Published:Updated:

ஆப்பிள் பிராண்ட் துடைக்கும் துணி - விலை வெறும் ரூ.1,900 மட்டுமே! இதில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Apple Polishing Cloth | ஆப்பிளின் துடைக்கும் துணி
Apple Polishing Cloth | ஆப்பிளின் துடைக்கும் துணி

துடைக்கும் துணிக்கு இவ்வளவு விலையா எனப் பலரும் வாயடைத்து போயிருக்கிறார்கள். அப்படி இதில் என்ன ஸ்பெஷலாக இருக்கிறது தெரியுமா?

நேற்று முன்தினம் 'Apple Unleashed' என்ற பிரமாண்ட நிகழ்வில் புதிய மேக்புக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். புதிய அதிவேக புராசஸர்களை கொண்ட மேக்புக் மடிக்கணினிகள் 'வாவ்' சொல்ல வைத்தாலும் எப்போதும் போல விலையைக் கேட்டு 'அட போங்க பாஸ்' எனக் கடுப்பாகினர் ரசிகர்கள். மேக்புக் கணினிகளை விடுங்கள்! இந்த நிகழ்வில் இன்னொரு அறிவிப்பு அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.

Apple Polishing Cloth | ஆப்பிளின் துடைக்கும் துணி
Apple Polishing Cloth | ஆப்பிளின் துடைக்கும் துணி
ஆப்பிள் சாதனங்களைச் சுத்தம் செய்யச் சிறப்புத் துணி ஒன்றை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்தது ஆப்பிள். இதை 'Polishing Cloth' என அழைக்கிறது. இதன் விலை என்ன தெரியுமா? 1,900 ரூபாய். டைப்பிங் மிஸ்டேக் எல்லாம் இல்லை. இதன் விலை ஆயிரத்துத் தொள்ளாயிரம் இந்திய ரூபாய். இந்தத் தொகை அதிகம் என நினைப்பவர்கள் மாதம் ரூ.224 EMI-யாக செலுத்தி இதை வாங்கிக்கொள்ளலாம். சரி, இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

'காத்து காத்துக்கு நான் எங்க போவேன்' உங்களைப் போலவே எங்களுக்கும் இதில் ஸ்பெஷல் என்று சொல்ல எதுவும் தென்படவில்லை. மைக்ரோ-ஃபைபர் துணி பார்க்க செம பிரீமியமாக இருப்பதெல்லாம் உண்மைதான். அதைத் தாண்டி இதில் எதுவும் ஸ்பெஷலாக இருப்பதாகத் தெரியவில்லை. மென்மையான, எந்த உராய்வும் ஏற்படுத்தாத விதம் இது தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ஆப்பிள். இதைக் கொண்டு ஆப்பிள் சாதனங்களின் டிஸ்ப்ளேக்களை பாதுகாப்பாகத் துடைக்கமுடியுமாம். இந்த விலைக்கு பேக்கேஜாக 10-12 துணி கிடைக்கும் எனச் சிலர் நினைத்துக்கொண்டிருப்பீர்கள்... அப்படியெல்லாம் கனவு காண வேண்டாம். ஒற்றை துணியின் விலையே 1,900 ரூபாய்.

புதிய அப்டேட்களுடன் ஆப்பிளின் `Unleashed' நிகழ்வு... என்னென்ன அறிவிப்புகள்?!
ஐபோன், ஐபேட், மேக்புக், ஆப்பிள் வாட்ச் என எந்த சாதனத்துடனெல்லாம் பயன்படுத்தலாம் என ஒரு பெரிய Compatibility லிஸ்ட்டும் போட்டிருக்கிறார்கள். துணியின் கீழ் ஓரமாக ஆப்பிள் லோகோ பொதித்திருக்கிறார்கள். அதற்குத்தான் இந்த விலை போல. அதுவும் தூரத்திலிருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பில்லை.
Apple Polishing Cloth Compatibility list
Apple Polishing Cloth Compatibility list

ஆனால், ஆப்பிள் இப்படிச் செய்வது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு அதன் மேக் கணினிகளின் CPU-வுக்கான சக்கரங்களை 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஏன் என்று கேட்டால் வெகு சிலரே வாங்கும் ஒரு பொருளை உற்பத்தி செய்ய எங்களுக்கு அவ்வளவு செலவாகும் என்கிறார்கள்!

Apple Polishing Cloth | ஆப்பிளின் துடைக்கும் துணி
Apple Polishing Cloth | ஆப்பிளின் துடைக்கும் துணி
ஆப்பிளின் இந்த பாலிஷிங் துணியின் விலை பற்றி உங்கள் கருத்து என்ன... கமென்ட்களில் பதிவிடுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு