Published:Updated:

ஐபோன், ஒன்ப்ளஸ், ரியல்மீ... அமேசான் அதிரடி விற்பனையில் மிஸ் பண்ணக்கூடாத 10 கேட்ஜெட் ஆஃபர்ஸ்!

Great Indian sale Offers
Listicle
Great Indian sale Offers

இந்த விற்பனை காலத்தில் மிஸ் பண்ணக்கூடாத 10 கேட்ஜெட் ஆஃபர்ஸ்!


நம்ம ஊர்ல ஆடி மாசம் எப்படியோ டிஜிட்டல் உலகில் அக்டோபர் மாதம் அப்படி. தீபாவளியும் நெருங்குவதால் திகட்ட திகட்ட ஆஃபர்களை கொடுக்கின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். அப்படி ஃபிளிப்கார்ட்டில் பிக்பில்லியன் சேல்ஸும் அதற்குப் போட்டியாக அமேசானில் "கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸும் நடைபெற்றுவருகின்றன. செப்டம்பர் மாதம் 29-ம் தேதி தொடங்கிய இந்த விற்பனையானது அக்டோபர் 4-ம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆறு நாட்கள் நடக்கும் அதிரடி விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, வீட்டு உபயோக சாதனங்கள், ஹெட்ஃபோன்கள் என அனைத்தும் குறைந்தவிலையில் கிடைக்கும். இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறந்த டீல்களில் நீங்கள் மிஸ் செய்துவிடக் கூடாத பத்து பெஸ்ட் டீல்களின் தொகுப்புதான் இது. இதோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிரேடிட் மட்டும் டெபிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்குக் கூடுதலாக 10% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது அமேசான்.


1
Apple IPhone XR

ஆப்பிள் ஐபோன் XR

ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. ஐபோன் 11 அறிமுகத்துக்குப் பிறகு 49,900 ரூபாய்க்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஆப்பிளின் ஐபோன் XR தற்போது ₹39,999 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இந்தியாவில் இந்த மாடலின் விலை குறைந்துகொண்டே இருந்தாலும் இந்த அளவுக்குக் குறைவான விலையில் இது விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனவே ஆப்பிள் ஐபோன்தான் வேண்டும் என்று நிலையாக நிற்பவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். ஒன்ப்ளஸ் 7 ப்ரோ (OnePlus7 pro)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2
OnePlus7 pro

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ

மூன்று ரியர் கேமராக்கள் மற்றும் பல முக்கிய வசதிகளுடன் வந்த ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ₹49,999 ரூபாயிலிருந்து குறைந்து தற்போது ₹44,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது . இதன் டிஸ்ப்ளே முறையே 6.67 இன்ச்சாகவும் , குவால்கம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் 855 SoC உடனும் கிடைக்கிறது. மேலும் இது எக்ஸ்சேஞ்ச் ஆஃப்பரில் மொபைலுக்கேற்ப ₹13000 வரை தள்ளுபடி பெறுகிறது.


3
Samsung M30

சாம்சங் M30

சற்று குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு சாம்சங் M30 சிறந்த சாய்ஸாக இருக்கும் . இது ட்ரிபிள் கேமராவுடன், 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் கிடைக்கிறது. இதன் டிஸ்ப்ளே 6.4 இன்ச் ஃபுல் HD-யுடன் வருகிறது. மார்க்கெட்டில் ₹ 16,490 ரூபாய் என இருந்த இதன் விலை தற்போது ₹11,999 ரூபாய்க்குக் குறைந்துள்ளது .


4
Realme u1

ரியல்மீ u1

ரியல்மீ u1, அமேசானின் சேலில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று. இது டூயல் கேமரா மற்றும் 25 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இதன் டிஸ்ப்ளே அளவானது 6.3 இன்ச் ஃபுல் HD-யாக உள்ளது. மேலும் இது Mediatek Helio p70 பிராசஸர் கொண்டுள்ளது. இதன் விலை ₹12,999 ரூபாயிலிருந்து குறைந்து ₹7,999 ரூபாய்க்கு தற்போது கிடைக்கிறது. இதோடு பழைய ஃபோனை எக்ஸ்சேஞ்ச் செய்துவாங்கும்போது ₹7000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும் .


