Published:Updated:

ரூ.11.25 கோடி வாட்ச்; கார் என்ஜினைப் போன்ற வடிவமைப்பு வேறென்ன ஸ்பெஷல்?

புகாட்டி டபிள்யூ 16 வாட்ச்

57.8 மிமீ × 44 மிமீ அளவும், 21.5 மிமீ உயரமும் கொண்டது. புகாட்டி டபிள்யூ 16 வாட்ச் அதன் மேல்புறம் கிரிஸ்டல் நீல நிறத்துடன் கண்ணாடி திரையாக உள்ளது.

ரூ.11.25 கோடி வாட்ச்; கார் என்ஜினைப் போன்ற வடிவமைப்பு வேறென்ன ஸ்பெஷல்?

57.8 மிமீ × 44 மிமீ அளவும், 21.5 மிமீ உயரமும் கொண்டது. புகாட்டி டபிள்யூ 16 வாட்ச் அதன் மேல்புறம் கிரிஸ்டல் நீல நிறத்துடன் கண்ணாடி திரையாக உள்ளது.

Published:Updated:
புகாட்டி டபிள்யூ 16 வாட்ச்

கூண்டுக்குள் அடைப்பட்ட முட்கள் காலத்தை துரத்த காலமும் விடாமல் நகர கடிகாரமாய் உரு கொண்டது. நாம் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கடிகாரத்தைப் பார்த்துவிடுகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இதன் வடிவமும் வளர்ச்சி கண்டது. சூரிய நிழல்- நீர் கடிகாரமாய் , நீர் - ஊசல் கடிகாரமாய் , ஊசல் - மணல் கடிகாரமாய் , மணல் கடிகாரம் - கைக் கடிகாரமாய் காலத்தை ஏற்றுக் கொண்டது. அந்த கைக் கடிகாரத்திலும் பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டது. நேரத்தை அலைபேசியில் கண்டது கடந்து தற்போது ஸ்மார்ட் வாட்ச்களில் நேரத்தை மட்டுமல்லாமல் தொலைபேசியின் குறுஞ்செய்திகளைக்கூட காணும் அளவுக்கு கடிகாரங்கள் அதிநவீனமாகிவிட்டது. அப்படி தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்டதுதான் புகாட்டி டபிள்யூ 16 கைக்கடிகாரம். இந்த புகாட்டி கடிகாரத்தை ஜேக்கப் அன் கோ மற்றும் புகாட்டி நிறுவனம் இணைந்து வடிவமைத்துள்ளது. இந்த கடிகாரத்தின் சிறப்பே இது புகாட்டி டபிள்யூ 16 காரின் மோட்டார் செயல்பாட்டைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதுதான். இது ஒரு தனித்துவமான கைக்கடிகாரமாக இருக்கும் என்று அதை உருவாக்கிய புகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 11.25 கோடி. 57.8 மிமீ × 44 மிமீ அளவும், 21.5 மிமீ உயரமும் கொண்டது. புகாட்டி டபிள்யூ 16-ல் மேல்புறம் கிரிஸ்டல் நீல நிறத்துடன் கண்ணாடி திரையாக உள்ளது. அதன் பக்கங்களில் ஒரு சிறிய பட்டன் போன்ற அமைப்பு உள்ளது.

புகாட்டி டபிள்யூ 16
புகாட்டி டபிள்யூ 16

பட்டனை அழுத்திய உடன் கடிகாரம் செயல்பட துவங்குகிறது. இதனுள் 190 வெள்ளை வைரங்கள், 18 காரட் வெள்ளை நிறத்தாலான தங்கப் பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுள் அரிய வகை கற்களை பொருத்த புது தொழில்நுட்ப யுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜேக்கப் அன் கோ தெரிவித்துள்ளது. நேரத்தைத் துல்லியமாகக் காட்ட 30 டிகிரி கோணத்தில் டூர்பில்லன் அமைக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தியதும் 16 பிஸ்டன்களும் செயல்படத் தொடங்குகிறது. பின் இந்த பிஸ்டன்கள் சுழலும் டர்போசார்ஜர்களைத் தூண்டுகிறது. இரண்டு உருளை வடிவ அமைப்பு கடிகாரத்தின் பின்புறம் அமைந்திருக்கிறது. ஒன்று என்ஜின் செயல்பாட்டிற்கும் மற்றொன்று நேரத்தின் செயல்பாட்டிற்கு பக்கவாட்டில் மூன்று பட்டன்கள் அமைந்துள்ளது. கீழ் அமைந்துள்ள பட்டன் நேரத்தை அமைக்கவும், நடு பட்டன் பவரை சேமிக்கவும் அனிமேஷனை செயல்படுத்தவும், மேல் பட்டன் அனிமேஷனைத் தொடங்கவும் பயன்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புகாட்டி காரின் இன்ஜீனை அப்படியே சித்தரிக்கிறது இந்த வகை கைக்கடிகாரம். "ஜேக்கப் அன் கோவில் எப்போதும் நாங்கள் ஆடம்பர கடிகாரங்களையே உருவாக்குகிறோம். இது வேறு யாரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாதவை. புகாட்டியுடன் இணைந்து இதுவரை யாரும் முயலாத ஒன்றை நாங்கள் முயற்சித்தோம். இது உலகின் உண்மையான மோட்டார் கைக்கடிகாரமாக அமையும்" என்று ஜேக்கப் அன் கோவின் சிஇஓ பெஞ்சமின் கூறியுள்ளார். இதை உருவாக்க ஒரு வருடம் ஆனதாம். கேஸின் வெளிப்புற வளையம் முழுவதும் பல கிறிஸ்டல்களால் அமைந்திருக்கிறது. மேலும் 578 கையால் அலங்கரிக்கப்பட்ட பொருட்களும் உள்ளதாம். காரின் மோட்டார் அம்சத்தை அப்படியே சித்தரிக்க பல நுணுக்கமான வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
2019 - ல் ஜேக்கப் அன் கோ மற்றும் புகாட்டி நிறுவனம் பல தனித்துவமான கடிகாரங்களை உருவாக்க இணைந்தது. இதுவரை இரண்டு தனித்துவமான கடிகாரங்களை இந்நிறுவனங்கள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.