Published:Updated:

யார் வாங்கலாம், எப்படித் தேர்ந்தெடுப்பது... ஸ்மார்ட் டிவி சில சந்தேகங்கள்! #FAQ

ஸ்மார்ட் டிவி மற்றும் அதன் பயன்பாடு பற்றிய கேள்வி-பதில்களைப் பார்க்கலாம்.

Smart Tv
Smart Tv

ஸ்மார்ட் டிவி என்றால் என்ன?

ஸ்மார்ட் டி.வி வைத்திருக்கிறீர்களா? - முதலில் இதைப் படியுங்கள்...

இன்டர்நெட் இணைப்புப் பெற்றிருக்கும் டிவிதான் ஸ்மார்ட் டிவி. எதர்நெட் கேபிள் அல்லது Wi-fi மூலம் இணையத்தோடு இணைத்து இந்த ஸ்மார்ட் டிவியை உபயோகம் செய்துகொள்ளலாம். திரைப்படம், டிவி சீரிஸ், இசைக் காணொலிகள் எனப் பெரிய திரைக்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் சேவைகள்மூலம் காணலாம். உங்கள் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் Netflix, யூடியூப், Facebook, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்துச் செயலி மற்றும் செயல்முறைகளை ஸ்மார்ட் டிவியிலும் பயன்படுத்தலாம். பொதுவாகவே ஸ்மார்ட் டிவிகளை, வழக்கமான டிவி ரிமோட்களால் கட்டுப்படுத்துவதைப் போன்றுதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள், கணினி 'mouse' போன்று இருக்கும் 'air-mouse' ரிமோட்டைப் பயன்படுத்துகின்றனர்.

யார் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்?

ஸ்மார்ட் டிவி
ஸ்மார்ட் டிவி

இதற்கான பதில் நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சித் தேர்வைப் பொறுத்தது. கேபிள் அல்லது DTH-ல் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக மட்டும் டிவியைத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் ஸ்மார்ட் டிவி தேவைப்படாது. இணையதள நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பவர்கள் மற்றும் பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை சந்தாதாரர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி மிகவும் சிறந்த சாய்ஸ். இணைய நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்காதவர்கள், ஸ்மார்ட் டிவியின் மூலம் பார்ப்பதற்கான வாய்ப்பும் ஏற்படலாம்.

ஸ்மார்ட் டிவியில் என்னென்ன நிகழ்ச்சிகளைக் காணலாம்?

Netflix series
Netflix series

ஸ்மார்ட் டிவி Streaming services மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு மிகவும் சிறந்தது. சில ஸ்மார்ட் டிவியில் உள்ள OS மற்றும் interfaces பிரபல ஸ்ட்ரீமிங் சேவைகளைக் கொண்டிருக்கும். இதன்மூலம், திரைப்படங்கள், டிவி சீரிஸ் போன்றவற்றைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஸ்ட்ரீமிங் சேவைகள் மாதாந்திர சந்தா அடிப்படையிலானவே என்றாலும் சில சேவைகளை இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதோடு, ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதிகளும் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. இதன்மூலம், பல்வேறு ஸ்ட்ரீமிங் தளத்திலிருந்து பாடல் மற்றும் இதர ஆடியோக்களைக் கேட்டுக்கொள்ளலாம். பாடல்களுக்காக YouTube, Spotify, JioSaavn, Hungama Music போன்ற செயலிகள் தற்போதுள்ள பல ஸ்மார்ட் டிவிகளில் இன் -பில்ட்டாகவே உள் ளன. கணினி அல்லது ஸ்மார்ட்போன்மூலம் பார்க்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும், ஸ்மார்ட் டிவியிலும் பார்க்கலாம்.

பல்வேறு வகையான ஸ்மார்ட் டிவிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

ஸ்மார்ட் போன்களை போலவே, பிராண்ட் மற்றும் software-க்கு ஏற்ப வெவ்வேறு Interface ஸ்மார்ட் டிவியிலும் இருக்கின்றன. LG மற்றும் சாம்சங் போன்ற பெரிய உற்பத்தியாளர்கள், தங்களுக்கென தனி interface கொண்டுள்ளனர். இதர உற்பத்தியாளர்கள், official ஆண்ட்ராய்டு டிவி போன்ற டெவலப்பர் interface அல்லது Android மற்றும் Linux பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட interface-களை கொண்டிருக்கின்றனர். Android TV, webOS, அல்லது சாம்சங்கின் Tizen போன்ற interface-களை பயன்படுத்துவதிலிருக்கும் மிகப் பெரிய நன்மை, பிரபலமான செயலிகளை எளிதில் பயன்படுத்த முடியும் என்பதுதான். அடிப்படை ஸ்மார்ட் டிவி interface, குறிப்பிட்ட சில செயலிகளை மட்டுமே கொண்டிருக்கும். இது பெரும்பாலும் மலிவு விலை ஸ்மார்ட் டிவிகளில்தான் காணப்படும்.

புதிய features-களை ஸ்மார்ட் டிவி தவறாமல் புதுப்பிக்குமா?

Smart Tv
Smart Tv

அது டிவியைப் பொறுத்தது. செயலிகளைச் சேர்ப்பது மற்றும் கஸ்டமைஸ் செய்துகொள்ளும் ஆப்ஷனை சில டிவி நிறுவனங்கள் அடிப்படையாகவே செய்துகொண்டு இருக்கின்றனர். சில நிறுவனங்கள், மென்பொருளில் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்வதிலும், டெவலப்பர்களுடன் இணைந்து செயலிகளை அப்டேட் செய்வதிலும் மற்றவர்களை விட விரைவாகச் செயல்படுகின்றனர். Roku மற்றும் ஆண்ட்ராய்டு டிவிகள் இதுபோன்ற அம்சங்களைப் பெற்றிருக்கிறது. மேலும் இது, வழக்கமான அப்டேட் மற்றும் கூடுதல் சேனல் / செயலிகளைப் பெறவும் உதவுகிறது.

ஸ்மார்ட் டிவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எவை?

கிட்டத்தட்ட அனைத்து முக்கிய டிவி தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட் டிவியை உற்பத்தி செய்கின்றன. அதில், LG, Panasonic, Philips, Samsung, Sharp, Sony, Toshiba மற்றும் Vizio ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. சீனத் தயாரிப்பாளர்களான TCL மற்றும் Hisense, built-in Roku சேவை போன்ற ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகின்றனர். இதன் உயர்தர மாடல்கள் மேலும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

கணினி, மொபைல் போன் போல ஸ்மார்ட் டிவியும் crash அல்லது hang ஆகுமா?

ஆம், ஆனால் இப்போது அந்தப் பிரச்னை பெருமளவில் குறைந்துள்ளது. அடிப்படையாகவே கணினி மற்றும் மொபைல் போனின் interface-ஐ ஸ்மார்ட் டிவிகள் கொண்டிருப்பதால், crash அல்லது hang ஆவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முன்பைவிட தற்போது சந்தையில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் டிவிகளில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவுதான். இப்போது இருக்கும் உற்பத்தியாளர்கள், அதிக சக்திவாய்ந்த பிராசஸர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், சிறந்த காம்பனென்ட் மற்றும் மெமரி ஸ்பேஸ், ஸ்மார்ட் டிவி ஹேங் ஆகும் பிரச்னையிலிருந்து காப்பாற்றுகிறது. எனினும், மேம்பட்ட மென்பொருள் உபயோகிக்காத மலிவு விலை ஸ்மார்ட் டிவியில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்ய முடியுமா?

Smart TV Gaming
Smart TV Gaming

இணையதளத்தோடு இணைத்துப் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தையும் ஹேக் செய்ய முடியும். ஆனால், சில எளிய முறைகளைப் பின்பற்றுவதன்மூலம் இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்யலாம். ஸ்மார்ட் டிவிகளில் உள்ள இன்டர்ஃபேஸ்களை வைத்தே, அதன் அனைத்துத் தகவல்களையும் ஹேக் செய்ய முடியும். அதனால், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அல்லாது ஆன்லைன் பேங்கிங் செய்வது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைக்கொண்டு ஷாப்பிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது.

ஸ்மார்ட் டிவியில் சிறந்த படம் மற்றும் ஒலியை உணர முடியுமா?

Built-in Wifi மற்றும் காணொலியின் அளவை குறைக்கும் பிராஸசர் போன்றவை படத்தின் தரத்தை நேரடியாகப் பாதிக்காது. உற்பத்தியாளர்கள் ஆரம்பத்திலேயே மேம்பட்ட ஸ்மார்ட் டிவி அம்சங்களை விலையுயர்ந்த HDTV-களில் சேர்த்துள்ளதால், மலிவு விலை ஸ்மார்ட் டிவிகளில் படத்தின் தரம் குறைந்து காணப்படும். ஆனால் Netflix, அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் பயன்பாடுகள் 4K மற்றும் HDR மூலம் இயக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதால், தெளிவான படம் மற்றும் ஆடியோக்களை உணர வழிவகுக்கிறது.