15 ஆண்டுகளுக்கு முன்பும் நாம் மொபைல்களைப் பயன்படுத்தி யிருக்கிறோம். ஆனால், அவற்றை ஸ்மார்ட்போன் என யாரும் சொன்னதில்லை. இப்போதைய மொபைல்கள் இணைய வசதியுடன் இருப்பதால் மட்டுமே அவை ஸ்மார்ட் இல்லை. வேலையை ஸ்மார்ட் ஆகச் செய்வதாலும் அப்படிச் சொல்கிறோம். மொபைல்கள் ஸ்மார்ட் ஆக இருந்தால் போதாது. நாமும் அவற்றை ஸ்மார்ட் ஆகப் பயன்படுத்த வேண்டும். இது கொஞ்சம் பெரிய பாடம்தான். அதனால், இந்த அத்தியாயத்தில் செயலிகள் எனப்படும் ஆப்களைப் பற்றி பார்க்கலாம்.

வெறும் ஸ்மார்ட்போன்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. உண்மையில், நமக்கு வேண்டியவற்றை செய்வன ஆப்ஸ்தான். ஸ்மார்ட்போன் என்பது அந்த ஆப்களை இயக்க உதவும் ஒரு கருவி. எனவே, மொபைலை நீங்கள் ஸ்மார்ட் ஆகப் பயன்படுத்துகிறீர்களா, இல்லையா என்பதை உங்கள் மொபைலிலிருக்கும் ஆப்களை வைத்து தான் சொல்ல முடியும். அதற்கு ஒரு எக்சர்சைஸ் இருக்கிறது.

முதலில் நம் மொபைலிலிருக்கும் ஆப்களை நமக்குப் பயன்படும் ஆப்கள், பயன் தராத ஆப்கள் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதை மூன்று வழிகளில் கண்டுபிடிப்போம்.

முடிவற்றவை: ஸ்விகி ஆப்பை எடுத்துக் கொள்வோம். அதில் உணவை ஆர்டர் செய்துவிட்டால் மூடிவிடுவோம். ஆனால், சில ஆப்களைத் திறந்தால் மூடவே மனம் வராது. அல்லது மூடுவதற்கு அவர்கள் நம்மை விட மாட்டார்கள். உதாரணம், கேண்டி கிரஷ்.

நோக்கமற்றவை: இந்த ஆப்கள் மூலம் எந்த வேலையும் நடக்காது. பயனும் இருக்காது. ஆனால், நம் மொபைலிலிருக்கும். சொல்லப் போனால் அவை இருப்பதே நமக்குத் தெரியாது. உதாரணம், Cache Cleaner

அடிக்ஷன் ஏற்படுத்துபவை: இந்த வகை ஆப்களைப் பயன்படுத்தா விட்டால் அவ்வளவுதான். கை நடுங்கும். கண் துடிக்கும். பெரும்பாலான சமூக வலைதள ஆப்களும், கேமிங் ஆப்களும் இதில் வரும். இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்தும்போது வேறு எதிலும் கவனம் இருக்காது.

மொபைலிலிருக்கும் ஆப்களில் இந்த மூன்றுக்குள் பொருந்தக்கூடியவற்றைப் பட்டியிலிடுங்கள். உடனடியாக அவற்றை அன்இன்ஸ்டால் செய்யச் சொல்லவில்லை. அவற்றை ஒரு ஃபோல்டருக்குள் போட்டு வையுங்கள். அந்த ஆப்களை நொடியில் திறக்க ஷார்ட்கட் ஏதும் ஹோம் ஸ்க்ரீனில் வைத்திருந்தால் அவற்றை டெலீட் செய்யவும். ஒவ்வொருமுறை இந்த ஃபோல்டருக்குள் இருக்கும் ஆப்களைத் திறக்கும்போதும் ஒரு மந்திரம் சொல்லுங்கள். அந்த மந்திரம் ‘ஐ'ம் ஸ்மார்ட்' (I am Smart).

15 நாள்கள் போகட்டும். அதன் பின்னர் நீங்கள் அந்த ஆப்களைப் பயன்படுத்துவது குறைந்திருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். குறைந்திருந்தால் அதனால் நீங்கள் என்ன இழந்தீர்கள் என யோசியுங்கள். அந்த ஆப்கள் உங்களுக்குத் தேவையே இல்லையென்றால் உடனடியாக அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். தேவை, ஆனால் எப்போதாவது நேரமிருக்கும்போது பார்க்கிறீர்கள் என்றால் ஃபோல்டருக்குள்ளே அவை இருக்கட்டும்.

பயன்பாடு குறையவில்லை யென்றால் தவறில்லை. அந்த ஆப்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள். எந்த ஆப்களை எல்லாம் குற்ற உணர்வின்றி, நீங்கள் ஸ்மார்ட் ஆகவே பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களோ அவற்றை ஃபோல்டரிலிருந்து வெளியே எடுத்து விடுங்கள். இவை அதிக மெமரியை எடுத்துக் கொள்ளும். அதனால் போகப் போக மொபைல் ஸ்லோ ஆகும். இந்தப் பயிற்சியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் மொபைலில் தேவையற்ற ஆப்கள் சேர்வ தும் குறையும். உங்கள் வாழ்க் கையின் நேரத்தை விழுங்கும் பயனற்ற ஆப்களும் குறையும்.

ஸ்மார்ட் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. அதி லொன்று நாம் செய்வதை உணர்ந்து, புரிந்து செய்வது. அதற்காகத்தான் இந்த ‘ஆப்ஸ் எக்சர்சைஸ்’. அடுத்த அத்தியாயத்தில் இன்னொரு ‘ஸ்மார்ட்’ விஷயத்தைத் தெரிந்துகொள்வோம்.