Published:Updated:

சிறுதொழில் முனைவர்களின் சிக்கல்களைத் தீர்க்க வந்த வால்மார்ட் ஊழியர்கள்! #AppReview

Dunow app
Dunow app ( Dunow )

தனி இணையதளம், கேட்டலாக், பேமென்ட், கஸ்டமருடன் சாட் என ஏகப்பட்ட வசதிகளைக் கொண்ட எங்கள் செயலி, அவர்கள் தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் குறைந்த கட்டணத்தில் தரும்.

சிறு வியாபரிகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்திருக்கிறது ஆன்லைன் ஷாப்பிங். குறிப்பாக, தங்களுக்கென ஒரு சந்தை இல்லாதவர்கள், வீட்டிலே ஓய்வு நேரத்தில் பொருள்கள் செய்பவர்களுக்கு அமேசான் , ஃப்ளிப்கார்ட் போன்றவை விற்பதற்கு உதவிசெய்கின்றன. ஆனால், சந்தை மட்டும்தான் தொழில்முனைவர்களின் பிரச்னையா? நிச்சயமில்லை. அவர்களுக்குத் தங்கள் தொழிலை இன்னும் சிறப்பாக நடத்த டிஜிட்டல் யுகத்தில் பல உதவிகள் தேவை. அவற்றைச் செய்ய உருவாக்கப்பட்டதுதான் DuNow என்ற செயலி.

Dunow app
Dunow app
Dunow

ஸ்ரீவத்ஸன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பரத் பாலச்சந்திரன் இருவரும் அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். ஆன்லைன் வர்த்தகம் பற்றிய நல்ல அறிவு கொண்டவர்கள். அதே சமயம், தமிழகத்தின் சிற்றூர்கள் மற்றும் அங்கே புகழ்பெற்ற சிறுதொழில்கள் பற்றியும் அறிந்தவர்கள். அங்கிருக்கும் இடைவெளியைப் பற்றி தெரிந்தவர்கள். ஆன்லைன் தளங்கள் அந்த இடைவெளியில் சிறிய பகுதியை மட்டும்தான் குறைக்கின்றன. இன்னும் ஏராளமான விஷயங்கள் செய்ய முடியும் என நம்பினார்கள். அந்த நம்பிக்கைதான் அவர்களை வேலையைவிட்டு இந்தியாவிற்குத் திரும்ப வைத்தது.

``பெரிய ஷாப்பிங் தளங்கள் விலை விஷயத்தில் கறாரானவர்கள். தங்கள் தளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் விற்க வேண்டுமென்பதால், உற்பத்தி செய்பவர்களால் விருப்பப்படி விலை வைக்க முடியாது. மேலும், சந்தையைத் தாண்டி நிதி சார்ந்தப் பிரச்னைகள், பிராண்டிங், இன்வென்ட்ரி போன்ற விஷயத்தில் அவர்களால் உதவ முடியாது. எங்கள் செயலி, இவை அனைத்திற்குமான தீர்வுகளைத் தருகிறது. தனி இணையதளம், கேட்டலாக், பேமென்ட், கஸ்டமருடன் சாட் என ஏகப்பட்ட வசதிகளைக்கொண்ட எங்கள் செயலி, அவர்கள் தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் குறைந்த கட்டணத்தில் தரும்” என்கிறார், ஸ்ரீவத்ஸன்.

ஸ்ரீவத்ஸன்
ஸ்ரீவத்ஸன்

தொடங்கிய சில மாதங்களிலே தமிழகம் முழுவதும் 5000-க்கும் அதிகமான தொழில் முனைவர்கள், இவர்கள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். கைவினைப்பொருள்கள் தயாரிப்போர், வீட்டிலிருந்தபடியே தொழில் செய்யும் பெண்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவர்களுக்கு DuNow உதவியாக இருக்கக்கூடும்.

ப்ளஸ்:

-உள்ளூர்ப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் கஸ்டமர் கேர்

- SEO போன்ற டெக்னிக்கல் சப்போர்ட்

- பயன்படுத்த எளிமை

மைனஸ்:

-இதன்மூலம் கிடைக்கும் சந்தை சிறியது

- கட்டணம் உண்டு

இந்தச் செயலியை டவுண்லோடு செய்ய:

அடுத்த கட்டுரைக்கு