Published:Updated:

வேவு பார்க்க பயன்படுத்தப்படுகிறதா AirTag? மீண்டும் சர்ச்சையில் ஆப்பிள்!

AirTag | ஏர்டேக் - ஆப்பிள்

"ஏர்டேக்கை தேடிய போது அதைக் கிடைக்கவில்லை எனவே காருக்குள் சென்ற பின்னர் எங்கள் பைகளில் இருந்த துணிகளையும், பொருள்களையும் வெளியில் கொட்டினோம். அப்போது ஏர்டேக் வெளியில் வந்து விழுந்தது!" - ஜெனிபர் காஸ்டன்

வேவு பார்க்க பயன்படுத்தப்படுகிறதா AirTag? மீண்டும் சர்ச்சையில் ஆப்பிள்!

"ஏர்டேக்கை தேடிய போது அதைக் கிடைக்கவில்லை எனவே காருக்குள் சென்ற பின்னர் எங்கள் பைகளில் இருந்த துணிகளையும், பொருள்களையும் வெளியில் கொட்டினோம். அப்போது ஏர்டேக் வெளியில் வந்து விழுந்தது!" - ஜெனிபர் காஸ்டன்

Published:Updated:
AirTag | ஏர்டேக் - ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் பொருள்கள் தொலைந்து போகாமல் இருக்கவும், தொலைந்து போன பொருள்களை எளிதில் கண்டறியவும் பயன்படுத்தும் வகையில் ஏர்டேக் (AirTag) என்ற கேட்ஜெட்டை விற்பனை செய்து வருகிறது. பத்து ரூபாய் நாணயத்தை விடச் சற்று பெரிதாக இருக்கும் இந்த ஏர் டேக் சாதனத்தை ஒரு பொருளுடன் இணைத்துவிட்டால் போதும். ஐபோனை பயன்படுத்தி அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும்.

ஆகவே பலரும் பைக், கார் சாவி, ஹேண்ட் பேக், வீட்டின் சாவி போன்றவற்றுடன் ஏர்டேக்கை இணைத்துப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சமீப காலமாக இந்த ஏர்டேக்கை வைத்துக் குற்றச்செயல்களும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

டிஸ்னி லேண்டில் ஜெனிபர் காஸ்டன் குடும்பம்
டிஸ்னி லேண்டில் ஜெனிபர் காஸ்டன் குடும்பம்

அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்தான் அமெரிக்காவில், டிஸ்னி லேண்டிற்கு சுற்றுலா சென்ற ஜெனிபர் காஸ்டன் என்பவருக்கு நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த அன்று ஜெனிபர் காஸ்டன் என்பவரும் அவரது குடும்பத்தினரும் டிஸ்னி லேண்டை சுற்றி பார்த்து விட்டு அவர்களது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்க்கிங் ஏரியாவிற்குத் திரும்பியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ஏர்டேக் ஒன்று அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஐபோனுக்கு நோட்டிஃபிகேஷன் ஒன்று வந்திருக்கிறது. இந்தத் தகவலால் அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக காருக்குச் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"திடீரென தெரிய வந்த இந்தத் தகவலால் நாங்கள் குழப்பமடைந்தோம், பயந்தோம். ஏர்டேக்கை தேடிய போது அது கிடைக்கவில்லை. எனவே காருக்குள் சென்ற பின்னர் எங்கள் பைகளில் இருந்த துணிகளையும், பொருள்களையும் வெளியில் கொட்டினோம் அப்போது ஏர்டேக் வெளியில் வந்து விழுந்தது" என ஒரு செய்தி நிறுவனத்துக்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஜெனிபர் காஸ்டன்.

Apple AirTag
Apple AirTag

ஒருவர் அவரது பொருள்களைக் கண்டறியும் நோக்கத்திற்காகவே ஏர் டேக் வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றவர்களைக் கண்காணிக்க அல்ல என ஏர்டேக் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆப்பிள் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது.

மேலும் 24 மணி நேரத்துக்கு மேல் ஏர்டேக்கின் உரிமையாளர் அதனுடன் தொடர்பு கொள்ளவில்லையென்றால் தானாகவே அலாரம் அடிக்கும். வேறொருவரின் ஏர்டேக் அருகில் இருக்கும்போது ஐபோனுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பி தேவையற்ற கண்காணிப்பைத் தடுக்கும். இப்படியான பாதுகாப்பு வசதிகளுடன்தான் இதை வடிவமைத்திருப்பதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இருந்தும் இந்த கேட்ஜெட்டை வைத்து குற்றவாளிகள் பல்வேறு குழப்பங்களை விளைவிக்கலாம் என்பதால், இதன் மீதான விமர்சனங்களும் நியாயமான ஒன்றாகவே படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism