Published:Updated:

சீனாவின் பறக்கும் கார்... துபாயில் பறக்க விட்டு சோதனை ஓட்டம்; விலை எவ்வளவு தெரியுமா?

பறக்கும் கார்

சீன நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக் கூடிய பறக்கும் கார்களை வடிவமைத்துள்ளது.

Published:Updated:

சீனாவின் பறக்கும் கார்... துபாயில் பறக்க விட்டு சோதனை ஓட்டம்; விலை எவ்வளவு தெரியுமா?

சீன நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக் கூடிய பறக்கும் கார்களை வடிவமைத்துள்ளது.

பறக்கும் கார்
உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் (AERWINS) உருவாக்கியுள்ள நிலையில், தற்போது சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் காரை வடிவமைத்திருக்கிறது.

Xpeng Aero HT என்ற சீன நிறுவனம், மின்சாரத்தில் இயங்கக் கூடிய பறக்கும் கார்களை வடிவமைத்திருக்கிறது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. 2020-ல் X1 என்ற முன்மாதிரியை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது X2 என்ற பறக்கும் காரைத் தயாரித்திருக்கிறது. X2 என்று பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்தப் பறக்கும் கார் முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. இந்தப் பறக்கும் காரில், ஒரு மூலைக்கு இரண்டு என்ற கணக்கில் மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைச் சாலைகளில் ஓட்டிச் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர்.

பறக்கும் கார்
பறக்கும் கார்

Xpeng Aero HT நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பறக்கும் கார், 2024-ம் ஆண்டு முதல் சந்தைகளில் வெளியாகும் என்றும், அதன் விலை 1,56,600 அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த திங்கள் கிழமையன்று (10.10.2022) துபாயில் இந்தப் பறக்கும் காரின் சோதனை ஓட்டம் 90 நிமிடத்திற்கு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து Xpeng Aero HT நிறுவனத்தின் பொது மேலாளர் மின்குவான் கியூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ``சர்வதேச சந்தையில் இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதன் முதற்கட்டச் சோதனைக்காக நாங்கள் துபாயைத் தேர்வு செய்தோம். காரணம், துபாய் உலகின் புதுமையான நகராக உள்ளது. அடுத்த தலைமுறையின் பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளமாக இந்தச் சோதனை அமையும்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.