத்தும்விதமாக புதிய 27 இன்ச் 5K திரையையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதன் விலை: 1,59,900 ரூபாய்!

ஆப்பிளின் வலிமை அப்டேட்!


புதிய iPad ஏர்:

புதிய சிப் கொண்ட புதிய ஐபேடு ஏர் மாடலையும் பீக் பெர்ஃபாமன்ஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். பயானிக் சிப்களைவிட வேகமான, ஆப்பிள் மேக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்த M1 ப்ராசஸரை இந்தப் புதிய ஐபேடு ஏருக்குக் கொடுத்திருக்கிறது ஆப்பிள். அதனால் பெர்ஃபாமன்ஸ் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். புதிய ஏர், 5G வசதியுடனும் வெளியாகியிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் M1 ப்ராசஸரானது, முன்னதாக இதில் பயன்படுத்தப்பட்ட A14 பயானிக் சிப்பைவிட 60 சதவிகிதம் வேகமானது எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். 54,900 ரூபாயிலிருந்து இந்த ஐபேடு இந்தியாவில் விற்பனையாகும்!

இப்படி ஐபேட், ஐபோன், மேக் என அனைத்திற்கும் புதிய புராசஸர்கள் மூலம் வலிமை சேர்த்திருக்கிறது ஆப்பிள். அதனால் 'வலிமை' வசனத்துடனே இந்தக் கட்டுரையை முடிக்கிறோம். 'வலிமை அளவற்ற வலிமை அதுவே இன்றைய தேவை!'

ஆப்பிளின் வலிமை அப்டேட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism