பிரீமியம் ஸ்டோரி

போன் 13 சீரிஸோடும் மற்ற கேட்ஜெட்டுகளுக்கான சில அப்டேட்களோடும், இந்த வருடம் ஆப்பிள் ஈவென்ட்டுக்குத் தயாராகியிருந்தது ஆப்பிள். கொரோனா காரணமாக இந்த வருடமும் விர்ச்சுவல் ஈவென்ட்டாகவே நடந்து முடிந்த ஆப்பிள் ஈவென்ட்டில் ஐபோன் 13 சீரிஸில் நான்கு புதிய போன்களையும், ஆப்பிள் 7 சீரிஸ் வாட்ச்சையும் புதிதாக அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அதோடு ஐபேட்களுக்கான அப்டேட்டையும் சிறிய சர்ப்ரைஸ் பேக்கேஜாகக் கொண்டு வந்தது ஆப்பிள். வருடா வருடம் புதிய போன்களைக் களமிறக்கினாலும், அப்டேட்கள் எதுவும் வாவ் ரகத்தில் கொடுப்பதில்லை என ஆப்பிள் மீது எப்போதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த ஆண்டு அந்தக் குற்றச்சாட்டுகளைக் களைந்து ரசிகர்களைக் கவர்வதற்காகப் புதிதாக ஏதாவது செய்திருக்கிறதா ஆப்பிள் என்றால், மீண்டும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வருடம் வெளியான சாதனங்களில் என்னென்ன மாறியிருக்கின்றன?

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மொபைல்கள் தான் ஐபோனின் தற்போதைய ஃப்ளாக்‌ஷிப் மாடல்கள். அதனுடன் ஐபோன் 13 மற்றும் 13 மினி ஆகிய மாடல்களையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். ஐபோன் 12 சீரிஸின் வசதிகளை மெருகேற்றி ஐபோன் 13-ஐ வழங்கியிருக்கிறது ஆப்பிள். கேமராக்கள் மெருகேற்றியிருக்கின்றன; பேட்டரி லைஃபும் உயர்ந்திருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சூப்பர். ஆனால், சொல்லிக் கொள்ளும்படியான எந்தப் புதிய வசதியும் இல்லை. ஆனால், விலை மட்டும் எப்போதும்போல் உயர்ந்திருக்கிறது.

அப்டேட் ஆகிறதா ஆப்பிள்?
அப்டேட் ஆகிறதா ஆப்பிள்?
அப்டேட் ஆகிறதா ஆப்பிள்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு