Published:Updated:

சாம்சங் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!

சாம்சங்
பிரீமியம் ஸ்டோரி
சாம்சங்

டிஜிட்டல் உலகம்

சாம்சங் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!

டிஜிட்டல் உலகம்

Published:Updated:
சாம்சங்
பிரீமியம் ஸ்டோரி
சாம்சங்

இந்தியாவுக்கு எக்ஸினோஸா, ஸ்நாப்ட்ராகனா என்ற கேள்விக்கு ஸ்நாப்ட்ராகனை டிக் அடித்திருக்கிறது சாம்சங். அமெரிக்காவில் ஸ்நாப்ட்ராகன், இங்கிலாந்தில் எக்ஸினோஸ் என ஒவ்வொரு சந்தைக்கும் இந்த இரண்டு சிப்களில் ஏதாவது ஒன்றை டிக் அடித்து வந்தது சாம்சங். இந்தியாவுக்கு இந்த முறை தங்களுடைய சொந்தத் தயாரிப்பான எக்ஸினோஸ் இல்லாமல், குவால்காமின் லேட்டஸ்ட் சிப்பான ஸ்நாப்ட்ராகன் ஜென் 8 ப்ராசஸருடன் களமிறங்கவிருக்கிறது சாம்சங். இதனை குவாஸ்காம் தங்களுடைய இந்திய ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவிக்க, அதனை உறுதி செய்திருக்கிறது சாம்சங். உலகின் சில சந்தைகளில் சாம்சங்கின் புதிய ப்ளாக்ஷிப்பான S22 வெளியாகிவிட, இந்தியாவில் இந்த மாதம்தான் விற்பனை தொடங்கவிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் போட்டியில் ஆப்பிள் முன்னணியில் இருந்தாலும், ஆண்ட்ராய்டைப் பொருத்தவரை சாம்சங் எப்போதுமே பலமான போட்டியாளர்தான். அதுவும் ப்ரீமியம் செக்மென்ட்டில் சாம்சங்குக்கும், ஒன்ப்ளஸ்ஸுக்கும்தான் கடுமையான போட்டி இருக்கும். ஒன்ப்ளஸ் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் ரசிகர் வட்டத்தைப் பூர்த்தி செய்ய, தங்கள் புதிய ப்ளாக்ஷிப்பில் என்ன அளித்திருக்கிறது சாம்சங்?

சாம்சங்
சாம்சங்

S21-க்கு 69,999 ரூபாயில் தொடங்கி S21 Ultra-வுக்கு 1,05,999 ரூபாய் வரை சென்றது சாம்சங். முந்தைய ப்ளாக்ஷிப்பைவிட அடுத்த ப்ளாக்ஷிப்பின் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதனைச் சாம்சங் சரியாகக் கடைப்பிடிக்கும் என்று நம்பலாம். இந்த முறை S22-வுக்கு 75,000 ரூபாயில் தொடங்கி S22 Ultra-வுக்கு 1,15,000 வரையிலான விலையை சாம்சங் நிர்ணயம் செய்யலாம்.

சாம்சங்கின் S21 சீரிஸ் வெளியான போது, அதற்கு நிறைவே பாஸிட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. முந்தைய S20 சீரிஸைவிட சிறப்பாக இதனை வடிவமைத்திருக்கிறது சாம்சங் என்ற கருத்துகள் பரவலாக இருந்தன. ஆனால், இந்தப் புதிய சாம்சங்குக்கு அப்படியான விமர்சனங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ‘டிஸ்ப்ளே தொடங்கி கேமரா பேட்டரி வரை எல்லாமே S21-ஐ விடக் கொஞ்சம் அப்கிரேடட் மாடல் போலவே இருக்கிறது இந்த S22’ என்பது தான் சாம்சங்கின் புதிய ப்ளாக்ஷிப் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். ஒரு ப்ளாக்ஷிப் மொபைல் என்பது வெறும் அப்கிரேடாக மட்டும் இல்லாமல், பயனர்களைக் கவரும் வகையில் புதிதாக ஏதாவது அறிமுகப்படுத்தவும் வேண்டும். S22-வில் சாம்சங் அதனைக் கோட்டை விட்டு விட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சாம்சங்
சாம்சங்

இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்தியாவுக்கென புதிய வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிட வாய்ப்புகள் குறைவு தான். சார்ஜர்கூட 45W சார்ஜர்தான் கொடுக்கிறதாம் சாம்சங். ஒவ்வொரு ஃப்ளாக்ஷிப்புடனும் ஆப்பிள் சிறப்பாகிக் கொண்டே போகிறது. ஆனால், சாம்சங் நிறையவே பின்தங்குகிறது. சாம்சங் ப்ரீமியம் செக்மென்ட்டில் கொடுக்கக்கூடிய சில வசதிகளை சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மிட்-ரேஞ்ச் செக்மென்ட்டிலேயே கொடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், அவை விலை குறைவான போன்களில் கொடுக்கக்கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக்கூட ப்ரீமியம் மொபைல்களில் சாம்சங் கொடுக்கவில்லை. நீங்கள் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் சாம்சங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism