Published:Updated:

ஆப்பிளின் அடுத்த அப்டேட்ஸ்!

ஆப்பிள் அப்டேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்பிள் அப்டேட்ஸ்

கேட்ஜெட்ஸ்

ஆப்பிளின் அடுத்த அப்டேட்ஸ்!

இந்த மாத கேட்ஜெட்ஸிலும் ஆப்பிள் சாதனங்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். ‘திரும்பவும் ஆப்பிளா..’ என நினைக்க வேண்டாம். வருடத்திற்கு நான்கு நிகழ்வுகளையாவது நடத்தி விடுவது ஆப்பிளின் வழக்கம். செப்டம்பரில் மூன்றாவது நிகழ்வைத்தான் நடத்தி முடித்தது. நான்காவது நிகழ்வு பாக்கி இருந்தது. அதைத்தான் அக்டோபரில் ‘அன்லீஷ்டு’ நிகழ்வாக நடத்தியது ஆப்பிள். ஐபோனுக்கான அப்டேட்டைக் கொடுத்தாச்சு, ஐபேடுக்கான அப்டேட்டும் கொடுத்தாச்சு, ஆப்பிள் வாட்ச்சையும் அறிமுகம் பண்ணியாச்சு, வேற என்ன இருக்கு?.. மேக்புக், ஏர்பாட்ஸ் இரண்டும்தான். அந்த இரண்டுக்குமான அப்டேட்களோடு, சர்ப்ரைஸாக சிப்செட் அப்டேட்டையும் சேர்த்து, அக்டோபரின் அன்லீஷ்டு நிகழ்வில் கொடுத்தது ஆப்பிள். என்னென்ன அப்டேட்ஸ்? லிஸ்ட் போடலாம் வாங்க!

ஆப்பிளின் அடுத்த அப்டேட்ஸ்!
ஆப்பிளின் அடுத்த அப்டேட்ஸ்!

ஆப்பிள் சிப்செட்:

M1 Pro மற்றும் M1 Max என இரண்டு அப்டேட்டட் சிப்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அக்டோபர் நிகழ்வின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் இந்த சிப்செட்கள். ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தது புதிய சிப்செட்களுக்கு. ஆனால் ஆப்பிள் கொடுத்தது பழைய சிப்செட்களுக்கான அப்டேட். கொஞ்சம் ஏமாற்றம்தான்; இருந்தாலும் அப்டேட் செய்யப்பட்ட சிப்செட்கள் முந்தைய M1 சிப்பைவிட வேகத்திலும் சரி, பேட்டரி உபயோகத்திலும் சரி - மிகவும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

M1 சிப்பை விட புதிய M1 Pro மற்றும் M1 Max ஆகிய இரு சிப்புமே 70 சதவிகிதம் வேகமாகவும், 70 சதவிகிதம் குறைவான ஆற்றலையே பயன்படுத்தும் எனவும் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். M1-ஐ விட M1 Pro-வின் GPU பெர்ஃபாமன்ஸ் 2 மடங்கு அதிகமாகவும், M1 Max-ன் GPU பெர்ஃபாமன்ஸ் 4 மடங்கு அதிகமாகவும் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

மேக்புக்ஸ்:

மேற்கூறிய இரண்டு சிப்களையும் பயன்படுத்தி புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதுவரை 13 இன்ச் டிஸ்ப்ளே அளவில் மட்டுமே விற்பனையாகி வந்தது மேக்புக். அன்லீஷ்டு நிகழ்வில் புதிதாக 14 இன்ச் மற்றும் 16 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மேக்புக்குகளை அறிமுகம் செய்தது ஆப்பிள். புதிய சிப்கள் புதிய மேக்புக்குகளுக்கு மட்டுமே, பழைய 13 இன்ச் மேக்புக்குகளுக்கு புதிய சிப் கிடையாது. M1 Max சிப்செட் கொண்ட மேக்புக் வேண்டும் என்றால், அது 16 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்ட மேக்புக்குடன் மட்டுமே. புதிய சிப் மற்றும் அளவுகளைத் தாண்டி, புதிய மேக்புக்கின் மேலே சிறிய நாட்ச் ஒன்றையும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். ஐபோன்களே எப்போது நாட்ச் இல்லாமல் வெளியாகும் எனக் காத்துக் கொண்டிருக்க, மேக்கிலும் நாட்சைக் கொடுத்திருக்கிறது ஆப்பிள். ஆனால், முன்பக்க கேமார குவாலிட்டியை அதிகரித்திருக்கிறோம் எனக் கூறுவதால் நாட்சைப் பொறுத்துக் கொள்ளலாம்.

