Published:Updated:

`ஒன்ப்ளஸ் 8 இப்படித்தான் இருக்கும்?' - கசிந்த புதிய படங்கள்! #Leaked

புதிய 3D ரெண்டர் படங்கள் சமீபத்தில் கசிந்திருக்கின்றன!

ஒன்ப்ளஸ் 8 | Oneplus 8
ஒன்ப்ளஸ் 8 | Oneplus 8 ( Onleaks x CashKaro )

சமீபத்தில்தான் ஒன்ப்ளஸ் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 7T-யை வெளியிட்டது. மூன்று கேமரா, 90Hz டிஸ்ப்ளே என அசத்தல் வசதிகளுடன் வந்த இது மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. இன்னும் முதல்கட்ட விற்பனையே ஓயாத நிலையில், ஒன்ப்ளஸ்ஸின் அடுத்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

ஒன்ப்ளஸ் 8-ன் கசிந்த ப்ரோடோடைப் ரெண்டர் படங்களை OnLeaks என்னும் பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களை வைத்துப் பார்க்கும்போது தோற்றத்தில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை போலவே இது இருக்கும் எனத் தெரிகிறது. பாப்-அப் கேமராவுக்குப் பதிலாக பஞ்ச்-ஹோல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஃப்ரன்ட் கேமரா டிஸ்ப்ளேயில் ஒரு சிறிய ஓட்டையில் இருக்கும். இதனால் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் இருந்த ஃபுல் டிஸ்ப்ளே அனுபவம் முழுவதுமாக கிடைக்காது என்றாலும் சற்றே பெரிய பேட்டரிக்கான இடத்தை இது தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஒன்ப்ளஸ் போனில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கூட வரலாம் எனத் தெரிகிறது. 7 ப்ரோவைவிட ஒன்ப்ளஸ் மெலிதானதாகவும் இருக்கும்.

அளவுகள்: 160.2 x 72.9 x 8.1 mm

OnLeaks அளித்துள்ள தகவலின்படி,``இந்த விரிவான வடிவமைப்பு படங்கள் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஊழியர் மூலம் கிடைக்கப்பெற்றது'' என்று கூறியிருக்கிறது. இது அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ஐபோன் 12-ன் படங்களும் இப்படிக் கசிந்தது குறிப்பிடத்தக்கது.