Published:Updated:

60,000 ரூபாய்க்கு ஆப்பிள் ஹெட்போன்ஸ்... ஏர்பாட்ஸ் மேக்ஸில் அப்படி என்ன ஸ்பெஷல்?

AirPods Max
AirPods Max ( Apple )

Adaptive EQ, Transparency mode, spatial audio, audio sharing, Active Noise Cancellation என பல வசதிகள் இதில் இருக்கும்.

இந்த வருடம் புதிய ஐபோன், மேக்புக், ஐபேட் என எப்போதையும் விட அதிக சாதனங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. M1 சிப்புடன் வந்த மேக் கணினிகளின் அறிமுகத்துடன் இந்த வருடம் ஆப்பிள் கடையை மூடுகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க இறுதியாக சர்ப்ரைஸ் ஒன்று இருக்கிறதெனத் தலையில் மாட்டிக்கொள்ளும் புதிய ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

AirPods Max
AirPods Max
Apple
'ஏர்பாட்ஸ் மேக்ஸ்' (AirPods Max) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதுதான் ஆப்பிளின் முதல் 'Over-ear' ஹெட்போன்ஸ். வரும் 15-ம் தேதி முதல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸ். இதன் விலை வெறும் 59,999 ரூபாய் மட்டுமே(!) என்கிறது ஆப்பிள்.

இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸில் அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது?!

இப்படி ஒரு ஹெட்போன்ஸை ஆப்பிள் அறிமுகம் செய்யப்போகிறது என ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்திருந்தன. அந்த தகவல்களில் இதை 'ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ' என ஆப்பிள் பெயரிடும் எனச் சொல்லப்பட்டிருந்தது. இதில் பெயர் மட்டும்தான் மாறியிருக்கிறது. மற்றபடி அப்போது சொல்லப்பட்ட விஷயங்கள்தான் இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஹெட் பேண்ட் கொடுத்திருக்கிறார்கள். மேலே மெஷ் (Mesh) ஃபினிஷ் கொடுத்திருக்கிறார்கள். காதுகளை மறைக்கும் இயர்கப்ஸுக்கு 'Matte' ஃபினிஷ் கொடுத்திருக்கிறார்கள். உள்ளே 'memory foam cushions' கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தமாக இந்த டிசைன் தலையில் எந்த ஒரு அழுத்தத்தையும் தராது. அனைத்து தரப்பினருக்கும் சௌகரியமாக இருக்கும் இந்த ஹெட்போன்ஸ் எனச் சொல்லியிருக்கிறது ஆப்பிள்.

Apple AirPods Max - Digital Crown
Apple AirPods Max - Digital Crown
Apple

ஆப்பிள் வாட்ச்களில் இருப்பது போன்ற சுழற்றக்கூடிய 'Digital Crown' இருக்கிறது. இதைக் கொண்டு எளிதாக ஆடியோ Pause/Play செய்ய முடியும், அழைப்புகளை அட்டெண்ட் செய்யமுடியும், Siri-யை ஆக்ட்டிவேட் செய்யமுடியும் என்கிறது ஆப்பிள். சரி, இதற்காகவா இந்த விலை என்கிறீர்களா? இல்லை ஆடியோ குவாலிட்டிக்குத்தான் இந்த விலை என்கிறது ஆப்பிள்.

40 mm Driver - Apple AirPods Max
40 mm Driver - Apple AirPods Max
Apple

இரண்டு பக்கமும் 40 mm ஆடியோ டிரைவர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பக்கமும் ஒரு H1 ஆடியோ சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த 10-core சிப் விநாடிக்கு 900 கோடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவல்லது. இது வரும் ஒலியை இன்னும் மேம்படுத்தி உங்களுக்குக் கொடுக்குமாம். ஆழமான பேஸ், துல்லியமான மிட்-ரேஞ்ச் என அனைத்துமே ஏர்பாட்ஸ் மேக்ஸில் தெளிவாகக் கேட்கும்.

இந்த H1 சிப் இருப்பதால் Adaptive EQ, Transparency mode, spatial audio மற்றும் audio sharing வசதிகள் இதில் இருக்கும். இத்துடன் வெளிப்புற சத்தங்களை நீக்கும் Active noise cancelation (ANC) வசதியும் இந்த ஹெட்போன்ஸில் உண்டு.

இதற்காக ஒரு காதிற்கு மொத்தம் நான்கு மைக் கொடுத்திருக்கிறார்கள். மூன்று வெளிப்புறம் இருக்கிறது, ஒன்று உட்புறம் இருக்கிறது. வெளிப்புறத்தில் இருக்கும் மைக்குகள் வெளியில் இருக்கும் சத்தத்தைப் பதிவுசெய்யும். உள்ளே இருக்கும் மைக் உள்ளே வரும் சத்தத்தைப் பதிவுசெய்யும். இந்த தகவல்கள் அனைத்தையும் கொண்டு அந்த சூழலிற்கு ஏற்ப சத்தத்தை மொத்தமாக நீக்கும் இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸின் ANC வசதி.

Apple AirPods Max
Apple AirPods Max
Apple

பேட்டரியை பொறுத்தவரையில் 20 மணிநேரம் பாடல்கள் கேட்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். ANC மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதிகளை ஆஃப் செய்து வைத்தால் இன்னும் கூட அதிக நேரம் பேட்டரி நீடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இதை ஆப்பிளின் 'Lightning' போர்ட் வழிதான் சார்ஜ் செய்ய முடியும். USB-C கொடுக்கப்படவில்லை. Space grey, silver, sky blue, green, pink ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போன்!

ஆனால், தற்போது சந்தையில் ஸ்டூடியோ ஹெட்போன்ஸே இதை விடக் குறைந்த விலையில் கிடைக்கிறது. கிட்டத்தட்டப் பாதி விலையில் உயர் ரக Sony WH-1000XM4 ANC மற்றும் Bose Noise Cancelling Headphones 700 மாடல்களை உங்களால் வாங்க முடியும்.
அடுத்த கட்டுரைக்கு