Published:Updated:

ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

ப்ராசஸர்களின் ப்ராசஸ்
பிரீமியம் ஸ்டோரி
ப்ராசஸர்களின் ப்ராசஸ்

கேட்ஜெட்ஸ் 2

ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

கேட்ஜெட்ஸ் 2

Published:Updated:
ப்ராசஸர்களின் ப்ராசஸ்
பிரீமியம் ஸ்டோரி
ப்ராசஸர்களின் ப்ராசஸ்

ஒரு லேப்டாப் வாங்கப் போகிறோம் என்றால், எந்த கம்பெனி லேப்டாப் எனக் கேட்டுவிட்டு, அடுத்த கேள்வியாக என்ன ப்ராசஸர் ... இன்டெல்லா அல்லது AMDயா என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஏனெனில், ஒரு ப்ராசஸர் லேப்டாப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். ஸ்மார்ட் போன் வாங்கும்போதும் என்ன ப்ராசஸப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். ஸ்மார்ட் போனைப் பொருத்தவரை நாம் முதலில் கவனிப்பது கேமரா மற்றும் பேட்டரியைத்தான். ஆனால், இவற்றோடு ப்ராசஸரும் மிகவும் முக்கியம். கேமரா மற்றும் பேட்டரி பெர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருப்பதற்கு நல்ல ப்ராசஸரும் அவசியம். சரி; முதலில் என்னென்ன ஸ்மார்ட்போன் ப்ராசஸர்கள் இருக்கின்றன எனப் பார்த்து விடலாம்.

ஸ்மார்ட்போனைப் பொருத்தவரை இரண்டு நிறுவனங்கள்தான் உலகின் பல்வேறு மாடல் மொபைல்களுக்குமான சிப்செட்டை வழங்கி வருகின்றன (ஸ்மார்ட்போன் ப்ராசஸரை, SoC அல்லது சிப்செட் என்றும் அழைக்கலாம்). குவால்காம் மற்றும் மீடியாடெக் ஆகிய இருநிறுவனங்கள்தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சிப்செட்களைத் தயாரிக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர்த்து ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும் சொந்தமாக தங்களுடைய மொபைல்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக சிப்செட்டைத் தயாரித்துக் கொள்கின்றன.

குவால்காம்:

ஸ்மார்ட்போன் பயனர்களின் நம்பிக்கையைப் பெற்ற சிப்செட் பிராண்டு குவால்காம். குவால்காமின் ஸ்நாப்டிராகன் சிப்செட் என்றாலே நன்றாகத்தான் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது. சாம்சங் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பிரத்தியேக சிப்செட்களைத் தயாரித்துக் கொள்கின்றன எனக் கூறியிருந்தோம். ஆனால், இந்த நிறுவனங்களும் குவால்காமின் சிப்செட்டைத் தங்களுடைய மொபைல்களில் பயன்படுத்தியிருக்கின்றன.

2, 4, 6, 7 மற்றும் 8 என ஐந்து சீரிஸ் சிப்செட்களை வெளியிட்டிருக்கிறது குவால்காம். ஒவ்வொரு சீரிஸ் சிப்செட்டும் அதற்கென தனிப் பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த 2 சீரிஸ் சிப்செட்கள்தான் குவால்காமின் தொடக்கநிலை சிப்செட்கள். இவை மிகவும் விலை குறைந்த தொடக்கநிலை போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து வரும் 4 சீரிஸ் சிப்செட்டானது நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொண்ட மிட்ரேஞ்ச் ஸ்மார்ட் போன்களில் (12,000 முதல் 20,000 ரூபாய் விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள்) பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் 6 சீரிஸ், 7 சீரிஸ் மற்றும் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்கேற்ற தனிப்பட்ட பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டிருக்கும். 8 சீரிஸ் சிப்செட்கள்தான் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட சிப்செட்கள். அதிக விலை கொண்ட ப்ரீமியம் போன்களில் 8 சீரிஸ் சிப்செட்கள் பயன்படுத்தப்படும்.

ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

மீடியாடெக்:

ப்ரீமியமான வசதிகளை மிட்ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் போன்களில் கொடுப்பதுதான் மீடியாடெக்கின் ஸ்பெஷல். சாம்சங் மற்றும் கூகுள் போன்ற ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக்கின் சிப்செட்டை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்ச் செக்மென்ட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ரியல்மீ, போகோ உள்ளிட்ட பட்ஜெட்டில் ஹிட்டடித்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் இந்த மீடியாடெக் சிப்செட்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

குவால்காமைப்போல் அல்லாமல் பெயர்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்டு தங்களுடைய சிப்செட்டை அடையாளப் படுத்துகிறது மீடியாடெக். Helio A, Helio P, Helio X, Helio G மற்றும் Dimensity ஆகிய பெயர்களில் சிப்செட்களை வெளியிட்டிருக் கிறது மீடியாடெக். பெர்ஃபாமன்ஸ், கேமரா, கேமிங், பயன்பாட்டு அனுபவம் என மேற்கூறிய ஒவ்வொரு சிப்செட்டும் ஒவ்வொரு அம்சத்தில் சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடியது. இவற்றில் Dimensity சிப்செட்தான், மற்ற நிறுவனங்களின் ப்ளாக்ஷிப் மொபைல்களில் பயன்படுத்தப்படுகிறது.

சாம்சங் எக்ஸினோஸ் ப்ராசஸர்:

குவால்காமின் ஸ்நாப்டிராகன் சிப்செட்டைத் தவிர்த்து, எக்ஸினோஸ் என்ற பெயரில் தங்களுக்கென பிரத்தியேக சிப்செட்டையும் உருவாக்கி, தங்களுடைய மொபைல்களில் பயன்படுத்தி வருகிறது சாம்சங். எக்ஸினோஸ் ப்ராசஸரைப் பெரும்பாலும் தங்களுடைய மிட்ரேஞ்சு மற்றும் ப்ளாக்ஷிப் மொபைல்களிலேயே சாம்சங் பயன்படுத்தி வருகிறது.

ஆப்பிள் ப்ராசஸர்:

ஸ்மார்ட்போன் ராஜா என்றால் ஆப்பிள் தான்; ஸ்மார்ட்போன் சிப்களின் ராஜா என்றால் அதுவும் ஆப்பிளின் சிப்செட் தான். தொடக்கம் முதலே தங்களுடைய பிரத்தியேக சிப்செட்டையே ஆப்பிள் தங்களுடைய ஐபோன்களில் பயன்படுத்தி வருகிறது. A4, A5 என A சீரிஸ் சிப்செட்டை தங்களுடைய ஒவ்வொரு புதிய மொபைலிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். கடந்த ஆண்டு வெளியான ஆப்பிள் ஐபோன் 13-ல் தங்களுடைய புதிய சிப்செட்டான A15 Bionic சிப்செட்டைப் பயன்படுத்தியிருந்தது ஆப்பிள். அடுத்து வரும் ஐபோன் 14-க்கு A16 சிப்பையும் ஆப்பிள் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆப்பிளின் ஒவ்வொரு புதிய சிப்செட்டும் அதன் முந்தைய சிப்பை விட சிறப்பாகவும், அதிக பெர்ஃபாமன்ஸையும் கொண்டிருக்கும். கடந்த ஆண்டு வெளியாகியிருக்கும் A14 பயோனிக் சிப்தான் தற்போது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சிறந்த சிப்செட்டாக இருக்கிறது.

மற்ற நிறுவன ப்ராசஸர்கள்:

இவற்றைத் தவிர கூகுள் மற்றும் வாவே (Huawei) நிறுவனங்களும் தங்களுடைய பிரத்தியேக சிப்செட்டைத் தயாரித்துக் கொள்கின்றன. கடந்த ஆண்டு வெளியான பிக்ஸல் 6 மொபைலில்தான் முதன் முதலாக தங்களுடைய சொந்தத் தயாரிப்பான டென்சார் சிப்பை அறிமுகம் செய்தது கூகுள். வாவே நிறுவனமும் தங்களுடைய தயரிப்பான ‘கிரின்’ சிப்களையே தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகின்றன.

ப்ராசஸர்களின் ப்ராசஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism