Published:Updated:

OLED தெரியும், TOLED தெரியுமா..? வருகிறது ஷாவ்மியின் டிரான்ஸ்பரன்ட் டிவி!

Xiaomi TOLED
Xiaomi TOLED

இதே போன்ற டிவி ஒன்றின் மாதிரியை 2019-ல் எல்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தியது. ஆனால், ஷாவ்மி சட்டென இதை விற்பனைக்கே எடுத்து வந்துவிட்டது.

ஷாவ்மி நிறுவனம் தனது பத்தாவது ஆண்டில் கடந்த வாரம் காலடியெடுத்து வைத்தது. இதையொட்டி அதன் சிறப்புத் தயாரிப்பாக Mi Tv Lux OLED என்ற டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பர்த்டே பேபியா வெளிவந்திருக்கும் இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த டிவியின் டிஸ்ப்ளே முழுவதும் டிரான்ஸ்பரன்டாக இருக்குமாம். அதாவது டிவி ஓடாத நேரங்களில் அதன் பின்னிருப்பது அப்படியே தெரியும். இதன் விலை சுமார் 5.25 லட்சம் ரூபாய் ($7000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிவியை பயன்படுத்தும் போது, அதன்பின் பக்கத்திலிருந்து எந்த வெளிச்சமும் வரக் கூடாது. அப்படி வந்தால், அந்த வெளிச்சத்தால் இடையூறு ஏற்படலாம் என்கிறார்கள்.

MI TV LUX
MI TV LUX

ஷாவ்மியின் இந்த டிரான்ஸ்பரன்ட் டிவி 55 இன்ச் அளவில் வருகிறது. முன்பு சொன்னது போல இதைப் பயன்படுத்தாதபோது, இது வெறும் கண்ணாடி போன்றே தோற்றம் அளிக்கும். இதனுடைய ரெஃப்ரெஷ் ரேட் 120Hz ,ரெஸ்பான்ஸ் டைம் 1மைக்ரோ செகண்ட். இதனுடைய OLED ஸ்க்ரீன் டிரான்ஸ்பரன்ட்டானது என்பதால் இதை TOLED என அழைக்கின்றனர். இதற்குப் பின்னாளிலிருந்து வரும் ஒளி (backlight) தேவைப்படாதது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த டிவியின் முக்கிய பாகங்கள் அனைத்துமே கீழே ஒரு வட்ட வடிவ பாக்ஸில் இருக்கும். அதனால் இதை வால்-மவுன்ட் செய்ய முடியாது.

இதில் அனைத்து விதமான வீடியோக்களுமே பார்க்கத் துல்லியமாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அடுத்து வரும் ஆண்டுகளில் இது போன்ற ஸ்க்ரீன்கள் இன்னும் மேம்படும்.

Mi TV Stick: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்குக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாவ்மி!

இதேபோன்ற டிவி ஒன்றின் மாதிரியை 2019-ல் எல்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தியது. ஆனால், ஷாவ்மி சட்டென இதை விற்பனைக்கே எடுத்து வந்துவிட்டது. சீனாவில் ஆகஸ்ட் 16 முதல் இந்த TOLED டிவியின் விற்பனை தொடங்கியது. அந்நாட்டு மக்கள் இதற்கு என்ன மாதிரியான வரவேற்பைக் கொடுக்கிறார்கள் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்தச் சிக்கலும் இல்லையென்றால் விரைவில் இந்தியா போன்ற பிற சந்தைகளிலும் இது அறிமுகம் செய்யப்படும்.

'இது டிவி உலகில் மிகப்பெரிய புரட்சி... டெக் நிறுவனமாக எங்களது முக்கிய மைல்கல்' எனப் பெருமைகொள்கிறது ஷாவ்மி.

ஹாலிவுட் படங்களில் இது போன்ற டிரான்ஸ்பரன்ட் டிஸ்ப்ளேக்களைக் காட்டித்தான், கதை வருங்காலத்தில் நடக்கிறது என நம்மை நம்பவைப்பார்கள். இதுவும் இப்போது நிகழ்கால விஷயம் ஆகிவிட்டதால் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் இன்னும் பெரிதாக யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!
அடுத்த கட்டுரைக்கு