என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! : 4 - பாஸ்வேர்டு... பீ கேர்ஃபுல்

கேட்ஜெட் கிளாஸ் ரூம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ் ரூம்!

#Utility

நீங்கள் எந்த கேட்ஜெட் பயன்படுத்தினாலும், எந்த சமூக வலைதளத்தில் டைம் பாஸ் பண்ணாலும் அங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. அது, பாஸ்வேர்டு.

‘என் மொபைல்லயும் மெயிலிலும் நான் என்ன ராக்கெட் சயின்ஸா வெச்சிருக்கேன்? அதைத் திறந்து பார்த்து என்ன ஆகப்போகுது?’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ‘OTP’ ஒன்று போதும். நம் வங்கியிலிருக்கும் அத்தனை பணத்தையும் எடுத்துவிட முடியும். அந்த ‘OTP’ மொபைலுக்கும் பல நேரம் மெயிலுக்கும் வரும். அந்த இரண்டில் ஒன்றை ஒருவரால் அணுக முடிந்தால், முடிந்தது கதை. எனவே, நம் பாஸ்வேர்டு என்பது நம் லாக்கரின் சாவியைவிட முக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

‘அண்டா காகசம்... அபு க ஹுக்கும்.. திறந்திடு சீசே’

இதுதான் உலகின் முதல் பாஸ்வேர்டாக இருக்க முடியும். அதையும் ஹேக் செய்ய அத்தனை முயற்சிகள் நடந்தன. எவற்றையெல்லாம் பாதுகாக்க நினைக்கிறோமோ, அவற்றையெல்லாம் தகர்த்தெறிய யாரோ சிலர் முயற்சி செய்வார்கள் என்பதுதான் உலக நியதி. எனவே, நாம் போடும் ‘லாக்’ அவ்வளவு பாதுகாப்பதானதாக இருக்க வேண்டும்.வீட்டின் மெயின் கேட் பூட்டில் தொடங்கி, பயணத்தின்போது பயன்படுத்தும் சிறிய பையின் பூட்டு வரை கவனமாக இருக்கும் தோழிகள், கேட்ஜெட் மற்றும் ஆன்லைன் பாஸ்வேர்டுகளை அவ்வளவு சிரத்தையுடன் வைக்கிறார்களா... `இல்லை' என்கின்றன பல ஆய்வுகள்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! : 4 - பாஸ்வேர்டு... பீ கேர்ஃபுல்

ஒருவரின் மகன் பெயர் ‘babloo’. அவன் பிறந்த வருடம் 2010 என வைத்துக்கொள்வோம். வெறும் எழுத்துகளை மட்டும் பாஸ்வேர்டாக வைக்க வேண்டுமென்றால் ‘babloo' என வைப்பார். அத்துடன் எண்கள் வேண்டுமென்றால் ‘babloo2010 ‘ என மாற்றுவார். மேலும் சில ஸ்பெஷல் கேரக்டர்கள் வேண்டுமென்றால் ‘babloo@2010’. அவ்வளவுதான். இதை பிரேக் செய்ய வைரஸோ, சிக்கலான கோடிங்கோகூட தேவையில்லை. மகனின் பெயரும் பிறந்த ஆண்டும் தெரிந்தால் போதும். இப்படித்தான் 90 சதவிகிதத்தினர் பாஸ்வேர்டு வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு எது தெரியுமா?

qwerty - இது கீபோர்டின் மேல் வரிசையிலிருக்கும் முதல் ஆறு எழுத்துகள். சிலர் ‘password’ என்ற சொல்லையே பாஸ்வேர்டாக வைத்த கதையெல்லாம் உண்டு.

கீழ்க்காணும் பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு ஏதேனும் இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள். இவைதான் எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! : 4 - பாஸ்வேர்டு... பீ கேர்ஃபுல்

அப்படியென்றால் என்ன பாஸ்வேர்டு வைக்கலாம்? பாஸ்வேர்டு வைப்பதில் வேறு எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

முடிந்தவரை நீளமாக வைக்க வேண்டும்.

எழுத்துகள், எண்கள், ஸ்பெஷல் கேரக்டர்கள் (!@#$%& போல), கேபிட்டல் லெட்டர்ஸ் என முடிந்தவரை அத்தனை விஷயங் களும் கலந்திருப்பது நல்லது.

மொபைல் பேட்டர்ன் லாக் என்றால், கோடு, L போன்ற ரெகுலர் பேட்டர்ன்களையோ, ஒரு முறை பார்த்தாலே நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வடிவங்களையோ வைக்காதீர்.

உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய தேதிகளை உள்ளடக்கி பாஸ்வேர்டு வைக்கக் கூடாது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, நேரம் ஒதுக்கி உங்கள் அத்தனை பாஸ்வேர்டுகளையும் மாற்றுங்கள்.

Multi-factor authentication என ஒன்றிருக்கிறது. வங்கி, மின்னஞ்சல் போன்ற கணக்குகளைத் திறக்க வெறும் பாஸ்வேர்டு போதாது. நம் மொபைலுக்கு வரும் OTP எண்ணும் தேவை. அப்படி செட்டிங் வைத்துக்கொண்டால் ஹேக்கிங் பிரச்னையிலிருந்து 99% தப்பித்துக்கொள்ளலாம்.

நம் கேட்ஜெட் மட்டும் ஸ்மார்ட் ஆக இருந்தால் போதுமா, நாமும் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டாமா? அது எப்படி என அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்.