Published:Updated:

புதிய பகுதி! - 1: கேட்ஜெட் கிளாஸ் ரூம்!

கேட்ஜெட் கிளாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ்

#Utility

புதிய பகுதி! - 1: கேட்ஜெட் கிளாஸ் ரூம்!

கேட்ஜெட். இந்த நூற்றாண்டில் சுவாரஸ்யத்தை அதிகரித்த பொருள்களில் முக்கியமானவை கேட்ஜெட்ஸ். கேட்ஜெட்களில் கவர்ச்சியானது டைம் மெஷின்தான். அந்த டைம் மெஷினில் ஏறி

20 ஆண்டுகள் பின்னால் போவோம். அப்போது நம் வீட்டில் இருந்த கேட்ஜெட்கள் டிஜிட்டல் கேமரா, லேப்டாப் போல சில விஷயங்கள். பேஜர் என்றுகூட ஒன்றிருந்தது. பெல்ட்டில் கோத்து கெத்தாகச் சுற்றியவர்கள் பலர். அப்போதெல்லாம் எந்த கேட்ஜெட் என்றாலும் விதி ஒன்றுதான். விஷயம் தெரியாதவர்கள் அதில் கை வைக்க அனுமதி கிடையாது. காரணம், அதில் எந்த பட்டனை அழுத்தினால் என்னவாகும், எப்படி ரியாக்ட் செய்யும் என்பதில் நமக்குத் தெளிவில்லாததுதான்.

2020-க்கு வருவோம். இப்போது வீட்டிலிருக்கும் கேட்ஜெட்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. வகைகளும் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் என்றழைக்கப்படும் இணையத்துடன் இணைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும் கேட்ஜெட்ஸ். இவை 2000 காலத்தைவிட சிக்கலானவை. காரணம், இவற்றில் இன்டர்நெட் வசதி உண்டு. அதனால், ஏதும் தவறு நடந்தால் அது நம் வீட்டுக்குள் மட்டும் இருக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் பார்த்துவிடும். அப்படியென்றால் அதை நாம் எப்படிக் கையாள வேண்டும்?

புதிய பகுதி! - 1: கேட்ஜெட் கிளாஸ் ரூம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2000-ல் இருந்ததைவிட இன்னும் கறாராக இருக்க வேண்டும். ஆனால், அப்படியா இருக்கிறோம்? இரண்டு வயது குழந்தை லேப்டாப்பை அதுவாகத் திறந்து யூடியூபில் `வெறித்தனம்' பாடலைப் பார்த்தால் சிலாகிக்கிறோம். அப்பளம் பொரித்துக் கொண்டே வாட்ஸ்அப்பில் வம்பளக்கிறோம்.

`ஹேய் அலெக்ஸா… ஹவ் இஸ் வெதர்?' எனக் கேள்வி கேட்கிறோம். இந்த கேட்ஜெட்களைப் பற்றியெல்லாம் நமக்கு முழுமையாகத் தெரியுமா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னையைச் சேர்ந்தவர் உஷா. லாக்டெளன் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்புதான் ஒன் ப்ளஸ் புது மாடல் மொபைல் ஒன்றை வாங்கியிருந்தார். லாக்டெளனில் அவருக்கு பேருதவியாக இருந்தது மொபைலும் உலகமே உலவிக்கொண்டிருக்கும் ஸூம் ஆப்பும்தான். படித்த நண்பர்கள், உறவினர்கள், அப்பார்ட்மென்ட்வாசிகள், வாக்கிங் தோழிகள் என லிஸ்ட் போட்டு, அவர்களுடன் ஸூம் கால் செய்ய டைம்டேபிள் போட்டு பேசி வந்திருக்கிறார். ஒரு நல்ல புதன்கிழமையில் கணவர் வழி உறவினர்களுடன் உரையாடுவது எனக் களமிறங்கியிருக்கிறார். ஒரு மணி நேரம் தொடர்ந்த உரையாடல் உஷாவுக்குப் பிடிக்கவில்லை. யாரோ ஒருவர் உஷாவைச் சீண்டியபடி இருந்திருக்கிறார். ‘எப்படா கால் முடியும்?’ என்றிருந்தவர், எல்லோரும் பை சொன்னதும் காதிலிருந்த ஹெட்போனைக் கழற்றிப் போட்டு,

கணவரிடம் ‘உங்க அக்காக்கு அன்னை தெரெசான்னு நினைப்பு… கல்யாணம் ஆன புதுசுல என்னை என்னவெல்லாம் டார்ச்சர் பண்ணாங்கன்னு தெரியாதா?' என்றெல்லாம் திட்டியிருக்கிறார்.

சோகம் என்னவென்றால், அவர் ஸூம் ஆப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறாரே தவிர, கால் முடியவில்லை. அனைத்தையும் டார்ச்சர் அக்கா கேட்டுவிட்டார். லாக்டெளன் முடிந்தாலும் இரண்டு குடும்பங்களும் பேசிக்கொள்ளும் சாத்தியம் இல்லையென்பதுதான் இன்றைய நிலவரம்.

ஏன் இந்தப் பிரச்னை? உஷாவுக்கு ஸூம் கால் கட் ஆகிவிட்டதா எனப் பார்க்கத் தெரியவில்லை. செயலியை க்ளோஸ் செய்தால் கால் கட் ஆகிவிடுமென நினைத்திருக்கிறார். ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் பல செயலிகளைத் திறக்கலாம். நாம் ஒரு ஆப்பைப் பார்த்துக்கொண்டிருப்போம். பின்னால், பல ஆப்கள் இயங்கிக்கொண்டிருக்கும். இந்த சிஸ்டம் செயல்படும் முறையை உஷா தெரிந்துகொண்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.

ஆக, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.சாதாரண அழைப்புகளைப்போல ‘App based calls'-ஐ நினைக்கக் கூடாது. அவற்றில் வீடியோ இணைப்பில் இருக்கிறதா, ஆடியோ ம்யூட்டில் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், இந்த லாக்டெளனில் உங்களுக்கு கோவிடைவிட பெரிய பெரிய பிரச்னைகள் வரக்கூடும். இவை மட்டுமா பிரச்னை?

- இன்னும் கற்போம்...