இதுவரை ஸ்பேஸ் கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்து வந்த ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களான ஹோம்பாட்ஸ் இனி மஞ்சள், ஆரஞ்சு மற்றும் நீல நிறத்திலும் கிடைக்கும்.

விலை: 9,900 ரூபாய்

மேக்புக் ப்ரோ

M1 Pro சிப்

8 Core CPU & 14 Core GPU

14 இன்ச்

512 GB ஸ்டோரேஜ்

விலை: 1,94,900 ரூபாய்

மேக்புக் ப்ரோ

M1 Pro சிப்

10 Core CPU & 16 Core GPU

14 இன்ச்

1 TB ஸ்டோரேஜ்

விலை: 2,39,900 ரூபாய்

மேக்புக் ப்ரோ

M1 Max சிப்

10 Core CPU & 32 Core GPU

16 இன்ச்

1 TB ஸ்டோரேஜ்

விலை: 3,29,900 ரூபாய்

மேற்கூறியவைகளில் ஸ்டோரேஜ் மற்றும் GPU-வை மட்டும் நம் தேவைக்கேற்ப கான்ஃபிகர் செய்து வாங்கிக் கொள்ளலாம். 14 Core, 16 Core, 24 Core மற்றும் 32 Core என GPU-வையும், 1 TB, 2 TB, 4 TB மற்றும் 8 TB என ஸ்டோரேஜ் அளவையும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

மற்ற அப்டேட்கள்:

அதிக பேட்டரி லைஃப் கொண்ட மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸை அக்டோபர் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். தொடர்ந்து ஆறு மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் 30 மணி நேரமும் இந்த ஏர்பாட்ஸைப் பயன்படுத்த முடியும்.

விலை: 18,500 ரூபாய்

ஆப்பிளின் அடுத்த அப்டேட்ஸ்!
ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களான ஹோம்பாட்ஸ்
ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களான ஹோம்பாட்ஸ்

இதுவரை ஸ்பேஸ் கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்து வந்த ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களான ஹோம்பாட்ஸ் இனி மஞ்சள், ஆரஞ்சு மற்றும் நீல நிறத்திலும் கிடைக்கும்.

விலை: 9,900 ரூபாய்

ஸ்பெஷல் அப்டேட்:

ஆப்பிள் அறிவித்த எல்லா அப்டேட்டையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஒரு புதிய பொருளை அறிமுகம் செய்தது ஆப்பிள். ஆப்பிள் சாதனங்கள் எல்லாம் எவ்வளவு ஸ்பெஷல் (இவ்வளவு அதிக விலைக்கு வாங்கினால் ஸ்பெஷலாகத்தானே இருக்க வேண்டும்) அதனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்காக ஆப்பிள் சாதனங்களைத் துடைப்பதற்கான ‘Polishing Cloth’-ஐ இந்த நிகழ்வில் அறிமுகம் செய்தது ஆப்பிள். அட நல்ல விஷயம்தானே என நினைக்கிறீர்களா?

அதன் விலை: 1,900 ரூபாய், இந்த விலை அதிகம் என நினைப்பவர்களுக்கு மாதம் 224 ரூபாயில் EMI ஆப்ஷன் வசதியும் இருக்கிறது. ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல ஆப்பிள்..!