லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! 14 - புது டிவி வாங்கப்போறீங்களா?

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

ஸ்மார்ட் டிவி என்றாலே அது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே இருக்கும் என்பது பொதுவான கருத்து.

இன்று எல்லோர் வீடுகளிலும் பெரும் பாலும் ஸ்மார்ட் டிவிதான். முன்பு டிவி வாங்கப்போனால், என்ன பிராண்டு, ஸ்க்ரீன் சைஸ் என்ன என்று மட்டுமே கேட்கப்படும். ஆனால், அவை டெக்னிக்கலாக அப்கிரேடு ஆன பின்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தும் அதிகம் ஆகிவிட்டது. அப்படித் தெரிந்து தான் வாங்குகிறோமா என்றால் கிடையாது. நல்ல ஸ்மார்ட் டிவி வாங்க என்னவெல்லாம் தெரிய வேண்டுமென்பதை இந்த அத்தியாயத் தில் பார்க்கலாம்.

என்ன ஆபரேட்டிங் சிஸ்டம்?

ஸ்மார்ட் டிவி என்றாலே அது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால், நிறைய ஆபரேட்டிங் சிஸ்டமில் ஸ்மார்ட் டிவிக்கள் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு தவிர்த்து முக்கியமான இயங்கு தளம், லினக்ஸ். லினக்ஸ் ஸ்மார்ட் டிவிக்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், ஹாட் ஸ்டார்போல சில ஓ.டி.டி-க்கள் இன்னும் லினக்ஸுக்குத் தங்கள் செயலியை வெளியிட வில்லை. எதிர்காலத்தில் வருவதும் சந்தேகம் தான்.

பிரவுசர் மூலம் சின்ன டெக்னிக் ஜிம்மிக் செய்து பார்க்கலாம் என்பார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமும் அல்ல. சிக்கல்களும் வரும். இப்போதைக்கு, எல்லா ஓ.டி.டி-களையும் பார்க்கக்கூடிய, விலை குறைந்த ஸ்மார்ட் டிவி என்றால் அது ஆண்ட்ராய்டுதான். எனவே, நீங்கள் வாங்கப் போகும் ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டுதானா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! 14 - புது டிவி வாங்கப்போறீங்களா?

திரை அளவு

விலை குறைவாகக் கிடைப்பதால் இப்போது பலரும் பெரிய திரை அளவு கொண்ட டிவிக்களை வாங்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் எங்கிருந்து அந்த டிவியைப் பார்க்கப் போகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். ஆங்கிலத்தில், Viewing distance என்பார்கள். அதுதான் சரியான திரையின் அளவை நிர்ணயிக்க உதவும். 55 இன்ச் டிவியை 5 அடி தூரத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கு சேதாரம் என்பது இருக்கட்டும். டிவியின் துல்லியமும் நமக்குச் சரியாகத் தெரியாது. எனவே உங்கள் அறையின் அளவைப்பொறுத்து அதற்கேற்ற ஸ்க்ரீன் சைஸ் கொண்ட டிவியைத் தேர்ந்தெடுக்கவும்.

சாதா டிவியை ஸ்மார்ட் ஆக மாற்றலாம்!

இப்போதிருக்கும் டிவியின் திரை, ஆடியோ எல்லாம் நன்றாக இருக்கிறதென்றால், விலை உயர்ந்த டிவி என்றால், அதை விற்று மாற்றாமல் அதையே ஸ்மார்ட் ஆக மாற்றலாம். அதற்கு ஆண்ட்ராய்டு டிவி ஸ்டிக்குகள் இருக்கின்றன. உங்கள் டிவியில் HDMI port இருந்தால் போதும். இந்த ஸ்டிக்குகள் வாங்கி, உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றிவிடலாம். 2000-3000 ரூபாயில் பல நல்ல டிவி ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. ஆனால், உங்கள் டிவியில் HDMI port இல்லையென்றால் இது உதவாது. கனெக்டர் வாங்கிக்கொள்ளலாம் என யாரேனும் டிப்ஸ் தந்தால் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அது ஒளியின் தரத்தைக் குறைப்பதோடு மாதம்தோறும் ஏதேனும் பிரச்னை தந்து கொண்டேயிருக்கும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! 14 - புது டிவி வாங்கப்போறீங்களா?
97

எத்தனை போர்ட்?

இது மிக மிக முக்கியம். ஸ்மார்ட் டிவி என்றாலும், அதனுடன் இணைத்துப் பயன் படுத்த ப்ளே ஸ்டேஷன் தொடங்கி பல கேட்ஜெட்கள் இருக்கின்றன. இப்போது அவை உங்கள் வீட்டில் இல்லாமல் போனாலும் எதிர்காலத்தில் வாங்கலாம். அப்போது HDMI port பற்றாக் குறை வரும். ஒவ்வொரு முறையும் கழற்றி மாட்ட வேண்டி வரலாம். இதைத் தவிர்க்க குறைந்தது 3 HDMI port இருக்கும் டிவிக்களைத் தேர்ந்தெடுங்கள்.

இவை தவிர, எத்தனை வாட்ஸ் ஸ்பீக்கர் இருக்கிறது, full HDதானா, நல்ல பிராண்டு தானா எனப் பல விஷயங் களைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் சிறப்பு விற்பனையில் அதன் விலை குறைகிறதா என்பதையும் கவனித்து ஆர்டர் செய்யுங் கள். டிவிக்கள்தான் சிறப்பு விற்பனையில் விலை குறைக் கப்படும் முக்கியமான கேட் ஜெட்.