5
Bose quiet comfort 35

போஸ் கொயட் கம்ஃபர்ட் 35

உலகின் முன்னணி ஹெட்போன் நிறுவனமான போஸின் பிரீமியம் ஓயர்லெஸ் ஹெட்போனான கொயட் கம்ஃபர்ட் ₹29,362 ரூபாயிலிருந்து குறைந்து ₹20,549 ரூபாய்க்கு விற்கிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் உள்ளது. மிகுந்த சத்தத்திலும் நிம்மதியாகப் பாட்டுக் கேட்க வேண்டும் என்றால் இது செம சாய்ஸ்.


6
Bose revolve

போஸ் ரிவால்வ்

போஸ் நிறுவனத்தின் ப்ளுடூத் ஸ்பீக்கரான போஸ் ரிவால்வ் ₹19,990 ரூபாயிலிருந்து குறைந்து ₹13,929 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அலுமினிய பாடியுடன் வரும் போஸ் ரிவால்வின் சிறப்பம்சமாக வாட்டர் ரெஸிஸ்டன்ட் IPX4 ரேட்டிங் கொண்டுள்ளது. இந்த ப்ளுடூத் ஸீபீக்கர் மூலம் பாடல்களைக் கேட்பதுடன் கால்களும் செய்ய முடியும் . மேலும் இதை ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்தால் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டென்டிடம் உதவி பெறமுடியும்.


7
senheiser hd 4.50 se

சென்ஹைசர் HD 450 se

உலகின் சிறந்த ஹெட்போன் நிறுவனங்களில் ஒன்று சென்ஹைசர். இதன் வயர்லெஸ் ஹெட்போனான சென்ஹைசர் HD 4.50 se ₹14,999 ரூபாய் விலையிலிருந்து குறைந்து ₹6,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதிலும் ஆக்டிவ் நாய்ஸ் (active noise cancellation) கேன்சலெஷனும் ப்ளூடூத் 4.0 வசதிகளும் உள்ளன. இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜிற்கு பிறகு 19 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .


8
Tcl 50 inch 4k smart android tv

TCL 50 இன்ச் 4K ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

தற்போது இந்திய டச் மார்க்கெட்டில் பல்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிக்கள் வந்துவிட்டன. இதில் சற்றே அதிக விலைக்கு விற்பனைக்கு வந்த TCL-ன் 50 இன்ச் 4K டிவி தற்போது ₹64,990 ரூபாயிலிருந்து குறைந்து ₹29,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0. உடன் வந்த இந்த ஸ்மார்ட் டிவியில் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்டும் இடம்பெற்றுள்ளது. இந்த டிவி 18 மாத வாரண்டியுடன் கிடைக்கிறது .


9
mi led tv 4c pro

9 MI LED டிவி 4C ப்ரோ

MI-ன் LED டிவியான 4C ப்ரோ ₹14,999 விலையிலிருந்து குறைந்து தற்போது ₹10,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதில் பில்ட் இன் WiFi வசதி இருக்கிறது. குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க இதுவே சிறந்த சாய்ஸாக இருக்கும். இது Mali-450 MP3 ப்ராசஸருடன் வருகிறது.


10
vu 80cm hd ready smart led tv

Vu 80cm HD ரெடி ஸ்மார்ட் LED டிவி

Vu நிறுவனத்தின் ஸ்மார்ட் LED டிவியான இது ₹19,000 ரூபாயிலிருந்து குறைந்து ₹11,499 ரூபாய்க்குக் கிடைக்கிறது . இதிலும் பில்ட் இன் வைஃப வசதி உள்ளது. மற்றும் டூயல் கோர் Mali 470 MP3 பிராசஸருடன் வருகிறது .