என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 11 - சிங்கம் சிங்கிளா இருந்தாதான் சிக்னல் ஸ்ட்ராங்கா இருக்கும்!

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

உங்கள் வீட்டில் வைஃபை ரெளட்டர் எங்கிருக்கிறது என்பதுதான். பாஸ்வேர்டை மறைத்து வைக்கலாம்.

முன்னர் கணினிக்கு மட்டும் தேவைப்பட்ட இணையம் இப்போது மொபைல், லேப்டாப், டிவி, வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹோம் தியேட்டர், ஃப்ரிட்ஜ் என ஏகப்பட்ட விஷயங்களுக்குத் தேவைப்படுகிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் காலத்தில் அவர்கள் வீட்டு இணையம் படுத்துவிட்டால் ‘கொஞ்சம் காபி பொடி தர்றீங்களா’ என அக்கம்பக்கத்தில் கேட்பதுபோல, பாஸ்வேர்டைக்கூட கடன் கேட்கிறார்கள். அப்படியென்றால், நம் இணையம் நல்ல வேகத்தில் இருக்க வேண்டும் இல்லையா? அது எப்படி எனப் பார்க்கலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 11 - சிங்கம் சிங்கிளா இருந்தாதான் சிக்னல் ஸ்ட்ராங்கா இருக்கும்!

முதல் விஷயம். உங்கள் வீட்டில் வைஃபை ரெளட்டர் எங்கிருக்கிறது என்பதுதான். பாஸ்வேர்டை மறைத்து வைக்கலாம். ஆனால், ரெளட்டரையே மறைத்து வைத்தால் சிக்னல் வீக் ஆகி, இணையம் மெதுவாகத்தான் வரும். முடிந்தவரை, உயரமான இடத்தில், வீட்டுக்கு நடுவில் வைப்பது நல்ல வேகம் தரும்.

பெரிய வீடு என்றால் ‘Wifi extender’ போன்ற துணை கேட்ஜெட்களை வாங்கி சிக்னல் வரும் ஏரியாவை அதிகப்படுத்தலாம். அல்லது அலுமினியம் ஃபாயிலை ரெளட்டரின் பின்புறத்தில் வைத்தும் முயற்சி செய்யலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 11 - சிங்கம் சிங்கிளா இருந்தாதான் சிக்னல் ஸ்ட்ராங்கா இருக்கும்!

நண்பர்கள் யாருக்காவது பாஸ்வேர்டு கொடுத்திருந்தால் அவர்கள் பயன்படுத்தி முடித்த பின் பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள். மாதம் ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது. கொஞ்சம் வேலைதான். ஆனால், நல்லது. மைக்ரோவேவ் ஓவன், கார்டுலெஸ் போன் போன்றவற்றை ரெளட்டருக்குப் பக்கத்தில் வைக்கக் கூடாது. சிங்கம் சிங்கிளா இருந்தாதான் சிக்னல் ஸ்ட்ராங்கா இருக்கும்.

ரெளட்டர் வாங்கி எத்தனை நாள்கள் ஆகின்றன? ரொம்ப பழைய ரெளட்டர் என்றால் அதன் அதிகபட்ச வேகம் உங்கள் வீட்டுக்கு வரும் இணையத்தின் வேகத்தைவிட குறைவாக இருக்க வாய்ப்புண்டு. அதே போல, மொபைலுக்கு அவ்வப்போது வரும் சாஃப்ட்வேர் அப்டேட் போல ரெளட்டருக்கும் உண்டு. அதையும் அப்டேட் செய்துவிடவும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 11 - சிங்கம் சிங்கிளா இருந்தாதான் சிக்னல் ஸ்ட்ராங்கா இருக்கும்!

பெரும்பாலான வீடுகளில் ரெளட்டர்களும் நம் அம்மா போலதான். 24X7 அதற்கு நாம் ஓய்வு கொடுப்பதே யில்லை. இணையம் பயன்படுத்தாவிட்டாலும் ரெளட்டரை அணைப்பதில்லை. எப்போதாவது வீட்டில் யாருமில்லாதபோது, ரெளட்டரை அணைத்து ஓய்வு கொடுக்கவும். ஓய்வே இல்லா விட்டாலும் அம்மா போல அதுவும் ஓடும். இருந்தாலும் ஓய்வு தருவது நல்லது.

எந்த மொபைல் அதிக இணையத்தை எடுக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு மொபைலிலும் இதற்காக வசதி உண்டு. மொபைலிலிருக்கும் செயலிகளில் ஏதாவது அதிக இணையத்தை எடுப்பதாகத் தெரிந்தால், அதை அன்இன்ஸ்டால் செய்யலாம். டேட்டா நிறைய இருக்கிறதே என்பவர்களும் வேகத்துக்காக இதைச் செய்ய வேண்டும்.

அலுவலகங்கள் மட்டும் பெரிய வீடுகளுக்கு ரிப்பீட்டர்கள் போதவில்லை என்றால் ‘மெஷ்' (Mesh) பயன்படுத்தலாம். இது இணைய கவரேஜ் ஏரியாவை அதிகரிக்க உதவுவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட இணைய இணைப்பு இருந்தால் அதைச் சிறப்பாகக் கையாளவும் உதவும். ஆனால், விலையும் வசதியைப் போல அதிகம்.